google-site-verification: googled5cb964f606e7b2f.html இயற்கை முறையில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்திடும் வழிமுறைகள்... ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 13 நவம்பர், 2023

இயற்கை முறையில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்திடும் வழிமுறைகள்...



1.நன்கு வாடை தரக்கூடிய கோழி குடல்கள் அல்லது மீன் இறைச்சிகளின் மிச்சங்களை பொடி பொடியாக நறுக்கப்பட்ட தலைமுடிகளுடன் கலந்து ஆங்காங்கே வயலில் வைப்பதால் பன்றிகள் தனது மூக்கினால் முண்டும் பொழுது தலைமுடி துகள்கள் மூக்கில் சிக்கிக் கொண்டால் அதன் தொல்லை காரணமாக மீண்டும் அந்த வயலுக்கு வராது.


2.நாட்டுப் பன்றிகளின் சாணத்தை வரப்போறமாக ஆங்காங்கே இடுவதால் இதன் துர்நாற்றம் காட்டு பன்றிகளை தடுத்து நிறுத்தும். இதன் நாற்றம் வேறு ஒரு பன்றிகளின் கூட்டம் இங்கு இருப்பதால் அதன் பகுதிகளில் நாம் செல்வது தேவையில்லாமல் சண்டை ஏற்படும் என்று நினைப்பதால் அவைகள் அந்த வயலுக்கு வராது.


3.இதேபோன்று நாட்டு பன்றிகளின் சாணங்களை காய வைத்து ஒரு சட்டியில் இட்டு இரவு நேரத்தில் புகை மூட்டுவதால் அதன் துர்நாற்றத்திற்கு காட்டு பன்றிகள் நிலத்தை அண்டாது.


4.போதுமான அளவு சல்பர் மற்றும் நாட்டு பன்றியின் கொழுப்பு எண்ணெய் ஆகியவற்றை நீரில் நன்கு கலந்து விட வேண்டும் பின்னர் அதில் தென்னை நார் கயிற்றை 40-60 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இந்த கயிற்றை வயலை சுற்றி மூன்று முதல் ஐந்து அடுக்காக கட்டி விடுவதால் இதிலிருந்து வெளிவரும் துர்நாற்றம் காட்டுப் பன்றிகளை வயலில் நெருங்காமல்  பார்த்துக் கொள்ளும். பத்து நாட்களுக்கு ஒரு முறை நார் கயிற்றை மேலே சொன்ன கரைசலில் ஊற வைத்து மீண்டும் கட்ட வேண்டும். இந்த முறை மூலம் சுமார் 75 லிருந்து 80% வரை காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தலாம்.


5.பருத்தியாலான நாடா அல்லது துணியை இரண்டு மணி நேரம் மண்ணெண்ணையில் ஊற வைத்து பின்பு துணியை சற்று காயவைத்து அதனை வயலை சுற்றி 3-5 அடுக்குகளாக கட்டி விட வேண்டும். இது எளிதில் தீப்பற்றக் கூடியதால் இந்த முறை ஆபத்தானது ஆகும். இருப்பினும் ஆந்திர மாநிலத்தில் ஒரு சில இடங்களில் இந்த முறையை பயன்படுத்துகிறார்கள் இதன் மூலம் 60% வரை காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தலாம்.


6. பயன்படுத்தப்பட்ட பிரகாசமான வெவ்வேறு நிறம் கொண்ட சேலைகளை வயலை சுற்றி கட்டுவதால் இங்கு மனித நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது என நினைத்துக் கொண்டு காட்டுப்பன்றிகள் வயலை நெருங்குவதில்லை. இது 50% வரை மட்டுமே பயனளிக்கும்.


7. வனப்பகுதியில் வயல் உள்ள விவசாயிகள் நிலையாக காட்டுப் பன்றிகளின் சேதத்தை தவிர்த்திட வயலை சுற்றி ஒன்று முதல் ஒன்றரை மீட்டர் அளவில் பயனுள்ள அல்லது பயனற்ற முள் செடிகளை மிக மிக நெருக்கமாக நடவு செய்துவிட்டால் காட்டு பன்றிகளின் தொல்லை எப்பொழுதுமே இருக்காது.


8.இதைத் தவிர இரவு நேரங்களில் தீ மூட்டுதல்,  வெடி வெடித்தல், வேட்டையாட கூடிய ரக நாய்களை வளர்த்தல், ஒலிபெருக்கி மூலம் சத்தம் ஏற்படுத்துதல் என பல முறைகள் உள்ளன.


9.நைலான் வலைகள் வயலை சுற்றி தரை மட்டத்திலிருந்து குறைந்தது ஒரு மீட்டர் உயரத்திற்கு இரும்பு அல்லது குச்சிகளைக் கொண்டு பொருத்த வேண்டும்.


10.காட்டுப் பன்றிகளின் உயிரை சேதப்படுத்தாத அளவிற்கு உண்டான மின்சார வேலிகளை அமைக்கலாம். ஆனால் இது மனிதர்களுக்கு உகந்தது அல்ல. இல்லையெனில் முள்வேலி/சுற்றுச்சுவர் etc...அமைக்கலாம்.


11.சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் வாசனை கொண்டே காட்டுப்பன்றிகள் பயிர்களை தேடி வருகிறது. அதனை தவிர்த்திட 4-5 வரிசை ஆமணக்கு செடிகளை மிக மிக நெருங்கிய நடவு செய்வதால் இதிலிருந்து வெளிவரும் வாசனை முக்கிய பயிர்களில் இருந்து வெளிவரும் வாசனையை மட்டுப்படுத்தி காட்டுப்பன்றிகள் பயிர்களை தேடி வருவதை தவிர்க்கலாம். இதன் மூலம் 80 லிருந்து 90 சதவீதம் பயனுள்ளது என பல்வேறு ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


12. பத்து லிட்டர் தண்ணீருக்கு மூன்று முட்டைகளை நன்கு கலந்து வயலைச் சுற்றி ஒரு மீட்டர் அகலத்திற்கு தெளிக்க வேண்டும் இதிலிருந்து வெளிவரும் துர்நாற்றம் கட்டுப் பன்றிகளுக்கு உகந்தது அல்ல. இதனை 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் 75 சதவீதம் வரை பலன் இருக்கும்.


13. நன்கு வாடை தரக்கூடிய குருணை மருந்துகளை வயலை சுற்றி அங்கங்கே இடுவதாலும் ஓரளவிற்கு காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தலாம்.


முக்கிய குறிப்பு: எந்த ஒரு முறையிலும் காட்டு விலங்குகளை சேதப்படுத்துவது தண்டனைக்குரியது.

பயனுள்ள வேளாண் தகவல்களைப் பெற கீழ்காணும் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts