EM (திறன் மிகு நுண்ணுயிர்) கரைசல் தயாரிப்பு முதல் பயன்பாடு வரை
|EM (திறன் மிகு நுண்ணுயிர்) கரைசல் தயாரிக்கும் முறை:
ஈயம் கரைசல் என்பது பல்வேறு வகையான நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்கள் அடங்கிய திரவம் ஆகும். இதில் பிரதானமாக இருக்கக்கூடிய ஐந்து நுண்ணுயிரி வகைகள் Yeast, Photosynthetic bacteria, Actinomycetes, Lactic acid bacteria மற்றும் Fermenting fungi ஆகும். இதை நாம் இரண்டு வழிகளில் தயார் செய்யலாம்.
தயாரிக்கும் முறை 1:
- இது தாய் திரவத்தை பயன்படுத்தி ஈயம் கரைசல் தயார் செய்யும் முறையாகும். இதற்கு குளோரின் கலக்காத 20 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் தாய் ஈயம் கரைசலை ஊற்ற வேண்டும். அதில் ஒன்று முதல் இரண்டு கிலோ நாட்டுச் சக்கரை கலந்து, அதனை மூடி நிழற்பாங்கான இடத்தில் சுமார் ஏழு நாட்களுக்கு வைத்திருத்தல் வேண்டும்.
- தினமும் ஒரு முறை சுமார் ஐந்து வினாடி மூடியை திறந்து விட்டு பின்பு மூட வேண்டும். அப்போதுதான் அதில் இருக்கும் காற்றுள்ள சூழ்நிலையில் வளரக்கூடிய நுண்ணுயிரிகளின் பெருக்கம் போதுமான அளவு இருக்கும்.
- ஏழு நாட்களுக்கு பிறகு மூடியை திறந்து பார்த்தால் திரவத்தின் மேல் வெள்ளை நிற பாலாடை போன்ற அமைப்பு காணப்படும் அதனை வைத்து ஈயம் கரைசல் தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்யலாம்.
தயாரிக்கும் முறை 2:
- தலா 3 கிலோ நன்கு பழுத்த பப்பாளி, வாழைப்பழம் மற்றும் பரங்கி ஆகியவற்றை தோல் உரித்து கூல் போன்று தயாரித்து நன்றாக கலந்து வாளியில் எடுத்து கொள்ள வேண்டும்.
- அதனுடன் மூன்று கிலோ நாட்டு சர்க்கரை மற்றும் 13 லிட்டர் தண்ணீர் கலந்து நிழற் பாங்கான இடத்தில் மூடி வைத்துவிட வேண்டும்.
- ஐந்து நாட்களுக்கு ஒரு முறை இதன் மூடியை சில நொடிகள் திறந்து பின்பு மூட வேண்டும். இதேபோல் சுமார் ஐந்து முதல் ஆறு முறை பின்பற்ற வேண்டும். சுமார் 25 நாட்களுக்கு பிறகு கரைசல் தயாராகிவிடும்.
பயன்படுத்தும் முறை:
1. இலை வழியாக தெளிப்பதற்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 150 முதல் 250 மில்லி ஈயம் கரைசல் பயன்படுத்தலாம்.
2. பாசன நீர் வழியாக கொடுப்பதற்கு 200 லிட்டர் தண்ணீரில் ஒன்று முதல் இரண்டு லிட்டர் ஈயம் கரைசல் கலந்து பயன்படுத்தலாம்.
இதன் நன்மைகள்:
- பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.
- மண்ணின் கார அமிலத்தன்மையை சரி செய்வதில் துணை புரிகிறது.
- மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை செடிகள் எடுத்துக் கொள்ளும் வகையில் மாற்றி கொடுக்கிறது.
- மண்ணில் இருக்கக்கூடிய கழிவுகளை சிதைத்து மண்ணிற்கு நல்ல காற்றோட்ட வசதியை ஏற்படுத்தித் தருகிறது.
- இதனால் பயிர்களின் வேர் வளர்ச்சி சிறப்பாக காணப்படும்.
- மண்ணில் இருக்கக்கூடிய பல்வேறு வகையான நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை செயல்பட செய்கிறது.
- பல்வேறு நோய், பூச்சி மற்றும் வைரஸ் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கிறது.
- மண்ணில் இருக்கக்கூடிய கன உலோகங்களை சிதைத்து மண்ணை தூய்மை படுத்துகிறது.
- செடிகளுக்கு அதிக தழைச்சத்தை கிரகித்து கொடுப்பதுடன் இதனை ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
- நிலத்தடி நீர் மற்றும் கிணற்று நீரை தூய்மைப்படுத்துகிறது.
- மொத்தத்தில் பயிர்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவி புரிந்து அதிக மகசூல் பெற உறுதுணையாக இருக்கிறது.
ஈயம் கரைசலில் இருந்து நுண்ணூட்டக் கலவை தயாரித்தல்:
- நமது வயலில் வளர்ந்த களைச் செடிகளை சேகரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி சுமார் 15 கிலோ எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு வாளியில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும்.
- அதனுடன் தலா 100 மில்லி ஈயம் தாய் திரவம் மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்து வாளியை மூடி வைக்க வேண்டும். தினம் ஒரு முறை சில நொடிகள் வாளியை திறந்து விட்டு பின்பு மூடி விட வேண்டும். தொடர்ச்சியாக எட்டு நாட்களுக்கு எவ்வாறு செய்ய வேண்டும் ஒன்பதாவது நாளில் ஈயம் நுண்ணூட்ட கரைசல் தயாராகி விடும்.
ஈயம் Bokashi கரைசல் தயாரித்தல்:
- தலா ஒரு கிலோ தொழு உரம், நெல் பதர் சாம்பல், கடலை புண்ணாக்கு, தேவையான அளவு தவிடு, 100 மில்லி தாய் ஈயம் கரைசல் மற்றும் 100 கிராம் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தேவையான அளவு நீர் கலந்து உருண்டையாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
- இதனை வாளியில் வைத்து தினமும் ஒரு முறை முடியை திறந்து மூட வேண்டும். எட்டு நாட்களுக்குப் பிறகு Bokashi தயாராகிவிடும். இதனை ஏக்கருக்கு 5 கிலோ விதம் பயன்படுத்தலாம்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD
0 Comments:
கருத்துரையிடுக