கத்தரி பயிரில் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|தற்சமயம் சாகுபடிகள் உள்ள கத்தரி பயிரில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. குறிப்பாக இலை உண்ணும் வண்டு, பூ வண்டு, கொப்புள வண்டு, அஸ்வினி, குருத்து மற்றும் காய் புழு, தத்துப்பூச்சி மற்றும் தேமல் வைரஸ் நோய் காணப்படுகிறது.
தற்சமயம் கத்தரி மற்றும் இதர காய்கறி பயிர்களுக்கு சராசரி விலை கிடைப்பதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை குறைந்த செலவில் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்துவதன் மூலம் செலவினத்தை குறைத்து வருமானத்தை அதிகரிக்கலாம். இந்த பதிவில் வைரஸ் தாக்குதலை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.
நோய் தாக்குதலின் அறிகுறிகள்:
- இலைகளில் பச்சை மற்றும் வெளிர் மஞ்சள் நிற திட்டுக்கள் காணப்படும்.
- இலைகள் சிதைந்து ஒழுங்கற்ற வடிவிலும், பார்ப்பதற்கு தோல் போன்று காணப்படும்.
- குருத்துப் பகுதியில் இருந்து வெளியேறும் இளம் இலைகள் சிறுத்து காணப்படும்.
- இதனால் பயிர்களில் பச்சையத்தின் அளவு குறைந்து, பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும்.
- பாதிக்கப்பட்ட பயிர்களில் இருந்து குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பூக்கள் மற்றும் காய் பிடிப்பதை காண இயலும்.
- இந்த தேமல் நச்சுயிரி நோய் அஸ்வினி மூலம் பாதிக்கப்பட்ட செடிகளிலிருந்து மற்ற செடிகளுக்கு பரவுகிறது.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- ஒரே வயலில் மீண்டும் மீண்டும் கத்தரி சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும்.
- தங்களது பகுதிக்கு ஏற்ற உகந்த ரகத்தினை தேர்வு செய்தல் அல்லது நோய் தொற்று இல்லாத நாட்களை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
- தேமல் நோயால் பாதிக்கப்பட்ட வயலுக்கு அருகில் மீண்டும் கத்தரி நடவு செய்யாமல் இருக்கலாம்.
- இந்த வைரஸ் தொற்று கத்தரி, உருளை, வெள்ளரி போன்ற சில பயிர்களில் பிரதானமாக காணப்போவதால், சாகுபடி பயலுக்கு அருகாமையில் இந்த பயிர்கள் இல்லாமல் இருந்தால் நல்லது.
- வயலை களைகள் இன்றி பராமரிக்க வேண்டும். ஏனெனில் சார் உறிஞ்சும் பூச்சான அஸ்வினி களை செடியில் இருந்து கொண்டு நோயை பரப்பும்.
- தீவிரமாக பாதிக்கப்பட்ட பயிரை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
- இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல், பத்திலை அல்லது ஐந்திலை கசாயம், நீம் அஸ்திரம், அக்னி அஸ்திரம் போன்ற இயற்கை வழியில் தயாரித்த இடுபொருட்களை தொடர்ச்சியாக தெளித்து வரலாம்.
- உயிரியல் முறையில் அஸ்வினி பூச்சியை கட்டுப்படுத்த 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை Verticillium lecanii திரவத்தை இலை வழியாக தெளித்து வரலாம்.
- ரசாயன முறையில் அஸ்வினி பூச்சியை கட்டுப்படுத்த பத்து லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி Imidacloprid கலந்து தெளிக்க வேண்டும். அல்லது Fibronil/ Thiamethoxam/ Flonicamid போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பரிந்துரை செய்யப்படும் அளவில் பயன்படுத்தலாம்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy
0 Comments:
கருத்துரையிடுக