தென்னை சாகுபடியில் பருவ மழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...
|தென்னை சாகுபடியில் பருவ மழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...
பருவமழை காலங்கள் பொதுவாக பயிர் வளர்ச்சிக்கு சாதகமாகவே திகழ்கின்ற மேலும் நிலத்தடி நீரை மேம்படுத்துகிறது. இருப்பினும் அளவுக்கு அதிகமான மழை, நீர்த்தேக்கம், காற்று, தொடர்ச்சியான மண் ஈரப்பதம் ஆகியவை பயிர் வளர்ச்சியை பாதிப்பதுடன் பூச்சி நோய் தாக்குதலை ஊக்கப்படுத்தும். அதற்கு உதாரணமே"தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம்" என்ற பழமொழி ஆகும்.
தென்னை போன்ற பல்லாண்டு பயிர்களில் பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது சால சிறந்தது.
- வடிகால் வசதியை சீரமைத்து நீர் தேங்குவதை தவிர்க்கவும்.
- தென்னை மரத்தின் அடித்தண்டு பகுதியில் அதாவது கழுத்துப் பகுதியில் கண்டிப்பாக நீர் தேங்கா கூடாது.
- எனவே அடித்தண்டு பகுதியில் மிதமான அளவில் மண் அணைப்பது உகந்தது.
- தொடர்ச்சியாக நீர் தேங்குவதால் ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறி மற்றும் வேர் சார்ந்த அழுகல் நோய் ஏற்படலாம் இதன் மூலம் பெரிய அளவில் மகசூல் இழப்பீடு ஏற்படும்.
- வட்டப்பாதையில் மூடாக்கு அமைத்து கிடைக்கப்பெறும் நீரை நிலத்தடியில் சேமிக்கலாம்.
- மூடாக்கிற்கு காய்ந்த மட்டைகள், தூளாக்கப்பட்டு மக்க வைத்த மட்டை தூள்கள், தேங்காய் மட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதன் மூலம் மண்ணின் அரிப்பை தடுக்கலாம்.
- நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் இடலாம். இது நீர் பிடிப்பு திறனை மேம்படுத்தும்.
- பருவமழை காலங்களில் ரசாயன உரங்கள் இடுவதை தவிர்க்கலாம். ஏனெனில் ரசாயன உரங்கள் எளிதில் கரைந்து வேர்களுக்கு கிடைக்காத வண்ணம் ஆழமாக செல்லலாம்.
- அல்லது அதிக மழைப்பொழிவு காரணமாக வயலில் இருந்து வெளியே அடித்து செல்ல வாய்ப்புகள் உள்ளன.
- ரசாயன உரம் இட முன் பருவ அல்லது பின் பருவ மழை காலங்களை மிக நேர்த்தியாக பயன்படுத்தலாம். இந்த நேரங்களில் நமக்கு தேவையான மண் ஈரப்பதம் இருக்கும்
- பருவமழை காலங்களில் நல்ல ஈரப்பதம் இருப்பதால் உயிர் உரங்கள் அதிக அளவு பயன்படுத்தலாம் இது மண்ணில் பல்கி பெருகும்.
- பருவமழை முடிந்த பிறகு மண்ணின் கார அமிலத்தன்மையை ஆய்வு செய்து அதனை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் அதிக மழை பெய்தால் ஊட்டச்சத்துக்கள் கரைந்து வெளியேறும் இதனால் அமில காரத் தன்மையில் கண்டிப்பாக மாற்றம் காணப்படலாம்.
- இளம் தென்னங்கன்றுகள் மற்றும் பராமரிப்பு இல்லாத தென்னந்தோப்புகளில் குருத்தழுகல் நோய் ஏற்பட அதிகமாக வாய்ப்பு உள்ளது அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும்.
- பருவமழை காலங்களில் மரத்திற்கு அருகாமையில் ஆழமாக உழவு செய்வதை தவிர்க்கலாம். இது வேர்களை காயப்படுத்தும் இதனால் நோய் தாக்குதல் மிக எளிதில் ஏற்படலாம்.
- மேலும் இதன் காரணமாக வேர்கள் மண்ணை இறுக்கமாக பிடித்து கொண்டிருக்கும் சூழல் குறையும். இது போன்ற நேரங்களில் அதிக காற்று அடித்தால் மரங்கள் சாய் வாய்ப்புள்ளது.
- தண்டு மற்றும் அடித்தண்டு பகுதியில் தொடர்ச்சியாக ஈரப்பதம் காணப்பட்டால் பூஞ்சை மற்றும் பாசி வளர்வதை காண இயலும். அவ்வாறு தென்பட்டால் உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு சுண்ணாம்பு அடித்து விடவும்.
- காய்ந்த நிலையில் இருக்கும் அடி இலைகளை மரத்தின் தண்டு பகுதியில் இருந்து இரண்டு அடி தள்ளி வெட்டி அப்புறப்படுத்தலாம்.
- மரத்தின் கொண்டைப் பகுதியில் காணப்படும் பன்னாடை, காய்ந்த மட்டைகள் மற்றும் குரும்பைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தலாம். ஏனெனில் இது குருத்துப் பகுதியில் நோய் தாக்குதல் அல்லது பூச்சி தாக்குதலை ஊக்கப்படுத்தலாம்.
- தோப்பில் காணப்படும் மட்டைகளை சேகரித்து வரப்பில் அடுக்கி வைக்க வேண்டும். மழை நேரங்களில் உதிர்ந்த மட்டைகள் நிலத்தில் அழுகினால் நோய் மற்றும் வண்டு தாக்குதல் வர வாய்ப்புள்ளது.
- ஆனா வரி தோப்புகளில் ஆங்காங்கே சிறு சிறு குழிகளை வெட்டி மழை நீரை சேகரித்து நீர்மட்டத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம்.
- வானிலை அறிக்கையை பின்பற்றி அதற்கு ஏற்றவாறு அறுவடை பணியை செய்ய வேண்டும். அதிக காற்று அல்லது மழை பெய்யக்கூடும் என கருதப்படும் நேரத்தில் மரம் ஏறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- மரங்களுக்கு காப்பீடு செய்து வைப்பது மிக மிக சிறந்தது.
- வட்டப்பாத்திகளுக்கு இடைப்பட்ட பகுதியில் கிடைக்க பெறும் மழை நீரை பயன்படுத்தி பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்து மடக்கி உழவு செய்யலாம். இது மண் வளத்தை மேம்படுத்தும்.
- தஞ்சாவூர் வாடல், வேர் வாடல் மற்றும் அழுகல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதன் அறிகுறிகளை தொடர்ச்சியாக கண்காணிக்கவும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy
0 Comments:
கருத்துரையிடுக