நெற்பயிரில் ஆனைக் கொம்பன் ஈ தாக்குதல் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|எப்போது தாக்குதல் காணப்படும்...
1. மழைச்சாரல் அல்லது மேக மூட்டமான தட்பவெப்ப சூழ்நிலை நிலவும் போது
2. அடர் நடவு மேற்கொள்ளும் போதும்
3. அதிக தூர் விடும் ரகங்களை நடவு செய்யும் போதும்
4. அதிகமான தழைச்சத்து உர பயன்பாட்டினாலும்.
5. பயிர்களை ஆழமாக நடவு செய்யும்போது
பூச்சியின் வாழ்க்கை சுழற்சி...
முட்டைகள்-வெள்ளை முதல் வெளிர் சிகப்பு நிற முட்டைகள் இலையின் அடி புறத்தில் பரவலாக காணப்படும்.
இளம் புழுக்கள்: வெளிர் சிகப்பு புழுக்கள் தண்டுப் பகுதியை துளைத்து உண்ணும். இதன் வாழ்நாள் எட்டு முதல் பத்து நாட்களாகும்.
கூட்டுப் புழுக்கள்: தண்டு பகுதியில் உருவாக்கப்படும் வீக்கத்தில் காணப்படும்.
ஈக்கள்: வெளிர் மஞ்சள் நிறம் உடைய ஈக்கள் கொசுக்கள் போன்ற உருவமைப்பை பெற்றிருக்கும்.
தாக்குதலின் அறிகுறிகள்:
1. இளம் புழுக்கள் தண்டுப் புழுக்களை துளைத்து அதன் உட்புற திசுக்களை உண்பதால். உற்று நோக்கும்போது தண்டுகளில் அதன் காயம் மற்றும் எச்சங்கள் தென்படும்.
2. இதனால் இலைகள் வெளிர் வெள்ளை நிறத்திலும் அதன் உருவமைப்பு பார்ப்பதற்கு வெங்காய இலை போன்றும் காணப்படும். இதனை வெள்ளி தண்டு என்பார்கள்.
3. நாளடைவில் இந்த இலைகள் உருவமற்று சிதைந்து காய்ந்து விடும். இதனால் பார்ப்பதற்கு தண்டுப்புழு பாதிப்பு போன்று கூட தெரியும்.
4. பாதிப்படைந்த செடிகளில் தூர்களின் வளர்ச்சி குன்றியும் இதில் மனிகதிர்கள் வராமலும் தென்படும்.
5. இதனால் 30-40 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படும்.
எவ்வாறு கட்டுப்படுத்தலாம்??
1. தொடர்ச்சியாக நெற்பயிரை ஒரே வயலில் சாகுபடி செய்வதை தவிர்க்கவும் இல்லை என்றால் முந்தைய பயிர்களின் மீதங்கள் நிலத்தில் ஆழமாக போகும் படி உழவு செய்ய வேண்டும்.
2. பருவம் தொடங்குவதற்கு முன்னரே பயிர் நடவு மேற்கொள்ளலாம்.
3. வரப்புகளில் ஈக்களை கவரக்கூடிய சாமந்தி போன்ற பூக்களை நடலாம். மேலும் இது ஒட்டுண்ணி சிலந்திகள் மற்றும் வண்டுகளை கவர்வதால் இயற்கை முறையில் கட்டுப்படுத்த இவைகள் உதவும்.
4. உழவின் போது ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவது உகந்தது.
5. போதுமான இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும் அல்லது சாலை நடவு மேற்கொள்ளலாம்.
6. இந்த வகை ஈ தாக்குதலை தாங்கி வளரக்கூடிய ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.
7. நீர் பாய்ச்சிதலை முறைப்படுத்தலாம். அதாவது தாக்குதல் இருப்பின் ஒரு வார காலம் நீர் பாய்ச்சாமல் விட்டுவிட்டு பின்னர் வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமாக நீர் பாய்ச்ச வேண்டும்.
8. வரப்பு மற்றும் வயலை சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்.
9. தழைச்சத்து உரத்தினை குறைத்து சாம்பல் சத்து உரம் அதிகமாக இட வேண்டும்.
10. ஒரே சமயத்தில் மொத்த வயல்களையும் நடவு செய்வது உகந்தது ஏனெனில் ஒரே நாட்களுடைய வயலில் தாக்குதல் சற்று குறைவாக காணப்படும். வயல்களில் வெவ்வேறு நாளுடைய பயிர்கள் காணப்பட்டால் தொடர்ச்சியாக தாக்குதல் காணப்படும்.
11. இந்த வகை ஈக்கள் மாலை நேரத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவதால் விளக்கு பொறி / கவர்ச்சி பொறியை மற்றும் மஞ்சள் ஒட்டு பொறியை பயன்படுத்தி கவர்ந்து அழிக்கலாம்.
12. தீவிரமாக பாதிக்கப்பட்ட பயிர்களை பிடுங்கி அழிக்கலாம்.
13. இயற்கை முறையில் கட்டுப்படுத்த மெட்டாரைசியம் அல்லது பேவெரியா பேசியான அல்லது வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் அல்லது மீன் அமிலம் போன்றவற்றை தெளிக்கலாம்.
14. இல்லையெனில் கீழ்க்கண்ட மருந்துகள் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.
Fibronil - 2.5 ml per lit water
Thiamethoxam - 1 g per lit water
Lambda cyhalothrin-1-1.5 ml per lit water
Fibronil - 3 kg per acre
Quinalphose- 1 ml per lit water
Spinosad - 0.5 ml per lit water
Flubendamide - 0.3ml per lit water
0 Comments:
கருத்துரையிடுக