மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்...
|முன்னுரை:
- தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பெரும்பான்மையான மக்காச்சோள பயிர் நடப்பு பருவத்தில் தான் சாகுபடி செய்யப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மானாவாரி மற்றும் இறவையில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. பெரும்பான்மையான விவசாயிகள் நல்ல விலை கிடைப்பதால் இதனை பயிர் செய்து செய்து வருகிறார்கள் இதில் சாகுபடி செலவை அதிகப்படுத்தி மகசூலை குறைக்கும் பிரதான பூச்சியாக படைப் புழு காணப்படுகிறது.
- இதன் தாக்குதலால் சராசரியாக 10 முதல் 35% வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது. பராமரிப்பு அற்ற நிலத்தில் 100% வரை மகசூல் இழப்பீடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.இதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை விரிவாக பார்ப்போம்.
புழு தாக்குதலின் அறிகுறிகள்:
இந்தப் புழு தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்ததாக கருதப்படுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் விதை முளைத்த பத்து நாட்களில் இருந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- இளம் புழுக்கள் அதாவது பச்சை நிற புழுக்கள் இலையின் ஒரு புறத்தில் உள்ள திசுக்களை உண்டு சல்லடை போன்ற அமைப்பை ஏற்படுத்தும் ஆனால் மறுபுறத்தில் பச்சையம் காணப்படும்.
- இரண்டு மற்றும் மூன்றாம் தோல் உரித்தல் நிகழ்வின்போது பயிரை கடித்து உண்டு துளைகளை ஏற்படுத்தும்.
- நடுப் பகுதியில் இருக்கும் குருத்துப் பகுதியை உண்டு காயம் ஏற்படுத்துவதால் இலைகள் விரிந்த பிறகு பரவலாக துளைகள் காணப்படும்.
- பெரிய புழுக்கள் சிறிய புழுக்களை உண்ணும் திறன் உடையதால் பயிரில் இரண்டு முதல் மூன்று புழுக்கள் மட்டுமே காணப்படும்.
- முதிர்ந்த புழுக்கள் இலைகளை கடித்து உண்ணுவதால் மைய நரம்பு மற்றும் இலை காம்பு மட்டுமே மீதம் இருக்கும்.
- உண்ட இலைப் பகுதியின் எச்சங்களை பயிர்கள் மற்றும் தரையில் காண இயலும்.
- பயிரின் குருத்துப் பகுதியை துளைத்து உண்ணுவதால் குருத்துகள் வளராமல் வளர்ச்சி தடைப்படும்.
- தீவிரமாக பாதிக்கப்பட்ட பயிரில் குருத்துப் பகுதி இல்லாமல் தண்டுப் பகுதியிலிருந்து கிளை உருவாகும் ஆனால் இதில் மகசூல் கிடைப்பது மிகவும் அரிது.
- பூ மற்றும் கதிர் பகுதியையும் இந்த புழுக்கள் உண்ணும்
புழுவின் வாழ்க்கை சுழற்சி:
இந்தப் படைப்பு புழு கோடைகாலத்தில் 30 நாட்களிலும் மற்ற பருவத்தில் 60 முதல் 90 நாட்கள் வரையும் வாழும் தன்மை படைத்தது.
முட்டை:
தாய் அந்துப் பூச்சிகள் சுமார் 150 முதல் 200 முட்டைகளை கொத்தாக இலை மற்றும் பயிரின் குருத்துப் பகுதியில் இடுகிறது. இதன் வாழ்நாள் சுமார் மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும். ஒரு தாய் அந்து பூச்சி அதன் வாழ்நாளில் சுமார் 1500 முதல் 2000 முட்டைகளை இடும் திறன் படைத்தது.
இளம் புழுக்கள்:
முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் சுமார் 6 தோல் உரித்தல் நிகழ்வை மேற்கொள்ளும். ஆரம்ப நிலையில் பிச்சை நிற உடம்பையும் கருப்பு நிற தலைப் பகுதியையும் கொண்டிருக்கும். இரண்டாவது தோல் உரித்தல் நிகழ்வின்போது இதன் தலை சற்று ஆரஞ்சு நிறத்தில் மாற்றமடையும். மூன்றாவது தோல் உரித்தல் நிகழ்வின்போது உடம்பு காவி நிறமாக மாறும். நான்கு முதல் ஆறாவது நிகழ்வின் போது தலைப்பகுதி சிகப்பு முதல் பழுப்பு நிறத்தில் மாறும் உடம்பு பகுதியில் கோடுகள் மற்றும் புள்ளிகள் உருவாகும். இதன் வாழ்நாள் சுமார் 15 முதல் 30 நாட்கள் வரை நீடிக்கும்.
கூட்டுப்புழு:
சிகப்பு நிற கூட்டு புழு பெரும்பான்மையாக மண்ணில் ஐந்து சென்டிமீட்டர் ஆழம் வரை காணப்படும். இதன் வாழ்நாள் கோடை பருவத்தில் 8 முதல் 10 நாட்களும் இதர பருவத்தில் 20 முதல் 30 நாட்களும் இருக்கலாம்.
தாய் அந்து பூச்சி:
இது பத்து முதல் 20 நாட்கள் வரை வாழும் தன்மை உடையது.தாய் அந்தப் பூச்சி இரவு நேரத்தில் மட்டுமே முட்டையிடும் இது பழுப்பு நிறத்தில் காணப்படும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- தொடர்ச்சியாக ஒரே வயலில் மக்காச்சோளம் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும்.
- கோடை உழவு கண்டிப்பாக செய்ய வேண்டும். இதன் மூலம் படைப் புழுவின் முட்டை மற்றும் கூட்டு புழுக்களை அதிக வெப்பநிலை மற்றும் பறவைகளுக்கு இரையாக்கி அழிக்கலாம்.
- குறைந்தது 18 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை கோடை உழவு செய்து மண்ணை நன்கு ஆற விட வேண்டும்.
- கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ விதம் இடித்த வேப்பம் கொட்டைகள் அல்லது வேப்பம் புண்ணாக்கு இடலாம்.
- விதைகள் நடவு செய்வதற்கும் முன்னதாக வரப்பு பயிராக அல்லது பாதுகாப்பு பயிராக ஆமணக்கு, துவரை அவரை, சூரியகாந்தி, தட்டப்பயிறு அல்லது தங்கள் பகுதிக்கு ஏற்ற ஏதேனும் ஒரு மூன்று வரிசையில் நடவு செய்ய வேண்டும்.
- விதை விதைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக பரப்பு பயிர் சாகுபடி செய்வது சாலச் சிறந்தது.
- விதைகளை Cyantraniliprole என்ற மருந்தை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம் இதனால் 25 நாட்கள் வரை புழு தாக்குதல் வராமல் தடுக்கலாம்.
- ஏக்கருக்கு ஐந்து முதல் 8 எண்கள் இன கவர்ச்சி பொறி பயன்படுத்தி புழுக்களின் நடமாட்டத்தை கண்டறிவதுடன் கவர்ந்து அழிக்கலாம்.
- கண்டிப்பாக விளக்கு பொறி ஏக்கருக்கு ஒரு எண் விதம் வாங்கி பயன்படுத்த வேண்டும். தாய் அந்த பூச்சிகள் இரவில் மட்டுமே முட்டையிடும்.
- வயலை சுற்றி சிறிதாக குழி வெட்டி அதில் தண்ணீர் மற்றும் மருந்து ஊற்றி வைப்பதால் மற்ற வயல்களில் இருந்து புழுக்கள் வயலுக்குள் நுழைவதை தவிர்க்கலாம்.
- அதேபோன்று ஏக்கருக்கு ஐந்து முதல் எட்டு எண்கள் இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்தலாம்.
- ஒரே நேரத்தில் சாகுபடி செய்ய இருக்கும் மொத்த நிலத்திலும் விதைகளை விதைக்க வேண்டும் இதனால் முழு தாக்குதலை வெகுவாக குறைக்கலாம்.
- பயிரின் குருத்துப் பகுதியில் மணல் அல்லது அடுப்பு சாம்பல் தூவி விடுவதால் ஓரளவிற்கு பூச்சி கடிப்பதை தவிர்க்கலாம்.
- மணல் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை 9:1 என்ற சதவீதத்தில் கலந்து குருத்துப் பகுதியில் இடலாம்.
- ஆரம்ப காலத்தில் வயலில் ஆங்காங்கே குச்சிகளை நட்டு வைப்பதால் அதில் பறவைகள் உட்கார்ந்து புழுக்களை உண்ணும்.
- பயிர் வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருந்து தொடர்ச்சியாக Metarhizium anisopliae மற்றும் Beauveria bassiana ஆகியவற்றை லிட்டருக்கு தலா 5 கிராம் கலந்து வாரம் ஒரு முறை தெளித்து வர வேண்டும்.
- தாக்குதல் இல்லாத போது வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டை விதை கரைசல், 3 G கரைசல், பத்திலை அல்லது ஐந்திலை கரைசல் அல்லது கிடைக்க பெறும் இயற்கை வழி தயாரிப்பு இடுபொருட்களை பயன்படுத்தி தாக்குதலை தவிர்க்கலாம்.
- இவை அனைத்தையும் முயற்சி செய்து வர வேண்டும் முடியாத பட்சத்தில் மட்டுமே ரசாயன மருந்து தெளிக்கலாம்... தெளிக்கும் பொழுது தேர்வு செய்யப்படும் மருந்து, நிறுவனம் மற்றும் அதன் அளவு ஆகியவற்றை கவனத்தில் கொள்ளவும்.
- கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.
- Emammectin benzoate - 8 கிராம்
- Novuluron- 10 மில்லி
- Thiamethaxam+ Lambada cychlothrin - 10 மில்லி
- Tetraniprole - 10 மில்லி
- Chloratranliniprole - 6 மில்லி
- Thiodicarb - 10 கிராம்
- Spinotorom - 10 மில்லி
- Spinosad -5 மில்லி
இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக