இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை
மே 23, 2025
In மற்றவைகள் |
|
இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை...
- ரசாயன களைக்கொல்லிக்கு மாற்று இயற்கை வழியில் இல்லை என்றாலும், ஓரளவிற்கு களைகளை கட்டுப்படுத்த இயற்கை வழி தயாரிப்புகளும் பயனுள்ளதாக இருக்கும்.
- இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிக்க 10 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ சுண்ணாம்பை கலந்து ஒரு இரவு அதாவது 10 முதல் 12 மணி நேரம் காத்திருக்கவும்.
- இதிலிருந்து தெளிந்த சுண்ணாம்பு தண்ணீரை மட்டும் பிரித்து எடுத்து அதில் நான்கு கிலோ கல்லு உப்பை நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு இந்த கலவையில் 3 லிட்டர் மாட்டு கோமியத்தை கலந்து இதனை நன்கு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- இந்த கரைசலில் இரண்டு லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்து 10 முதல் 15 காத்திருந்தால் கரைசலின் மேலே ஆடை தோன்றும். இதனை நீக்கிவிட்டு கரைசலை கலைகளில் தெளிக்கலாம்.
- இயற்கையின் முறையில் தயாரித்தாலும் இந்த களைக்கொல்லி கரைசலை தொடர்ச்சியாக வயலில் தெளிக்கும் பொழுது மண்ணின் மீது உப்பு போன்ற படலம் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- இந்த களைக்கொல்லி கரைசலை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்த இயலாது குறிப்பாக காய்கறிகள், தானிய வகை பயிர்கள், நெல் போன்ற குறைந்த வாழ்நாட்கள் உடைய பயிர்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
- பல்லாண்டு தாவரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இதனை பயன்படுத்தலாம் குறிப்பாக பழத்தோட்டங்கள், மரவகைப் பயிர்கள், மலைத் தோட்ட பயிர்கள் மற்றும் பல.
- இந்த கரைசலை பயன்படுத்தி அனைத்து வகையான களைகளையும் கட்டுப்படுத்த இயலாது. குறிப்பிட்ட சில வகை கீரை வகை பயிர்களை மட்டும் கட்டுப்படுத்தும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX
0 Comments:
கருத்துரையிடுக