கத்தரியில் குருத்து மற்றும் காய் துளைப்பானை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்
|காய்கறி பயிர்களின் அரசன் என அழைக்கப்படும் கத்தரியானது தெற்காசிய நாடுகளில் மிகவும் முக்கியமான காய்கறி பயிராக கருதப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 5 இலட்சம் எக்டர் நிலப்பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் கத்தரியில் ஏற்படும் பல்வேறு பூச்சி தாக்குதல்களில் மிகவும் முக்கியமானதாகவும் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இது திகழ்கிறது. இப்புழுத் தாக்குதலால் மகசூல் இழப்பு சுமார் 30 முதல் 80% வரை ஏற்படுகிறது.
உகந்த பயிர்கள்:
இந்த வகை புழுக்கள் தக்காளி, மிளகாய், உருளைக் கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணி பயிர்களில் பரவலாக காணப்படுகிறது.
வாழ்க்கைச் சுழற்சி:
அறிகுறிகள்
லார்வாக்கள் இளம் இலைகள், காம்புகள், மொட்டுகள் தளிர் மற்றும் காய்களில் துளையிடும்.
ஆரம்பத்தில் இளம் குருத்துகள் வாடி காணப்படும்.
துளையிடப்பட்ட குருத்து மற்றும் காய்கள் கருப்பு நிற கழிவை வெளித்தள்ளும்.
நாளடைவில் வாடி உதிர்வதால் இறந்த இதயம் போன்று வளர்ச்சி குன்றி காணப்படும்.
பூ மற்றும் காய்கள் உதிர்தல்
குருத்து தண்டை பிளந்து பார்த்தால் திசுக்களின்றி கருப்பு நிறத்தில் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
பாதிக்கப்பட்ட தளிர்கள், குருத்துகள் மற்றும் பழங்களை சேகரித்து அழிப்பதால் லார்வா / முட்டைப் புழுக்கள் மற்றும் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்.
இவற்றை எரித்து பயிர் அங்கங்களை உரமாக்கிடுவதால் தாய் அந்துப் பூச்சிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கலாம்.
இறுதி அறுவடைக்கு பிறகு பழைய செடிகள் மற்றும் களைகளை வேருடன் பிடுங்கி அழிப்பதால் இப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி பாதிப்படைவதால் எதிர் வரும் பயிர்களில் தாக்குதல் மட்டுப்படுத்தப்படும்.
கொத்தமல்லி, சோளம் மற்றும் தட்டைப்பயறு போன்ற பயிர்களைக் கொண்டு பயிற் சுழற்சி மேற்கொள்வதால் நன்மை பயக்கும் பூச்சிகளான சிலந்தி, கண்ணாடி இறக்கைப்பூச்சி, லேடி பேர்ட் மற்றும் செவ்வண்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
வயலைச் சுற்றி 2 முதல் 4 மீ உயரத்திற்கு வலைகளை தடுப்பானாக பயன்படுத்துவதுடன் வயலை சுத்தமாக பராமரிப்பதால் 60% வரை பூச்சித் தாக்குதலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
எதிர்ப்பு சக்தி ரகங்களை பயிரிடுதல். (நீளமான காய்கள் கொண்ட ரகம்).
இனக்கவர்ச்சி பொறி 12 எண்கள்/ எக்டர் என்ற எண்ணிற்கு வைத்து தாய் அந்துப்பூச்சி நடமாட்டத்தை குறைக்கலாம்.
பேசில்லஸ் துருஞ்சியன்ஸ் 2 கி/ லி தண்ணீரில் கலந்து தெளிப்பதால் ஆரம்பகால பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
டிரைக்கோகிராம சிலோனிஸ் ஒட்டுண்ணியை எக்டருக்கு 50000 எண்கள் விடுவிப்பதால் 50 % வரை பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
வேப்பங்கொட்டை 5% கரைசல் 1-2 மி.லி/ 1 லி தண்ணீர் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பதால் பூச்சித்தாக்குதல் தவிர்க்கப்படும்.
ப்ரைஸ்டோமரஸ் மற்றும் செராமஸ்டஸ் ஒட்டுண்ணியை பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.
கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
Azadiractin 10000 ppm – 3-5ml/liter water |
|
Spinosad – 0.5-1 ml/10
liter water |
|
Chlorantraniliprole –
0.4-0.6 ml/liter water |
|
Novaluron+ Emamectin
benzoate - 4 ml/ liter water |
|
Flubendiamide -0.5-0.75 ml/liter water | https://amzn.to/49YPsIN |
Quinalphos – 1.5-2 ml/liter water | https://amzn.to/3wDnfJg |
Imidacloprid+Betacyfluthrin – 0.4-0.6 ml/liter water |
|
Isocycloseram – 0.1-0.2
ml/liter water |
|
Broflanilide –
0.2-0.3 ml/liter water |
|
0 Comments:
கருத்துரையிடுக