பயிர் சாகுபடியில் உரப்பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வழிமுறைகள்
|பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உரங்கள் மூலம் கொடுக்கும் பொழுது, அது எந்த அளவுக்கு பயிர்களால் எடுத்துக் கொள்ள முடிகிறது என்பது மிக முக்கியம். ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி, மகசூல் திறன் மற்றும் உற்பத்தி செலவு இதை அடிப்படையாக கொண்டு வேறுபடும்.
- மண் பரிசோதனை அடிப்படையில் சரிவிகித அடிப்படையில் உரம் இடுதல் வேண்டும்.
- பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தேவையான வடிவில் கொடுக்கும் பொழுது உரங்கள் வீணாவதை தவிர்த்து சாகுபடி செலவை வெகுவாக குறைக்கலாம்.
- மண்ணின் கார அமிலத்தன்மைக்கு ஏற்றவாறு உரமிடுதல் அவசியம். அதாவது காரத்தன்மை உடைய மண் வகைகளுக்கு அதிக அமில உரங்களையும், அமிலத்தன்மை உடைய மண்ணுக்கு காரத்தன்மை உடைய உரங்களை இடவேண்டும்.
- மணி சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இடுதல் அவசியம். ஏனெனில் இந்த உரங்கள் கரைவதற்கு போதுமான ஈரப்பதம் மற்றும் கால அவகாசம் தேவைப்படும்.
- அடி உரமாக இடும்பொழுது உரங்கள் குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் மண்ணுக்கு அடியில் செல்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- அவர் இல்லையெனில் மேலோட்டமாக இருக்கும் உரங்கள் ஆவியாதல் மூலம் வீணடிக்கப்படுவதுடன் அதிக களை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
- பயிர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உரிய தருணத்தில் அதாவது பயிர்கள் விரும்பி ஊட்டச்சத்துக்களை எடுத்துக்க கூடிய வேலையில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை கொடுப்பதன் மூலம் அதன் பயன்பாட்டுத் திறன் அதிகரிக்கும்.
- தழைச்சத்து உரங்களை இரண்டு அல்லது மூன்றாக பங்காக பிரித்து, ஒரு பங்கை அடி உரம் ஆகவும் மேல் உரமாக பிரித்து கொடுக்க வேண்டும்.
- உரம் இட்டு பிறகு போதுமான அளவு நீர் விட வேண்டும் இதன் மூலம் ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யலாம். ஆனால் நீர் தேங்கி இருப்பதை தவிர்க்க வேண்டும்.
- மேல் உரமாக இடும் பொழுது களைகளை அகற்றிவிட்டு போதுமான அளவு உரம் பயிரின் தண்டு பகிர்ந்து சற்று விலகி இட வேண்டும். மேலும் இந்த உரங்கள் மண்ணால் மூடப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- ஊட்டச்சத்துக்களை மெதுவாக கொடுக்கக்கூடிய உரங்களை பயன்படுத்தலாம் உதாரணத்திற்கு வேம்பு பூசப்பட்ட யூரியா.
- நீண்டகால அடிப்படையில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் மண்ணில் இருப்பதை உறுதி செய்ய தொடர்ச்சியாக மக்கிய தொழு உரம் அல்லது பசுந்தாள் உரங்களை பயன்படுத்த வேண்டும்.
- சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு ஏற்றவாறு நுண்ணூட்ட உரங்களை அடி உரமாக அளிக்க வேண்டும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பு கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX
0 Comments:
கருத்துரையிடுக