google-site-verification: googled5cb964f606e7b2f.html ஜூன் 2025 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 27 ஜூன், 2025

தக்காளியில் பாக்டீரியா வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை: 

  • தக்காளி சாகுபடி பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் குறிப்பிட்ட சில நோய் மற்றும் பூச்சி தாக்குதல்கள் மிக கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கும். அதில் முக்கியமான நோயாக பாக்டீரியா வாடல் நோய் திகழ்கிறது.
  • தக்காளி மட்டுமின்றி கத்தரி, மிளகாய், வாழை, மஞ்சள் மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
  • மண், முந்தைய பயிர் கழிவு எச்சங்கள் மற்றும் இதர பயிர்களின் வேர்களில் நீண்ட நாட்கள் வாழும் திறனுடையதால் இதனை கட்டுப்படுத்துவது சற்று சவாலானதாகவே திகழ்கிறது. இந்த நோய் தாக்கதலால் சுமார் 30 முதல் 70% வரை மகசூல் இழப்பீடு ஏற்படும் அபாயம் உள்ளது.
  • மண்ணில் வாழக்கூடிய இந்த பாக்டீரியாக்கள்,  வேர்ப்பகுதியில் ஏற்படும் சிறிய காயங்கள் வழியாக உள்ளே சென்று ஊட்டச்சத்து மற்றும் நீர் கடத்தும் திசுக்களை அடைப்பதால் பயிர்களில் அறிகுறிகள் தோன்றும். 

நோயின் அறிகுறிகள்: 

  • வேர் மற்றும் அடித்தண்டு பகுதிகளில் நிற மாற்றம் காணப்படும். வேர் வழியாக வாஸ்குலர் திசுக்களில் உட்புகுந்து ஊட்டச்சத்து மற்றும் நீர் கடத்தும் திறனை படிப்படியாக குறைக்கும். இதனால் இளம் இலைகள் சற்று வாடியது போன்று காட்சியளிக்கும்.
  • சாதகமான சூழ்நிலையின் பொழுது பயிரில் காணப்படும் மொத்த இலைகளும் வாடியது போன்று காட்சி அளிக்கும்.
  • இலையில் எந்தவித நிற மாற்றமும் காணப்படாது இருப்பினும் பயிர்கள் திடீரென இருந்து விடும். பாதிக்கப்பட்ட செடியின் தண்டு பகுதிகளை பிளந்து பார்த்தல் அதில் பழுப்பு நிறம் மாற்றத்தை காண இயலும்.
  • சில நேரங்களில் வேர்கள் மற்றும் அடித்தண்டு பகுதியில் அழுகல் அறிகுறி காணப்படலாம். தண்டுப் பகுதியை வெட்டி தண்ணீரில் வைத்தால் பாக்டீரியாக்களின் கசிவை தண்ணீரில் பார்க்கலாம்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • ஒரே வயலில் மீண்டும் மீண்டும் தக்காளி அல்லது இதன் குடும்பத்தை சார்ந்த இதர பயிர்களை சாகுபடி செய்வதை தவிர்க்கவும். முந்தைய பயிர் கழிவுகளின் எச்சங்கள் வயதில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும்.
  • தொழு உரத்துடன் சூடோமோனஸ் மற்றும் பேசில்லஸ் தேவையான அளவு கலந்து ஊட்ட மேற்றி இட வேண்டும்.
  • இந்த நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் அல்லது தாங்கி வளரும் திறன் உடைய ரகங்களை தேர்வு செய்யவும்.
  • தரமான நாற்றுகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். போதுமான அளவு இடைவெளி விட்டு நடவு செய்வதன் மூலம் நோய் தாக்குதலுக்கு காரணமான சூழ்நிலையை தவிர்க்கலாம்.
  • வாய்க்கால் வழி நீர் பாசனத்தை தவிர்த்து சொட்டுநீர் பாசனம் பயன்படுத்தலாம்.நோய் தாக்குதல் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வர வேண்டும் தாக்குதல் தென்பட்டால் உடனடியாக அந்த பயிரை அகற்ற வேண்டும்.
  • நோய் தாக்குதலை தவிர்க்க அல்லது கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற அளவில் ஊற்ற வேண்டும்.
  • சூடோமோனஸ் புளோரசன்ஸ்- 100 மில்லி, பேசில்லஸ் சப்டிலிஸ் - 100 மில்லி, Copper oxy chloride - 25 கிராம், Copper hydroxide - 20 கிராம், Streptomycin+ Tetracycline - 6 கிராம்

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன் பெறவும். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX



மண்ணின் அமிலத்தன்மை எவ்வாறு பயிர் விளைச்சலை பாதிக்கிறது

மண்ணின் அமிலத்தன்மை எவ்வாறு பயிர் விளைச்சலை பாதிக்கிறது:

  • பொதுவாக மண்ணின் கார அமிலத்தன்மை பயிர்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை நிர்ணயம் செய்கிறீர்கள்.
  • அதிக கார அல்லது அமிலத்தன்மை நிறைந்த மண்ணில் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் பயிர்களுக்கு ஏற்ற வடிவிலும் எளிதில் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
  • மண்ணின் அமில காரத் தன்மை 5.5 முதல் 7.5- 8 வரை இருக்கக்கூடிய மண்ணில் பெரும்பான்மையாக முதன் நிலை, இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்கள்  மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கும் வடிவில் இருக்கும்.
  • மண்ணின் அமில கார தன்மையை தவிர, மண்ணின் இறுக தன்மை, நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை, கரிம கார்பன் அளவு, மண் ஈரப்பதம் போன்ற பல்வேறு காரணிகள் ஊட்டச்சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்கும் அளவை உறுதி செய்கிறது. 
  • மண்ணின் அமிலத்தன்மை அதிகரிக்க அதிகரிக்க மண்ணில் இருக்கும் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகளின் பெருக்கம் அதிகரிக்கும்.
  • இந்த நுண்ணுயிரிகள் நன்மை செய்யும் நுண்ணியகளுடன் போட்டி போட்டு இதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தண்ணீர் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். 
  • நாளடைவில் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை மேம்பட்டு காணப்படுவதால் எளிதாக பயிர்களில் நோய் தாக்குதல் காணப்படுவதுடன் மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு ஏற்றவாறு மாற்றித் தர போதுமான நுண்ணுயிரிகள் இல்லாமல் இருக்கும். 
  • இதனால் எளிதில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் தாக்குதலை காண இயலும். 
  • இது மட்டும் இன்றி, மண்ணின் அமிலத்தின் மேல் எளிதாக கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் சில நுண்ணூட்ட சத்துக்களை பயிர்கள் எடுத்துக்கொள்ள இயலாத வடிவில் மாற்றி மண்ணில் நிலை நிறுத்தி வைத்து விடும். இந்த ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு ஏற்ற வடிவில் மாற்ற நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • மிக முக்கியமான நோய்கள் அதிக அமிலத்தன்மை உடைய மண்ணில் வரக்கூடியது - வேர் அழுகல், கழுத்து அழுகல், வாடல் நோய் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் மூலம் ஏற்படக்கூடியது மற்றும் இதர. இது போன்ற சூழ்நிலையில் நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையில் மிக முக்கியம்.

அதன் விவரம் கீழ்க்கண்டவாறு:

  • அளவுக்கு அதிகமான மக்கிய உரங்கள் அல்லது மண்புழு உரங்களை இடவேண்டும். இது மண்ணில் அங்கக கார்பனை அதிகப்படுத்தும். இது நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் வாழ்வதற்கு ஏற்றதாகவும் ஊட்டச்சத்துக்களை கொடுப்பதாகவும் அமையும். 
  • இது மண் இறுக்கத்த தன்மையை தளர்த்தி வேர் வளர்ச்சியை அதிகரிக்கும், இதன் மூலம் பயிர்கள் சூழ்நிலையை தாங்கி வளரும் தன்மையை பெறும்.
  • நன்மை செய்யும் உயிர் உரங்கள், பூஞ்சான கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை தொடர்ச்சியாக மண்ணில் கொடுத்து வர வேண்டும். 
  • இது படிப்படியாக மண்ணில் இருக்கக்கூடிய தீமை செய்யும் நுண்ணுயிரிகளை அழித்து மண்ணின் அமிலத்தன்மையை மாற்ற உதவி புரியும். 
  • தேவையின் அடிப்படையில் மாற்றுப் பயிர் இடுதல், பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்து மடக்கி உழுதல், ஈயம் கரைசல் மற்றும் வேஸ்ட் டீ கம்போசர் பயன்படுத்துதல் போன்றவற்றை முயற்சி செய்யலாம். 
  • பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாடு தென்படும் பொழுது உடனடியாக இலை வழியாக ஊட்டச்சத்துக்களை கொடுக்கலாம்.
  • இது போன்று பல்வேறு வழிமுறைகள் உள்ளன அவற்றை நாம் வசதிக்கு ஏற்றவாறு பின்பற்றி மண் தன்மையை மேம்படுத்தலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


புதன், 25 ஜூன், 2025

பயிர் சாகுபடியில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் செயல்பாடுகள்

  • மண் வளமே மனித வளம் என்பது நிதர்சனமான கூற்று இதில் எவ்வித மாற்றக் கருத்தும் கிடையாது. கைப்பிடி மண்ணில் எண்ணற்ற நுண்ணுயிரிகள் வாழ்கிறது. பொதுவாக இவற்றை நன்மை மற்றும் தீமை செய்யும் நுண்ணுயிரிகள் என இரண்டாக பிரிக்கலாம். 
  • முறையற்ற உர மேலாண்மை யுக்திகள், ரசாயன மருந்து பயன்பாடு, தட்பவெப்ப சூழ்நிலை, மண்ணின் தன்மை மற்றும் கார அமிலத்தில் மாறு படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
  • விவசாயத்தில் இந்த நன்மை செய்யும் நுண்ணுயிரிகளில் பயன்கள் என்னவென்று விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.

ஊட்டச்சத்துக்களை கிடைக்கச் செய்தல்:

  • அசோஸ்பைரில்லம், ரைசோபியம், அசட்டோபாக்டர் போன்ற நுண்ணுயிரிகள் வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய நைட்ரஜனை மாற்றி தலைச்சத்தாக மண்ணில் நிலை நிறுத்தி  தருகிறது.
  • இதனால் 20% தழைச்சத்து தேவை இயற்கையாகவே நாம் பூர்த்தி செய்து விடலாம்.
  • இதேபோன்று மண்ணில் பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் இருக்கும் மணிச்சத்தை பயிர்களுக்கு ஏற்றவாறு கிடைக்கச் செய்வதும் நன்மை செய்யும் நுண்ணுயிரி யான பாஸ்போபாக்டீரியா ஆகும்.
  • இந்த பாக்டீரியா மண்ணில் பல்கி பெருகும் பொழுது இதனால் வெளியிடப்படும் ஆர்கானிக் ஆசிட் மூலக்கூறுகள் மண்ணில் அலுமினியம், இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்களுடன் பிணைந்து இருக்கும் மணி சத்தை பிரித்து பயிர்களுக்கு கொடுக்கிறது. இதன் மூலம் 20 முதல் 40 சதவீதம் வரை மணிச்சத்து தேவையை வெகுவாக குறைக்கலாம்.
  • வேம் பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் பயிர்களில் காணப்படும் வேர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுடன்,  அதன் நீளம் மற்றும் சல்லி வேர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அதிகரிப்பதால் பயிர்கள் நீர் மற்றும்  ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ளும் திறன் மேம்படுகிறது. 
  • இது மட்டும் இன்றி வறட்சியை தாங்கி வளர்தல் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தாங்கி வளர்தல் போன்ற பண்புகளும் காணப்படும்.

நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு:

  • மண்ணில் இருக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பல்வேறு நோய் பூஞ்சை மற்றும் பூச்சி காரணிகளை அழித்து பயிர்களை பாதுகாக்கிறது. 
  • நுண்ணுயிரிகள் நோய் காரணிகளுக்கு எதிராக இடம் மற்றும் ஊட்டச்சத்துக்களை கிடைக்க விடாமல் செய்வதாலும், 
  • தீமை செய்யும் நோய் காரணிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு காரணிகளை உற்பத்தி செய்வதன் மூலமாகவும் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை குறைக்கலாம். 
  • இதை தவிர இதை மறைமுகமாக பயிர்களில் நோய் எதிர்ப்புத் தன்மையை ஏற்படுத்தியும் உதவி புரிகிறது.
  • வளமான மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் நுண்ணுயிரிகளினால் சுமார் 15% முதல் 25% வரை நோய் தாக்குதல் குறைந்து காணப்படும்.

மண் தன்மையை மேம்படுத்துதல் ..

  • பயிர்களுடன் வேர்ப்பகுதியில் இணைந்து வாழும் வேம் போன்ற மைக் கோரைசா போன்ற நுண்ணுயிரிகள் ஒரு சில திரவங்களை வெளியிடுவதன் மூலம் மண் தன்மை மேம்படுகிறது. 
  • இதன் மூலம் மண்ணின் நீர் மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறன் 20 சதவீதம் வரை அதிகரிக்கும். 
  • மண்ணிற்கு பொலபொலப்பு தன்மையை கொடுத்து வேறு வளர்ச்சி அதிகப்படுத்தி ஒட்டுமொத்த பயிர் வளர்ச்சி மேம்படுத்தும்.

மக்க வைத்தல்:

  • மண்ணில் காணப்படும் இயற்கை கழிவுகளை அல்லது பயிர்க் கழிவுகளை மக்க வைக்கிறது. 
  • இதனால் மண்ணில் கரிம கார்பன் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கிறது.
  • இது மட்டும் இன்றி மண் கட்டிகளை உடைப்பதன் மூலம் பயிர் வளர்ச்சி நன்றாக காணப்படும். 

இதர பணிகள்:

  • உயிர் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்பொழுது ரசாயன பயன்பாடு வெகுவாக குறைகிறது இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படைவது குறைகிறது மேலும் நிலத்தடி நீர் ரசாயனம் கலக்காமல் பாதுகாக்கப்படும். 
  • தொடர்ச்சியான பயன்பாட்டின் பொழுது மண்ணில் இருக்கக்கூடிய கன உலோகங்களை படிப்படியாக கரைத்து மண்ணை விட்டு நீக்குகிறது.
  • நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் வளர்ச்சி உருக்கிகளையும் பயிர்களுக்கு கொடுக்கிறது 
  • மண்ணின் கார அமில தன்மையை நடுநிலை படுத்துவதற்கு உதவி புரிகிறது. 
  • பல்வேறு அமினோ அமிலங்கள் பயிர்களுக்கு அளிக்கிறது. 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

மணல் சார்ந்த மண் பூமியில் சாகுபடி செய்யும் போது கவனிக்கப்பட வேண்டியவை

  • அதிக மணல் தன்மையுடைய மண்ணில் அனைத்து வகையான பயிர்களையும் சாகுபடி செய்வது கடினமாகும். இது மட்டுமின்றி மண்ணில் துகள்களுக்கு இடைப்பட்ட இடைவெளி அதிகமாக இருப்பதால் ஊட்டச்சத்துக்கள் எளிதில் மண்ணுக்கு அடியில் சென்று பயிர்களுக்கு எட்டாத வண்ணம் சென்றுவிடும். 
  • தண்ணீரும் அதே போன்று தான் ஆழமாக சென்று விடுவதால் பயிர்களால் எடுத்துக் கொள்ள முடியாது இதனால் மீண்டும் மீண்டும் அதாவது குறுகிய இடைவெளியில் நாம் நீர் பாய்ச்சல் வேண்டிய தேவை இருக்கும். எனவே இந்த மண்ணை மேம்படுத்தி சாகுபடிக்கு கொண்டு வர கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.

வழிமுறைகள்:
மக்கிய உரங்களை இடுதல்:

  • இங்கு மக்கிய உரங்கள் என்பது கால்நடை தொழு உரம், பண்ணை கழிவு உரம், மண்புழு உரம் மற்றும் கிடைக்கப்பெறும்  மட்கு பொருளை பயன்படுத்தலாம்.
  • இவ்வாறு இடும் பொழுது மணல் துகள்களுக்கு இடைப்பட்ட இடைவெளி குறைவதால் இவை எளிதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீரை தக்க வைத்துக் கொள்கிறது. 
  • இதன் மூலம் பயிர்களுக்கு போதுமான அளவு சத்துக்களும் நீரும் கிடைக்கப் பெறுவதுடன் நல்ல வேர் வளர்ச்சி காணப்பட்டு வேர்கள் மண்ணை இறுக பற்றி நன்கு வளரும்.
  • இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் பயிர்களின் வேர் அமைப்புக்கு ஏற்றவாறு தொழு உரங்களை குறிப்பிட்ட அளவிற்கு ஆழமாக இடவேண்டும்.

இயற்கை நிலப் போர்வை அமைத்தல்:

  • பண்ணையில் கிடைக்கப்பெறும் பொருட்களை பயன்படுத்தி இயற்கை முறையில் நிலப் போர்வை அமைக்கலாம். உதாரணத்திற்கு வைக்கோல், பயிர் கழிவுகள், தீவனக் கழிவுகள், களைகள் மற்றும் இதர. 
  • இதன் மூலம் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆவியாகி வீணடிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. அவர் தடுக்கப்படும் பொழுது பயிர்கள் இதனை எடுத்துக் கொள்ளப் போதிய நேரம் இருக்கும்.
  • இது மட்டுமின்றி மண் அரிப்பு தடுக்கப்படும் மற்றும் களைகள் முளைப்பது வெகுவாக குறையும்.
  • நாளடைவில் இந்த இயற்கை வழி நிலப் போர்வை படிப்படியாக மக்கும் பொழுது  ஊட்டச்சத்துக்கள் மண்ணில் அதிகரிக்கும்.

இதர மண்ணை இடுதல்:

  • மணல் பாங்கான மண் தன்மையை மேம்படுத்த மிதமான அளவு கருப்பு மண் அல்லது வண்டல் மண்ணை இட்டு உழவு செய்ய வேண்டும். 
  • இதன் மூலம் நீர் மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறனை மேம்படுத்தலாம். 
  • அளவுக்கு அதிகமாக இடக்கூடாது இது மண்ணை மேலும் இறுக செய்துவிடும்.

பசுந்தாள் பயிர்களை சாகுபடி செய்தல்:

  • பசுந்தாள் பயிர்களை மிக நெருக்கமாக சாகுபடி செய்து மடக்கி உழவு செய்ய வேண்டும்.
  • இதன் வேர்கள் மேல் மண்ணை மிக இறுக்கமாக பிடித்து வைத்து இருப்பதுடன் தழைச்சத்து உரத்தை நிலை நிறுத்திக் கொடுக்கும்.
  • இவற்றை மடக்கி உழவு செய்வதால் அதிக அளவு பயிர் கழிவுகள் மண்ணில் மக்குவதன் மூலம் நீர் மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறன் மேம்படும். 

உர மேலாண்மை:

  • நீரில் கரையும் உரங்களை சிறிது சிறிதாக பிரித்துக் கொடுக்கலாம். 
  • அல்லது ஊட்டச்சத்துக்களை பொறுமையாக கரையை செய்து பயிர்களுக்கு கொடுக்கும் உரங்களை பயன்படுத்தலாம். 
  • தேவைக்கு ஏற்ப இலை வழியாக ஊட்டச்சத்துக்களை தெளித்து வர வேண்டும்.

நீர் மேலாண்மை:

  • வாய்க்கால் வழி பாசனத்தை தவிர்க்க வேண்டும். இது நீர் தேவையை அதிகரிக்கும்.
  • சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவது மிகவும் உகந்தது.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

Recent Posts

Popular Posts