தக்காளி பயிரில் ஊசித்துளைப்பான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|- தற்சமயம் சாகுபடியில் இருக்கும் தக்காளி பயிரில் பரவலாக ஊசித்துளைப்பான் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.
- இந்தப் புழு தாக்குதலால் ஒருபுறம் பயிரின் வளர்ச்சி தடைபடுவதுடன் நேரடியாக காய் அல்லது பழங்களில் சேதத்தை ஏற்படுத்துவதால் மகசூல் பெரிய அளவு இழப்பீடு ஏற்படும்.
- பிரதானமாக தக்காளிப் பயிரை பாதித்தாலும் இதர ஒரு சில பயிர்களிலும் இதன் தாக்குதல் காணப்பட வாய்ப்புள்ளது.
தாக்குதலின் அறிகுறிகள்:
- மிகச் சிறிய உடல் அமைப்பு உடைய தாய் அந்து பூச்சிகள் அதிக அளவு முட்டைகளை பயிரின் இளம் குருத்து பகுதி, இளம் இலைகள், தண்டுப்பகுதி மற்றும் காய்களின் காம்பு பகுதியில் முட்டைகளை இடுகிறது. குறைந்த நாட்களில் அதிக இனப்பெருக்க திறன் இருப்பதால் தொடர்ச்சியாக புழு தாக்குதல் காணப்படும் குறிப்பாக கோடை பருவத்தில்.
- முட்டையில் இருந்து வெளிவரும் இளம் புழுக்கள் இலை சுரங்க ஈக்களின் தாக்குதல் போன்றே இலைகளில் பச்சயத்தை உண்ணும்.
- இதனால் பாதிப்படைந்த இலையின் பகுதிகள் ஆரம்ப நிலையில் சற்று வெளிர் நிலத்திலும் நாளடைவில் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
- இது ஆரம்பநிலை அறிகுறியாகும். இதன் காரணமாக பயிர்களின் வளர்ச்சி தடைப்பட்டு உற்பத்தி திறன் குறையும்.
- நாளடைவில் இல்லம் புழுக்கள் காய்களை துளைத்து உண்ணும் இதனால் இரண்டாம் நிலை நோய் தாக்குதலாக அழுகை நோயும் ஏற்படலாம்.
- இளம் புழுக்கள் சுமார் ஒரு வார காலம் வரை பயிரைத் தாக்கும் பின்பு கூட்டு புழுவாக மாறி மண்ணில் விழுந்து விடும்.
- இலை மற்றும் காய்களில் மட்டும் தாக்குதலை ஏற்படுத்தாமல் தீவிர தாக்குதலின் போது குருத்துப் பகுதி தண்டு பகுதி மற்றும் பூக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை படைத்தது.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- வயல் மற்றும் வரப்புகளில் களைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஏனெனில் இந்தப் புழுக்கள் ஒரு சில களை பயிர்களையும் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏக்கருக்கு 100 கிலோ விதம் வேப்பம் புண்ணாக்கு இட்டு மண்ணை கிளறி விடலாம் இதன் மூலம் கூட்டுப் புழுக்களை அழிக்க முயற்சி செய்யலாம்.
- மேலும் மண்ணில் மிதமான ஈரப்பதம் காணப்படும் பொழுது நீர்ப்பாசனம் வழியாக ஏக்கருக்கு அதிகபட்சமாக மூன்று லிட்டர் வரை மெட்டாரைசியம் செய்யும் உயிரியல் திரவத்தை விடலாம்.
- தீவிரமாக பாதிப்படைந்த காய்களை சேகரித்து வயலுக்கு வெளியில் நன்கு காய வைத்து அதனை கால்நடைகளுக்கு கொடுக்கலாம்
- மஞ்சள் ஒட்டு பொறியை ஏக்கருக்கு 12 வீதம் பயிரின் கிடை மட்டத்திற்கு கட்டுவதன் மூலம் தாய் அந்து பூச்சிகளை ஓரளவிற்கு அழிக்க இயலும்.
- இந்த வகை புழுக்களுக்காக பயன்படுத்தப்படும் இன கவர்ச்சி பொறி வாங்கி ஏக்கருக்கு 12 வீதம் நிறுவலாம்.
- இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் கண்டிப்பாக ஏழு நாட்களுக்கு ஒரு முறை Bacillus thuringiensis திரவத்தை ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
- இரண்டாம் நிலை தாக்குதலாக பழத்தில் அழுகல் நோய் காணப்பட்டாலும் அதை கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆரம்ப நிலை தாக்குதலின் போது வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் தெளிப்பு பயனுள்ளதாக அமையும்.
- ஒட்டுண்ணி அட்டைகள் கிடைக்கப் பெற்றால் அதனை ஏக்கருக்கு பத்து அட்டைகள் வீதம் 21 நாட்கள் இடைவெளியில் கட்டலாம்.
- ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தெளிக்கலாம். Chlortraniliprole/ Cyantraniliprole/ Lamba cylithrin/ Indoxacarb/ Flubendamide/ Spinotoram
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX
0 Comments:
கருத்துரையிடுக