பயிர் சாகுபடியில் கவர்ச்சிப் பொறிகளின் முக்கியத்துவம்...
|- பயிர் சாகுபடியில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப பூச்சி தாக்குதலின் எண்ணிக்கை மற்றும் பாதிப்பு வேறுபடும். பூச்சி தாக்குதலின் தீவிரத்தை கண்காணிக்கவும் நேரடியாக அதன் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் சேதத்தை கட்டுப்படுத்தி சாகுபடி செலவை வெகுவாக குறைக்கலாம்.
- கவர்ச்சிப் பொறிகளில் உணவு, ஒளி, நிறம், வாசனை, ரசாயன பொருட்கள், Pheromone போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க உதவுகிறது. இதனால் பயிர்களுக்கு மட்டுமின்றி நன்மை செய்யும் பூச்சிகள், கால்நடைகள், பறவைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் இருப்பதில்லை.
விளக்குப் பொறி:
- விளக்கு பொறியானது குறிப்பிட்ட வகை புற ஊதா கதிர்களை பயன்படுத்தி பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக தாய் அந்து பூச்சிகள் வாழை மற்றும் இரவு நேரத்தில் முட்டையிடவும் பயிர்களில் சேதத்தை ஏற்படுத்தவும் முயற்சி செய்யும்.
- பயிர்களுக்கு ஏற்றவாறு உகந்த விளக்கு பொறியை பயன்படுத்தி அந்தப் பூச்சிகள் வண்டுகள் மற்றும் சில பறக்கும் பூச்சிகளையும் கவர்ந்து அழிக்கலாம். விளக்கு பொரியல் அகலமான பாத்திரத்தில் மண்ணெண்ணெய் கலந்த நீரை வைக்க வேண்டும். வெளிச்சத்திற்கு கவரப்படும் பூச்சிகள் நீரில் விழுந்து இறந்து விடும். ஒரு ஏக்கருக்கு ஒரு எண் வீதம் விளக்கு பொறியை மாலை நேரத்தில் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் பயன்படுத்த வேண்டும்.
மஞ்சள் ஓட்டுப் பொறி:
வெள்ளை ஈக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அதைக் கவர்ந்து அழிக்கவும் மஞ்சள் ஒட்டுப்பொறி பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் கவர்ந்து இழுக்கப்படும் வெள்ளை ஈக்கள் ஒட்டுப்பொறியில் காணப்படும் பசையில் ஒட்டி இறந்துவிடும். ஏக்கருக்கு 20 முதல் 25 எண்கள் மஞ்சள் ஒட்டு பொறியை பயிர்களின் உயரத்திற்கு ஏற்றவாறு பொருத்தி வைக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை மஞ்சள் ஒட்டுப் பொறியை சுத்தம் செய்து அதில் பசை அல்லது எண்ணெய் தடவ வேண்டும்.
இனக்கவர்ச்சிப் பொறி:
- பெண் தாய் பூச்சிகளால் சுரக்கப்படும் Pheromone வாசனைக்கு ஆண் பூச்சிகள் கவரப்படும். இதனை அடிப்படையாக வைத்து செயற்கையாக ரசாயன பொருட்களை பயன்படுத்தி இந்த Pheromone உற்பத்தி செய்யப்பட்டு பூச்சிகளை கவர்ந்து அழிக்க பயன்படுத்தப்படுகிறது.
- ரப்பர் தட்டில் பிரமோன்கள் பொருத்தப்பட்டிருக்கும். கட்டிங் கீழ்ப்புறம் புனல் அமைப்புடன் பூச்சிகளை சேகரிக்க பாலித்தீன் பை கட்டப்பட்டிருக்கும்.
- இந்த அமைப்பை வயலில் பயிர்களின் உயரத்திற்கு ஏற்றவாறு பொருத்தி பராமரிக்க வேண்டும். சரியா ஏக்கருக்கு ஐந்து எண்கள் இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தலாம் மேலும் இந்த Pheromone மாத்திரையை மாதம் ஒரு முறை மாற்றி வைக்க வேண்டும்.
- இனக்கவர்ச்சி பொறி பல்வேறு பயிர்களில் பயன்படுத்தப்படுகிறது வாரத்திற்கு நெல், பருத்தி, கத்தரி, மிளகாய் தக்காளி, வெண்டை, முட்டைக்கோசு, தென்னை, பாக்கு, மற்றும் பல.
கருவாட்டுப் பொறி:
- ஒரு சிறிய தண்ணீர் பாட்டில் அல்லது பாலித்தீன் பைகளில் ஈக்கள் செல்வதற்கு எதுவாக துளையிட்டு அதில் கருவாட்டு தூள் மற்றும் குளோரிபைபாஸ் இணைக்கப்பட்ட பஞ்சையிட்டு பயிர்களின் உயரத்திற்கு ஏற்றவாறு குச்சிகளில் கட்ட வேண்டும்.
- இந்த கருவாட்டு பொறி பழ ஈக்கள், குருத்து ஈ மற்றும் பூசணி பயிரை தாக்கும் ஈக்களை கவர்ந்து அழிக்கும் திறனுடையது. ஈ தாக்குதலுக்கு ஏற்றவாறு கருவாட்டு பொறியை ஏக்கருக்கு 15 முதல் 25 எண்கள் பயன்படுத்தலாம்.
நீல நிற ஒட்டுப்பொறி:
நீல நிற ஒட்டு பொறியானது இலை பேன்களை கவர்ந்து அழிக்க பயன்படுத்தப்படுகிறது.பூச்சி தாக்குதலுக்கு ஏற்றவாறு ஏக்கருக்கு 15 முதல் 20 எண்கள் பயன்படுத்தலாம்.
பயிர்களை கவர்ச்சி பொறியாக பயன்படுத்துதல்.
- ஆமணக்கு, தட்டைப்பயிறு, மக்காச்சோளம் போன்ற பல்வேறு பயிர்கள் வரப்பு பயிராக சாகுபடி செய்யப்பட்டு பூச்சி தாக்குதலை கண்டறியவும் எண்ணிக்கையை குறைக்கவும் சாகுபடி செய்யப்படுகிறது.
- இந்த பயிர்களை பரப்பு ஓரங்களில் மட்டுமே சாகுபடி செய்ய வேண்டும் வயல்களுக்கு நடுவில் ஊடுபயிராக செய்தால் பூச்சி தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX
0 Comments:
கருத்துரையிடுக