உளுந்து சாகுபடியில் தேமல் வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|முன்னுரை:
- உளுந்து சாகுபடியில் பிரதான நோயாக தேமல் நோய் திகழ்கிறது. கோடை பருவத்தில் அதிகமாக காணப்பட்ட வந்த இந்த தேமல் நோயின் அறிகுறிகள் தற்போது அனைத்து பருவத்திலும் காணப்படுவதால் உளுந்து சாகுபடி கேள்விக்குறியாகிறது.
- வெள்ளை ஈக்கள் எனப்படும் சாறு உறிஞ்சும் பூச்சியினால் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து மற்ற செடிகளுக்கு இந்த நோயானது பரப்பப்படுகிறது.
- பராமரிப்பு இல்லாத உளுந்து பயிரில் சுமார் 80 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதனை
ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த சில வழிமுறைகள்:
- இந்த நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட உளுந்து இரகங்களான வம்பன் 8, ஆடுதுறை 5 மற்றும் LBG 904 போன்ற ரகங்களை கோடை பருவத்தில் சாகுபடி செய்யலாம்.
- நோயை தாங்கி வளரக்கூடிய இதர வம்பன் உளுந்து ரகங்களை மற்ற பருவங்களில் சாகுபடி செய்ய முயற்சி செய்யலாம்.
- தேமல் நோய் விதை மூலம் பரவாது என பல்வேறு ஆய்வுகள் கூறினாலும் தற்போது இருக்கும் நிலைமையை பார்க்கும் பொழுது விதை மூலமாக பரவுகிறதா என்று அச்சம் எழுகிறது.
- ஒரு கிலோ விதைக்கு 5 மில்லி imidacloprid என்ற மருந்தை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து சிறிது நேரம் நிழலில் உலர வைத்து பின்பு விதைக்கலாம்.
- வரப்பு பயிராக மக்காச்சோளம், பருத்தி அல்லது சோளம் போன்ற பயிரை தேர்வு செய்து நடவு செய்யலாம் இது தாக்குதலை மட்டுப்படுத்தும்.
- ஊடு பயிராக சூரியகாந்தி அல்லது மக்காச்சோளம் போன்ற பயிர்களை உளுந்து நடவு செய்வதற்கு 30 முதல் 40 நாட்களுக்கு முன்னதாக விதைக்க வேண்டும்.
- பருவத்திற்கு முன்னதாக அல்லது பிந்தைய பருவத்தில் விதைப்பு செய்வதால் 15 சதவீதம் வரை இந்த நோயை கட்டுப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
- வயலில் களைகள் அதிகம் வளராமல் அவ்வப்போது களை மேலாண்மை யுக்திகளை பின்பற்ற வேண்டும்.
- அடி உரமாக நன்கு மக்கிய தொழு உரம் இடும் பொழுது அதனுடன் ஏக்கருக்கு தலா ஒரு கிலோ Bacillus மற்றும் Metarhizium கலந்து ஊட்டமேற்றி இட வேண்டும்.
- விதைகள் முளைத்த ஏழு நாட்களுக்கு பிறகு வாரம் ஒரு முறை சாறு உறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்தக்கூடிய உயிர் பூச்சிக்கொல்லி அல்லது இயற்கை வழி தயாரிப்பு திரவங்களை பயன்படுத்தி வர வேண்டும். உதாரணத்திற்கு Verticillum lecanii, 3G கரைசல், புகையிலை கரைசல், பத்தில் கரைசல், தேமோர் கரைசல், அரப்பு மோர் கரைசல் மற்றும் பல...
- வேப்பிலை, புங்கம் அல்லது நொச்சி இலை சாறுகள் வெள்ளை ஈக்கள் பயிர்களை சாற்றை உறிஞ்சுவதை தவிர்ப்பதால் இதனை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அங்கமாக பயன்படுத்தலாம்.
- அல்லது 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து வர வேண்டும்.
- சுமார் 40 நாட்கள் வயதுடைய பயிரில் தீவிரமாக தேமல் நோயால் பாதிக்கப்பட்ட செடியை முழுமையாக அகற்ற வேண்டும்.
- ஏக்கருக்கு எட்டு எண்கள் மஞ்சள் ஒட்டு பொறி பயிர்களின் கிடை மட்டத்திற்கு கட்ட வேண்டும்.
- ஊட்டச்சத்து மேலாண்மையை பொறுத்தவரையில் தழைச்சத்து மிகவும் குறைத்தும், மணிச்சத்து, சாம்பல் சத்து, போரான் மற்றும் மெக்னீசியம் அதிகம் இட வேண்டும் இது நோய் தாக்குதல் பரவுதல் மட்டுப்படுத்தி மகசூலை அதிகப்படுத்துகிறது.
- போரான் மற்றும் மெக்னீசியம் ஏக்கருக்கு தலா 1 முதல் 1.50 கிலோ வரை அடி உரமாக இடலாம்.
- வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிகமாக தென்படும் தருணத்தில் கீழ்கண்ட ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.
- Acephate
- Fibronil
- Acetamaprid
- Flonicamid
- Afidopyrofen
- Spirotetramet
- Acetamaprid+imidacloprid
- Thiamethaxam
இது விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
0 Comments:
கருத்துரையிடுக