செலவில்லாமல் மக்கிய உரம் தயாரிப்பது எப்படி
|முன்னுரை:
பல்வேறு முறைகளில் மட்கு எனப்படும் கம்போஸ்ட் தயார் செய்யலாம் என நாம் அறிந்ததே இருப்பினும் செலவு இன்றி நமது வயலில் மட்கு எனப்படும் கம்போஸ்ட் தயார் செய்து பற்றி பார்ப்போம்.
1. நமது வயதில் சற்று நிழல் இருக்கக்கூடிய இடத்தில் 1.5 மீட்டர் அகலம் 1 மீட்டர் ஆழம் மற்றும் தேவையான அளவு நீளம் கொண்ட குழியை தயார் செய்ய வேண்டும்.
2. குழியின் அடிப்பாகத்தில் நமது தோட்டத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கழிவுகளை சுமார் ஒரு அடி உயரத்திற்கு போட வேண்டும்.
3. இதற்கு மேல் 10 கிலோ சாணம் மற்றும் 10 கிலோ மாட்டு சிறுநீர் ஆகியவற்றை கலந்து இதன் மேல் பரவலாக ஊற்ற வேண்டும்.
4. இதற்கு மேல் பரவலாக பாஸ்பேட் உரத்தினை அல்லது அடுப்பு சாம்பல்களை தெளிக்க வேண்டும்.
5. இவ்வாறு ஒவ்வொரு அடுக்காக ஒன்றின் மீது ஒன்றாக தரை மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரம் வரை அடுக்க வேண்டும்.
6. பின்னர் இந்த அமைப்பானது களிமண் கொண்டு முழுவதுமாக பூசி விட வேண்டும்.
7. சுமார் இரண்டு முதல் இரண்டரை மாதங்கள் கழித்து மேலே பூசப்பட்ட களிமண்ணை நீக்கி மட்கை நன்றாக கிளறி விட்டு இதனை எடுத்து நிழற்பாங்கான இடத்தில் 45 நாட்கள் உலர வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.
இதன் நன்மைகள்:
1. முழுவதும் செலவினம் இன்றி தயார் செய்யப்படுகிறது.
2. நமது பண்ணையில் கிடைக்கும் கழிவுகளை கொண்டு தரமான கம்போஸ்டை தயார் செய்யலாம்.
3. இவர் செய்வதால் நம் பண்ணையில் இருக்கும் கழிவுகள் அகற்றப்பட்டு பண்ணை சுத்தமாக காணப்படும்.
4. இவ்வாறு காற்றுள்ள மற்றும் காற்றற்ற நிலையில் மட்கு தயார் செய்வதால் நுண்ணுயிரிகளின் பெருக்கம் அதிகமாக காணப்படுவதுடன் காற்றுள்ள மற்றும் காற்றற்ற நிலையில் வாழும் உயிரிகளின் பெருக்கும் அதிகம் ஆகிறது.
5. இந்த நுண்ணுயிரிகள் மண்ணில் இடும்போது செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்து தெரிகிறது மற்றும் வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.
6. மண்ணின் இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகள் மாற்றமடைந்து அதன் கார அமிலத்தன்மை சமன் செய்யப்படுகிறது.
இது போன்று இதனால் எண்ணற்ற பயன்கள் உள்ளன.
0 Comments:
கருத்துரையிடுக