google-site-verification: googled5cb964f606e7b2f.html மண்ணின் அமிலத்தன்மை எவ்வாறு பயிர் விளைச்சலை பாதிக்கிறது ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 27 ஜூன், 2025

மண்ணின் அமிலத்தன்மை எவ்வாறு பயிர் விளைச்சலை பாதிக்கிறது

மண்ணின் அமிலத்தன்மை எவ்வாறு பயிர் விளைச்சலை பாதிக்கிறது:

  • பொதுவாக மண்ணின் கார அமிலத்தன்மை பயிர்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை நிர்ணயம் செய்கிறீர்கள்.
  • அதிக கார அல்லது அமிலத்தன்மை நிறைந்த மண்ணில் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் பயிர்களுக்கு ஏற்ற வடிவிலும் எளிதில் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
  • மண்ணின் அமில காரத் தன்மை 5.5 முதல் 7.5- 8 வரை இருக்கக்கூடிய மண்ணில் பெரும்பான்மையாக முதன் நிலை, இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்கள்  மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கும் வடிவில் இருக்கும்.
  • மண்ணின் அமில கார தன்மையை தவிர, மண்ணின் இறுக தன்மை, நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை, கரிம கார்பன் அளவு, மண் ஈரப்பதம் போன்ற பல்வேறு காரணிகள் ஊட்டச்சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்கும் அளவை உறுதி செய்கிறது. 
  • மண்ணின் அமிலத்தன்மை அதிகரிக்க அதிகரிக்க மண்ணில் இருக்கும் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகளின் பெருக்கம் அதிகரிக்கும்.
  • இந்த நுண்ணுயிரிகள் நன்மை செய்யும் நுண்ணியகளுடன் போட்டி போட்டு இதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தண்ணீர் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். 
  • நாளடைவில் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை மேம்பட்டு காணப்படுவதால் எளிதாக பயிர்களில் நோய் தாக்குதல் காணப்படுவதுடன் மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு ஏற்றவாறு மாற்றித் தர போதுமான நுண்ணுயிரிகள் இல்லாமல் இருக்கும். 
  • இதனால் எளிதில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் தாக்குதலை காண இயலும். 
  • இது மட்டும் இன்றி, மண்ணின் அமிலத்தின் மேல் எளிதாக கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் சில நுண்ணூட்ட சத்துக்களை பயிர்கள் எடுத்துக்கொள்ள இயலாத வடிவில் மாற்றி மண்ணில் நிலை நிறுத்தி வைத்து விடும். இந்த ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு ஏற்ற வடிவில் மாற்ற நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • மிக முக்கியமான நோய்கள் அதிக அமிலத்தன்மை உடைய மண்ணில் வரக்கூடியது - வேர் அழுகல், கழுத்து அழுகல், வாடல் நோய் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் மூலம் ஏற்படக்கூடியது மற்றும் இதர. இது போன்ற சூழ்நிலையில் நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையில் மிக முக்கியம்.

அதன் விவரம் கீழ்க்கண்டவாறு:

  • அளவுக்கு அதிகமான மக்கிய உரங்கள் அல்லது மண்புழு உரங்களை இடவேண்டும். இது மண்ணில் அங்கக கார்பனை அதிகப்படுத்தும். இது நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் வாழ்வதற்கு ஏற்றதாகவும் ஊட்டச்சத்துக்களை கொடுப்பதாகவும் அமையும். 
  • இது மண் இறுக்கத்த தன்மையை தளர்த்தி வேர் வளர்ச்சியை அதிகரிக்கும், இதன் மூலம் பயிர்கள் சூழ்நிலையை தாங்கி வளரும் தன்மையை பெறும்.
  • நன்மை செய்யும் உயிர் உரங்கள், பூஞ்சான கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை தொடர்ச்சியாக மண்ணில் கொடுத்து வர வேண்டும். 
  • இது படிப்படியாக மண்ணில் இருக்கக்கூடிய தீமை செய்யும் நுண்ணுயிரிகளை அழித்து மண்ணின் அமிலத்தன்மையை மாற்ற உதவி புரியும். 
  • தேவையின் அடிப்படையில் மாற்றுப் பயிர் இடுதல், பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்து மடக்கி உழுதல், ஈயம் கரைசல் மற்றும் வேஸ்ட் டீ கம்போசர் பயன்படுத்துதல் போன்றவற்றை முயற்சி செய்யலாம். 
  • பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாடு தென்படும் பொழுது உடனடியாக இலை வழியாக ஊட்டச்சத்துக்களை கொடுக்கலாம்.
  • இது போன்று பல்வேறு வழிமுறைகள் உள்ளன அவற்றை நாம் வசதிக்கு ஏற்றவாறு பின்பற்றி மண் தன்மையை மேம்படுத்தலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts