google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்: பூச்சி மேலாண்மை

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

பூச்சி மேலாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூச்சி மேலாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 ஜூலை, 2026

நூற்புழுக்களுக்கு எதிரான உயிரியல் போராளிகள்

Pochonia chlamydosporia  மற்றும் Purpureocillium lilacinum நீடித்த வேளாண்மைக்கான நிலையான தீர்வு

பயிர் சாகுபடியில் உற்பத்தியை பாதிக்கும் காரணிகளில் நிலையற்ற தட்பவெப்ப சூழ்நிலை, பூச்சி மற்றும் நோய் தாக்குதல், களைகள் மட்டுமல்லாமல் கண்களுக்குப் புலப்படாத நூற்புழுக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மண்ணில் வாழும் இந்நுண்ணுயிர் போன்ற விலங்குகள் தாவர வேர்களைத் தாக்கி நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை குறைத்து, பயிர்களின் வளர்ச்சியையும் மகசூலையும் பெருமளவில் பாதிக்கின்றன.

தோட்டக்கலை பயிர்களில் சுமார் 10 - 30 சதவீதம் வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும் திறன் உடையது.

நூற்புழு (Nematode) என்றால் என்ன?

நூற்புழுக்கள் (Plant Parasitic Nematodes) என்பது மண்ணில் வாழும் மிகச் சிறிய, நீளமான, நூல் போன்ற நுண்ணுயிர் விலங்குகள் ஆகும். இவை தாவர வேர்களில் ஊசி போன்ற ”Stylet என்ற உறுப்பை நுழைத்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்துகின்றன.

முக்கிய தீங்கு விளைவிக்கும் நூற்புழுக்கள்

1. வேர்முடிச்சி நூற்புழு - Root-knot nematode (Meloidogyne spp.)

2.  மொச்சை வடிவ நூற்புழு - Reniform nematode (Rotylenchulus reniformis)

3. வேர்குத்தும் நுற்புழு – Pratylenchus spp

4. சிட்ரஸ் நுற்புழு – Tylenchulus semipenetrans

5. வாழை துளைக்கும் நூற்புழு – Radopholus similis

6. சுழல்  நூற்புழு – Helicotylenchus spp

இவை வாழை, தக்காளி, மிளகாய், கத்திரி, வெண்டை, மா, மாதுளை, பப்பாளி, கொய்யா,  எலுமிச்சை உள்ளிட்ட பல பயிர்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன.

நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள்:

ü வேர்களில் முடிச்சுகள் உருவாகுதல்

ü வேர் வளர்ச்சி குறைதல்

ü சத்துக்களை உறிஞ்சும் திறன் குறைதல்

ü குன்றிய பயிர் வளர்ச்சி

ü இலை மஞ்சளாதல்

ü வறட்சியை தாங்கும் திறன் குறைதல்

ü  பூ மற்றும் காய் உதிர்தல்

ü மகசூல் குறைதல்

நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள் ஊட்டச்சத்து குறைபாட்டு அறிகுறிகளை ஒத்து இருப்பதால் அளவுக்கு அதிகமாக உரம் இடுதலை தவிர்த்து நூற்புழு தாக்குதல் உள்ளதா என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு உயிரியல் முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரியல் முறையில்  நூற்புழுக்களை கட்டுப்படுத்துதல்:

நூற்புழுக்களை கட்டுப்படுத்த பிரதானமாக இரண்டு பூஞ்சாணங்கள் பயண்படுத்தப்படுகிறது.

1. Pochonia chlamydosporia

 2. Purpureocillium lilacinum

முக்கிய வேறுபாடுகள்

அம்சங்கள்

Pochonia chlamydosporia

Purpureocillium lilacinum

முக்கிய இலக்கு

நூற்புழு முட்டைகள்

நூற்புழு முட்டைகள்  +  பெண் நூற்புழுக்கள்

செயல்படும் வேகம்

மிதானமாக (நீண்டகால தாக்கம்)

விரைவாக (விரைவு தாக்கம்)

வேர் மண்டல குடியேற்றம்

சிறந்தது நீண்டகால நிலைக்கும்

மிதானமானது

முக்கிய நொதிகள்

அதிக Chitinase

அதிக Protease

இரண்டாம் நிலை நச்சப் பொரட்கள்

குறைவு

அதிகம்

Root-knot nematode கட்டுப்பாடு

சிறந்தது

சிறந்தது வேகமான தாக்கம்

அம்சங்கள்

Pochonia chlamydosporia

Purpureocillium lilacinum

Cyst Nematode கட்டுப்பாடு

மிகவும் சிறந்தது

மிதானமானது

தாவர வளர்ச்சி ஊக்குவித்தல் (LAA, Phosphate solubilisation)

அதிகம்

மிதானமானது

மண்ணில் நீடிக்கும் திறன்

அதிகம்

மிதானமானது

பயன்படுத்தும் வழிமுறைகள்: 

  • 100 கிலோ நன்கு மக்கிய தொழுவுரத்துடன் 1 கிலோ பர்புரியோசிலியம் லிலாசினம் கலந்து, ஈரப்படுத்தி, 2 - 3 வாரத்திற்கு வைத்து, பின்னர் அடி உரமாக இடவேண்டும்.
  • திரவ வடிவ திரவங்களை ஏக்கருக்கு 1 முதல் 2 லிட்டர் என்ற அளவில் தரை வழியாக கொடுக்கலாம். 
  • பழப் பயிர்களுக்கு வயதிற்கு ஏற்றவாறு 500 முதல் 1 கிலோ இடலாம்.
  • போச்சோனியா கிளமிடோஸ்போரியா உயிரியல் பூஞ்சானத்தை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் நன்கு நன்கு மக்கிய தொழுவுரத்துடன் கலந்து இட வேண்டும்.

பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

ü நூற்புழு முட்டைகள் மற்றும் பெண் நூற்புழுக்களை அழிக்கிறது.

ü வேர் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ü பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கும்.

ü இரசாயனப் பயன்பாட்டை குறைக்க உதவுகிறது.

பயன்படுத்தும் போது கவணிக்கப்பட வேண்டியவை

ü முழு பலன் பெற மண்ணணை ஈரப்பதமாக வைத்திருங்கள்.

ü நேரடி வெயிலில் இருந்து பாதுகாக்கிறது.

ü பயன்படுத்தும் முன் லேபிளில் உள்ள வழிமறைகளை பின்பற்றவும்.

முடிவுரை:

நூற்புழுக்கள் கண்களுக்குப் புலப்படாத எதிரிகள் என்றாலும், அவை ஏற்படுத்தும் இழப்பு மிகப் பெரியது. இவற்றை கட்டுப்படுத் Pochonia chlamydosporia  மற்றும  Purpureocillium lilacinum  போன்ற நன்மை பயக்கும் பூஞ்சாணங்களை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு உகந்த, அறிவியல் பூர்வமான மற்றும் பொருளாதார ரீதியாக பயனுள்ள தீர்வாகும்.

மண் வளத்தை காக்கும் இந்த உயிரியல் தொழில்நுட்பங்களை விவசாயிகள் பரவலாக ஏற்றுக்கொள்வதே எதிர்கால நிலையான வேளாண்மைக்கான முக்கிய அடித்தளமாக அமையும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/EgQS1wsMcxcA6hZjRcmwyS

வெள்ளி, 1 மே, 2026

மா தண்டு துளைப்பான் மேலாண்மை

முன்னுரை:

  • மா மரங்களை பல்வேறு பூச்சிகள் தாக்கினாலும் மா தண்டு துளைப்பான் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பூச்சியாக கருதப்படுகிறது. 
  • ஏனெனில் மறைமுகமாக தாக்கி மரங்களை அழித்துவிடும். 
  • மா தண்டு துளைப்பான் காரணமாக சுமார் 40% வரை மகசூல் இழப்பீடு ஏற்படும்.

🪲 வாழ்க்கை சுழற்சி : 

  • வண்டுகள் பெரிதாகும் கடினமான இறக்கைகளைக்  கொண்டிருக்கும். முன் இறக்கையில் இருபுறமும் சிகப்பு புள்ளிகள் காணப்படும். 
  • இதன் உணர் கொம்புகள் அதன் உடம்பை விட நீளமாக இருக்கும்.
  • மரத்தின் தண்டு பகுதியில் காணப்படும் வெடிப்புகள் சிறு சிறு காயங்கள் போன்ற இடங்களில் வண்டுகள் தனது முட்டைகளை தனித்தனியாக  இடும்.
  • சுமார் 15- 25 நாட்களுக்கு பிறகு முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் சுமார் 6-8 மாத காலம் வரை மரத்தின் தண்டு அல்லது கிளை  பகுதியில் உள்ள திசுக்களை துளைத்து உண்டு வாழும்.
  • கூட்டுப் புழுக்கள் பாதித்த இடங்களில் காணப்படும். 
  • வண்டுகளின் நடமாட்டம்  மே முதல் ஜூன் மாதங்களில் அதிகமாக காணப்படும். இதனால் புழு தாக்குதலை ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை எப்படி பார்க்கலாம். 

தாக்குதலின் அறிகுறிகள் :

  • வண்டுகள் நேரடியாக பதிப்பை ஏற்படுத்தாது.
  • இளம் புழுக்கள் மரத்தின் தண்டு அல்லது கிளைப் பகுதியில்   துளையிட்டு தொடர்ச்சியாக உண்டு பல்வேறு அறைகளை ஏற்படுத்தும். 
  • திசுக்களை உண்டு     மரத்தூள் சக்கைகளை வெளியேற்றும்.
  • சில நேரங்களில் மரத்தில் தண்டுப் பகுதியில் இருந்து சாறு வெளியேறுவதை காண இயலும். 
  • கிளை அல்லது தண்டைத் துளைத்து உண்ணுவதால் ஊட்டச்சத்து மற்றும் நீர் மரங்களுக்கு முழுமையாக கிடைக்காமல் ஒரு ஒரு பகுதியாக இறந்துவிட்டது. 
  • சரியாக கவனிக்கவில்லை  எனில் மரம் இறந்துவிடும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • முறையான பராமரிப்பு அவசியம்.  பராமரிப்பு இல்லாத தோப்புகளில் வண்டு தாக்குதல் அதிகம் காணப்படும்.
  • வண்டு தாக்குதல் குறைவாக இருக்கும் நிலம்  போன்ற ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
  • இந்த வண்டுகள் தாக்கும் இதர பயிர்களான பப்பாளி, அத்தி, முருங்கை, ரப்பர், மல்பரி போன்றவற்றை ஊடுபயிராகவோ அல்லது அருகிலோ சாகுபடி செய்யக்கூடாது. 
  • மரத்தின் தண்டு மற்றும் கிளை பகுதியில் காயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 
  • இறந்த மரங்களை வேரோடு அகற்றி எரித்து விட வேண்டும்.
  • மே மற்றும் ஜூன் மாதங்களில் மரத்தின் தண்டு மற்றும் கிளை பகுதியில்  காப்பர் ஆக்சி குளோரைடு மற்றும் மோனோகுரோட்டாபாஸ் கலந்து தடவ வேண்டும். 
  • இதனால் முட்டையிடும் சதவீதம் குறையும்.
  • வண்டுகள் நடமாட்டம் இருப்பின் உடனடியாக விளக்கு பொறி வைத்து அதனை கவர்ந்து அழிக்க வேண்டும்.
  • மே முதல் ஜூன் மாத இரவில் வரை மரத்தின் தண்டு பகுதியில் நைலான்  வலைகளை கட்டி வைக்கலாம். இதில் முட்டையிடும் வண்டுகள் எளிதில் மாட்டிக் கொள்ளும்.
  • புழு தாக்குதல் இருப்பின்  துளையிலிருந்து புழுக்களை அகற்றி விட்டுப் பின்னர் மோனோகுரோட்டாபாஸ் அல்லது Dichlorovos மருந்தில் பஞ்சை நனைத்து  துளையில் வைக்க வேண்டும்.
  • Arka borer control (ABC) பொருளை மரத்தின் தண்டு மற்றும் கிளை பகுதியில் தடவுவதன் மூலம் முட்டையிடுதல் தடுக்கப்படுவதுடன் தாக்கப்பட்ட புழுக்களும் இறந்துவிடும். இது சுமார் 4 மாத காலம் வரை புழு தாக்குதல் இல்லாமல்  பாதுகாக்கும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE

சனி, 11 ஏப்ரல், 2026

காய்கறி சாகுபடியில் இனக்கவர்ச்சி பொறியின் முக்கியத்துவம்


முன்னுரை :

  • உணவின் ஓர் அங்கமாகவும் ஊட்டச்சத்து மிகுந்த உணவாகவும் காய்கறிகள் கருதப்படுகிறது. காய்கறி சாகுபடியில் விவசாயிகளுக்கு சவாலனாக திகழ்வது பூச்சி/புழு தாக்குதலால் ஏற்படும் சேதங்களும் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புமே. இதனை கட்டுப்படுத்த அளவுக்கு அதிகமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றது.
  • இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளில் சுமார் 15 முதல் 16 சதவீதம் காய்கறி பயிர்களுக்கு மட்டுமே தெளிக்கப்படுகிறது. மேலும் குறுகிய கால இடைவெளியில் இம்மருந்துகள் பயன்படுத்தப்படுவதால் எஞ்சிய நஞ்சு உணவு வழியாக மனித உடலில் கலக்கிறது. இது மட்டும் இன்றி அதிக உற்பத்தி செலவு, காற்று மாசுபடுதல், நன்மை செய்யும் பூச்சிகளை இழத்தல், நிலத்தடி நீர்  மாசுபடுதல், பூச்சிகள் எதிர்ப்பு திறன் பெறுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. 

  • நீடித்த விவசாயத்திற்கு நிலையான தீர்வு ஒருங்கிணைந்த பூச்சி  மேலாண்மையே. அதன் ஒரு அங்கமாக திகழும் இனக்கவர்ச்சி  பொறியை பற்றி விரிவாக பார்ப்போம்.

இனக்கவர்ச்சி  என்றால் என்ன?

  • பெண் அந்துப் பூச்சிகள் தனது இனப்பெருக்கத்திற்காக  ஆண் அந்துப் பூச்சிகளை ஈர்க்க,  அதன் உடலில் இருந்து ஒரு வித வேதிப்பொருள்களை வெளியேற்றும். 
  • இந்த வேதிப்பொருளின் நறுமணத்திற்கு ஆண் அந்தப் பூச்சிகள் கவரப்பட்டு இனப்பெருக்கம் நடைபெறும். 
  • இதை அடிப்படையாக வைத்து, ஆய்வுக்கூடங்களில் இந்த வேதிப்பொருள்கள் தயாரிக்கப்பட்டு   இனக்கவர்ச்சி பொறியாத பயன்படுத்தப்படுகிறது. 
  • காய்கறி சாகுபடியில் காணப்படும் அநேக அந்து பூச்சி வகை புழு தாக்குதலை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி பெரிதும் உதவும். 
  • உதாரணத்திற்கு கத்திரியில் குருத்து மற்றும் காய்ப்புழு, தக்காளியில் காய்ப்புழு, பருத்தியில் இளஞ்சிகப்பு காய் குழு, மக்காச்சோளம், சோளம், நெல், நிலக்கடலை போன்ற பயிர்களில் படைப்புழு தாக்குதல், பருத்தி, துவரை, கொண்டைக்கடலை, தக்காளி, மிளகாய் மற்றும் பல பயிர்களில் அமெரிக்கன் காய்ப்புழு தாக்குதல், பல்வேறு  பயிர்களில் சேரத்தை ஏற்படுத்தும் புகையிலை கம்பளிப்பு, நெல் தண்டு  துளைப்பான், தக்காளியில் ஊசித் துளைப்பான், முட்டைக்கோசு, காலிஃப்ளவர் போன்ற பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும்  வைர முதுகு பூச்சி.
  • ஆண் பூச்சிகள் சுரக்கும் வேதிப்பொருள்கள் எதிரி பூச்சிகளை எதிர்க்கவும் பெண் பூச்சிகளை கவரும் உதவுகிறது. இந்த வேதிப்பொருளை பயன்படுத்தி ஒரு சில இன கவர்ச்சி பொரியல் மட்டுமே உள்ளது. (Aggregation pheromon)
  • நாம் பயன்படுத்தும்  பெரும்பான்மையான இனக்கவர்ச்சி பொறியின் அடிப்படை பெண் அந்தப் பூச்சிகளின் உடம்பில் சுரக்கும்   வேதிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. (Attractant pheromon)
  • ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் இனக்கவர்ச்சி பொறிகளை முறையாக பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் அளப்பரியது. 
  • முறையாக பயன்படுத்தினால் சுமார் 50 லிருந்து 60% பூச்சி தாக்குதலை மட்டுப்படுத்தலாம். 
  • இதனுடன் பூச்சி விரட்டி திரவங்கள் தெளித்தல், நன்மை செய்யும் பூச்சிகளை கவருதல், வரப்பு  மற்றும் பொறி பயிர் சாகுபடி செய்தல், ஊடு பயிர், கலப்பு பயிர் மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி போன்ற அனைத்து தொழில்நுட்பங்களையும் பின்பற்றும்பொழுது ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான தேவை 90 சதவீதத்திற்கும் மேல் குறைந்துவிடும். 

பயன்படுத்தும்போது கவனிக்கப்பட வேண்டியவை:

  • தேவையான எண்ணிக்கையில்    இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்த வேண்டும்.
  • பயிருக்கு ஏற்றவாறு  இன கவர்ச்சி பொறிகளை உரிய எண்ணிக்கையில் பயன்படுத்த வேண்டும்.
  • உதாரணத்திற்கு பருத்தி, நிலக்கடலை, மிளகாய் போன்ற பல்வேறு  பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் புகையிலை  கம்பளி புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 12 எண்கள் இனக்கவர்ச்சி பொறிகள் பயன்படுத்த வேண்டும். கத்தரியில் குருத்து மற்றும் காய் புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 12 முதல் 16 எண்கள் இன கவர்ச்சி பொறி பயன்படுத்த வேண்டும். 
  • இனக்கவர்ச்சி பொறிகளை பயிரின் உயரத்திற்கு ஏற்றவாறு நிறுவ வேண்டும். மேலும் பயிர் வளர வளர இதன் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும். 
  • இனக்கவர்ச்சி பொறியில் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை உரிய இடைவெளியில் மாற்ற வேண்டும். பயிரில் காணப்படும்   புழுவின் தன்மை கேட்ப இதன் கால இடைவெளி மாறுபடும். உதாரணத்திற்கு கத்தரி பயிரில் 30 முதல் 40 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். 
  • இதன் மூலம் கவரப்படும் பூச்சிகளை  கண்டறிவது மட்டுமின்றி அதிக அளவில் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். 
  • இனக்கவர்ச்சி பொறிகளை  மிக அருகில் வைக்காமல் உரிய இடைவெளியில் வைத்து பராமரிக்க வேண்டும். 
  • என்ன விதமான பூச்சி தாக்குதல் என்பதை கண்டு இருந்து அதற்கு ஏற்றவாறு இன கவர்ச்சி பொறிகளை பயன்படுத்த வேண்டும்.
  • இனக்கவர்ச்சி பொறியில் கவரப்படும் பூச்சிகளை அவ்வப்போது அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். 
  • ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிக்கடி தெளித்தால்  இனக்கவர்ச்சிப்  பொறியில் அஞ்சு பூச்சிகள் கவரப்படும் சதவீதம் சற்று குறையும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp  குழுவில் இணைந்து  பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE

செவ்வாய், 24 மார்ச், 2026

தென்னையில் நத்தைப்புழு (Slug caterpillar) தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


முன்னுரை: 

தென்னை, வாழை, எலுமிச்சை, மாதுளை, ஆமணக்கு, காபி மற்றும் டீ போன்ற பல்வேறு பயிர்களில் சேதத்தை ஏற்படுத்தும் திறன் உடையது. இளம் புழுக்கள் தனது உடம்பு பகுதியில் நீல வண்ண கோடுகள் மற்றும் மயிர்கற்றை காணப்படுவதால் இதனை Nettle caterpillar அல்லது Blue striped nettle caterpillar என்று அழைப்பார்கள். 

வாழ்க்கை சுழற்சி:

1. பட்டாம்பூச்சி வகையை சார்ந்த தாய் அண்டு பூச்சிகள் இலையின் அடி புறத்தில் முட்டைகளை குவியலாக இடும்.

2. முட்டையில் இருந்து வரக்கூடிய புழுக்கள் பெரியதாக பச்சை நிறத்தில் காணப்படும். இதன் உடம்பு பகுதியில் 

3. இளம் புழுக்களின் உடம்பிற்குள் ஒரு வகை திரவம் உண்ணும் பின்னும் செல்வதை பயன்படுத்தி புழுக்கள் நகரும்.

4. மூன்று நீல வண்ண கோடுகள் மற்றும் நான்கு வரிசைகளில் மயிர்கற்றைகள் காணப்படும்.

5. இந்த மயிர்கற்றையின் நுனிப்பகுதியில் விஷ திரவம் இருப்பதால் இதனை நாம் தொடும் பொழுது வலியும் ஒவ்வாமையும் ஏற்படும்.

6. கூட்டுப் புழுக்கள் பயிர்களில் காணப்படும்.

7. பச்சை மற்றும் பழுப்பு நிறம் கலந்த உடம்பு மற்றும் இறக்கைகளை உடையது தான் தாய் அந்து பூச்சிகள்.

தாக்குதலின் அறிகுறிகள்: 

1. இளம் புழுக்கள் ஆரம்பகாலத்தில் இலையை சுரண்டி உண்ணும். 

2. சற்று வளர்ந்த புழுக்கள் இலைகளைக் கடித்து உண்ணும்.

3. தீவிர தாக்குதலின் பொழுது ஓலைகளின் நடு நரம்பு மட்டுமே மீதம் இருக்கும் இதரப் பகுதிகளை உண்டு விடும். 

4. நாளடைவில் இலைகள் காய்ந்து காட்சியளிக்கும். 

5. பயிர் வளர்ச்சி பாதிப்படையும். 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

1. பூச்சி தாக்கிய ஓலைகளை அப்புறப்படுத்தி எரித்து விடவும். ஏனெனில் இதில் முட்டைகள் கூட்டுப் புழுக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

2. இளம் புழுக்களை சேகரித்து அழிக்கலாம். கையுறை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். 

3. மாலை நேரத்தில் விளக்கு பொறியை எரிய விடுவதன் மூலம் தாய் அந்து பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

4. வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். 

5. ஐந்து சதவீத வேப்பங்கொட்டை விதை கரைசல் தெளிப்பதன் மூலம் பெரும்பான்மையான முட்டைகளை அழிக்க முயற்சி  செய்யலாம்.

6. உயிரியல் முறையில் கட்டுப்படுத்த Beauveria மற்றும் Bacillus கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். 

7. ரசாயன முறையில் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மருந்துகள் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம். Chlorpyriphos/ Dichlorovos/ Emamectin benzoate/ Spinosad

மேலும் தகவல்களுக்கு நமது குழுவில் இணைந்து பயன் பெறவும்.. 


வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

தக்காளி பயிரில் ஊசித்துளைப்பான் புழு மேலாண்மை

1. சமீப காலமாக தக்காளி பயிரில் ஊசித்துளைப்பான் புழு தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. 

2. இந்த புழு தக்காளி பயிரில் பிரதானமாகவும், அப்போது கத்திரி தாக்கு திறன் உடையது. 

🦋பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

1. மாலை மற்றும் இரவு நேரத்தில் தாய் அந்து பூச்சிகள் இலையின் அடி புறத்தில் முட்டைகளை இடும்.

2. இந்த அந்து பூச்சிகள் வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். 

3. முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள், இலை, தண்டு மற்றும் காய்களில் சேதத்தை ஏற்படுத்தும். 

4. கூட்டுப் புழுக்கள் பெரும்பான்மையாக மண்ணில் காணப்படும்.

5. மிக வேகமாக இனப்பெருக்கம் அடைந்து புழுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் இதை கட்டுப்படுத்துவது சற்று சிரமமாக இருக்கும்.

🍃தாக்குதலின் அறிகுறிகள்:

1. இளம் புழுக்கள், இலை சுரங்க ஈக்களின் தாக்குதலை போலவே இலைகளின் பச்சையத்தை சுரண்டி பாதிப்பை ஏற்படுத்தும். 

2. பாதித்த இலைகள் கருகி காட்சியளிக்கும். 

3. பயிர் வளர்ச்சி குன்றி மகசூலும் இழப்பீடும் ஏற்படும். 

4. சற்று முதிர்ந்த புழுக்கள் பெரும்பான்மையாக காயை துளைத்து உண்ணும்.

5. காய்களில் புழுக்கள் சாப்பிட்ட எச்சங்கள் காணப்படும் சில நேரங்களில் தண்டு பகுதியையும் துளைக்கும். 

6. காய்கள் உதிர்வு மற்றும் காய்களின் தரம் பாதிப்பதால் நேரடியாக மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

🍅கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

1. பூச்சி தாக்குதல் உள்ளதா என்பதை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வர வேண்டும். 

2. முன் எச்சரிக்கைக்காக பூச்சி விரட்டி திரவங்கள் அல்லது வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் தெளித்து வரலாம். 

3. ஏக்கருக்கு ஒரு எண் விளக்கு பொறி மாலை நேரத்தில் சுமார் 2 மணி நேரம் எரிய விட வேண்டும். 

4. ஒரே வயலில் தொடர்ச்சியாக தக்காளி சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும்.

5. தரமான நாற்றுகளை பயன்படுத்த வேண்டும்.

6. இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 12-16 எண்கள் நிறுவி பராமரிக்க வேண்டும்.

7. தக்காளி மற்றும் கத்தரி அல்லது தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்களை ஊடு பயிராகவோ அல்லது பக்கத்திலோ சாகுபடி செய்ய வேண்டும்.

8. போதுமான அளவு கால்சியம் ஊட்டச்சத்து கொடுக்கும் பொழுது பயிர்கள் புழு தாக்குதலை தாங்கி வளரும் தன்மை பெறுகிறது. 

9. உயிரியல் முறையில் கட்டுப்படுத்த Bacillus மற்றும் Beauveria போன்றவற்றை தனித்தனியாக தெளிக்க வேண்டும்.

10. களைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

11. ரசாயன முறையில் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம். Emammectin/ indocaxrb/ Chlortraniliprole/ Tetraniprole / Cyantraniliprole / Flubendamide 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE?mode=gi_t


செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

மா சாகுபடியில் தத்துப்பூச்சி மேலாண்மை

தத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

1. சரியான நேரத்தில் நமது மா பயிரை தாக்கி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மிகப் பெரிய அளவில் மகசூல் இழப்பீட்டை  ஏற்படுத்துவது தான்  இந்த தத்துப்பூச்சி. 

2. இது ஒரு வகை சாறு   உறிஞ்சும் பூச்சி வகையை சார்ந்தது ஆகும்.

3. எப்போதெல்லாம் நமது மா மரங்களில் இளம் இலைகள், பூங்கொத்துகள் மற்றும் இளம் காய்கள் காணப்படுகிறதோ அப்போதெல்லாம் நமது பயிரை  வெகுவாக பாதிக்கும்.

4. பூங்கொத்துகள் தோன்றும் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தினால் சுமார் 60 முதல் 70% வரை கூட மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். 

5. இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த தத்துப்பூச்சிகள் பூங்கொத்துகளில் சாற்றை தொடர்ச்சியாக உறிஞ்சும். 

6. இதனால் பூக்கள் கருகி ஒன்றன் பின் ஒன்றாக உதிர ஆரம்பிக்கும். இதனால் அதிக அளவில் மகசூல் இழப்பீடு ஏற்படும்.

7. இவை சுரக்கும் இனிப்பு  திரவக்கழிவு இலை மற்றும் பூங்கொத்து பகுதிகளில் படும் பொழுது அங்கு  கரும்பூஞ்சை நோய் தொற்று ஏற்படுகிறது. 

8. இதனால் பயிர்கள் உணவு உற்பத்தி செய்யும் திறன் குறையும் அது மேலும் பயிர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். 

9. வருடம் முழுவதும் நமது மாமரங்களில் இந்த பூச்சிகள் காணப்பட்டாலும் பிப்ரவரி முதல் ஏப்ரல் மற்றும் ஜூன் ஜூலை மாதத்தில் அதிகம் காணப்படும். 

10. மிதமான வெப்பம், அதிக காற்று  ஈரப்பதம், அதிக அளவு நிழல் போன்ற சூழ்நிலைகள் தகுந்த சீதோசன நிலையை ஏற்படுத்தி பூச்சியின் இனப்பெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

1. முறையான கவாத்து செய்தல். அக்டோபர் மாதத்தில். 

2. மரங்களுக்கு இடைப்பட்ட இடைவெளி மிக முக்கியம். 

3. மிதமான அளவு தழைச்சத்து உரத்தை இட வேண்டும். 

4. தோப்பில் களைகள் அதிகம் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

5. ஊடுபயிராக பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்யலாம் இது நன்மை செய்யும் பூச்சிகளை  வரவேற்கும். 

6. பொட்டாசியம் ஊட்டச்சத்தை சற்று கூடுதலாக பூங்கொத்து வரும் முன் கொடுக்க வேண்டும். மாமரங்கள் சற்று பூச்சிகளை தாங்கி வளரும் தன்மை  பெரும். 

7. பூச்சி தாக்குதல் ஏற்படுவதற்கு முன்னதாக தொடர்ச்சியாக பூச்சி விரட்டு திரவங்களை தெளித்து வர வேண்டும். 

8. ஆரம்ப நிலை பூச்சி  தாக்குதலின் பொழுது Verticillium மற்றும் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 

9. பஞ்சகாவியா, Verticillium மற்றும் வேப்ப எண்ணெய் கலந்து தெளிப்பது நல்ல பயனளிக்கும். 

10. கண்டிப்பாக ரசாயன மருந்துகளை பயன்படுத்தக் கூடாது இது மகரந்தச் சேர்க்கையை பாதிக்கும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...



சனி, 11 அக்டோபர், 2025

வெள்ளரி சாகுபடியில் (பாதுகாக்கப்பட்ட சூழல்- Polyhouse) பேன் தாக்குதலும் அதன் மேலாண்மையும்

வெள்ளரி சாகுபடியில் (பாதுகாக்கப்பட்ட சூழல் - Polyhouse) பேன் தாக்குதலும் அதன் மேலாண்மையும்...

முன்னுரை:

   பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடி என்பது மிக லாபகரமான விவசாய தொழிலாக திகழ்கிறது. ஏனெனில் இதில் நிலப்பரப்பு மட்டுமில்லாமல் செங்குத்தாக பயிர்களை சாகுபடி செய்கிறோம் மேலும் இதில் அதிக வெப்பநிலை திகழ்வதால் பயிர்கள் வேகமாக வளர்ந்து அதிக மகசூலை கொடுக்கிறது. 

 உயர் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதால் 30 முதல் 50% கூடுதல் மகசூல் பெற இயலும். இங்கு உயர் தொழில்நுட்பம் என்பது தட்பவெட்ப சூழலை தேவைக்கேற்ப மாற்றுதல், சொட்டுநீர் பாசனம், நீரில் கரையும் உரங்கள், உயர் அடர் நடவு, Fogger, என் நிலப் போர்வை மற்றும் பல்வேறு  தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகும். 

பேன் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை:

  • அதிக வெப்பநிலை 
  • மிதமானது முதல் அதிக காற்று ஈரப்பதம் 
  • அடர் நடவு 
  • போதிய காற்றோட்டமின்மை 
  • உயர் தொழில்நுட்பம் மற்றும் அதிக இடுபொருள் இடுதல் (உரங்கள்)
  • மஞ்சள் நிற பூக்களின் நிறம் (பேன் எளிதில் கவரும்

பேன் தாக்குதலின் அறிகுறிகள்: 
இலைகள்:

  • இலைகளின் அடிப்புரத்தில் இருந்து சாற்றை உறிஞ்சும். 
  • இதனால் இலை மேற்பரப்பில் வெளிர் நிற திட்டுக்கள் காணப்படும். 
  • இதன் காரணமாக பயிர் வளர்ச்சி பாதிப்படையும். 
  • தீவிர தாக்குதல் என்பது இலைகள் உருக்குலைந்து, இலை விளிம்புகள் கருகி காட்சியளிக்கும்.

பூக்கள்: 

  • மஞ்சள் நிற பூக்களை நோக்கி பேன்கள் எளிதில் சென்று தாக்கும். 
  • பூ இதழ்களில் சாற்றை உறிஞ்சும் இதனால் இதழ்களில் வெளிர் நிற திட்டுக்கள் காணப்படும்.
  • மேலும் மகரந்த பகுதிகளை சேதமடைய செய்வதால் காய் பிடிப்பு திறன் குறையும்.

காய்கள்:

  • பேன்கள் காய்களில் சாற்றை முயற்சி செய்வதால் வெளிர் நிற தழும்புகள் காய்களின் மேல் பரப்பில் காணப்படும். 
  • இது மட்டும் இன்றி பல்வேறு வகையான வைரஸ் நோய் தொற்றை இந்த வகை சாறு உறிஞ்சும் பூச்சிகள் பரப்புகிறது.

ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • அடி உரம் இடும் பொழுது வெப்பம் புண்ணாக்கு அல்லது இடித்த வேப்பங்கொட்டை இடவும். 
  • போதுமான பயிர் இடைவெளி அவசியம் 
  • போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்க காலை மற்றும் மாலை நேரத்தில் பசுமை குடிலின் இரு புறத்தில் உள்ள Side wall/Curtain wall பகுதியில் உள்ள பாலிதீன் சீட்டை சுருட்டி வைக்கவும். 
  • அந்தப் பகுதி வழியாக பூச்சிகள் உள் நுழைவதை தடுக்கும் வலை கண்டிப்பாக பொறுத்திருக்க வேண்டும்.
  • அதிக வெப்பநிலையை குறைக்க Foggers பொருத்தலாம். அல்லது பசுமை குடிலின் மேல் பகுதியில் தெளிப்பு நீர் நிறுவி அதை உபயோகிக்கலாம்.
  • களைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • பயிரின் ஆரம்ப கால வளர்ச்சியின் பொழுது வாரம் ஒரு முறை வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் அல்லது இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் போன்ற ஏதேனும் பூச்சி விரட்டி திரவத்தை தொடர்ச்சியாக தெளித்து வர வேண்டும். 
  • தேவையின் அடிப்படையில் உயிரியல் பூச்சிக்கொல்லி திரவமான Verticillium lecanii மற்றும் Beauveria bassiana கலந்து தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதல் தவிர்க்கலாம். 
  • 1000 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள பசுமை குடிலுக்கு 20 முதல் 25 எண்கள் மஞ்சள் மற்றும் நீல நிற ஒட்டுப்பொறி பயன்படுத்த வேண்டும்.
  • மிக கவனமாக இரசாயனம் மருந்துகளை தேர்வு செய்து தெளிக்க வேண்டும். உதாரணத்திற்கு Fibronil/Thiamethoxam/Spinosad/imidacloprid/Flonicamid/Cyantraniliprole.

நமது உழவன் நண்பன் WhatsApp குழுவில் இணைந்து பயன்பெற...

புதன், 23 ஜூலை, 2025

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் மஞ்சள் ஒட்டு பொறியின் முக்கியத்துவம்

    ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்பது கிடைக்கக்கூடிய அனைத்து பூச்சி கட்டுப்பாடு தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதாகும். இது உயிரியல், வேதியல், இயற்பியல் மற்றும் பயிர் சார்ந்த கலாச்சார மேலாண்மை உத்திகளை பயன்படுத்தி பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்க்கலாம். இதில் மஞ்சள் ஒட்டு பொறியின் பயன்பாடு அளப்பரியது.

  • பயிர்களை தாக்கும் பல்வேறு வகையான பூச்சிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் தொடர்ந்து தாக்குதலை ஏற்படுத்துவது சாறு உறிஞ்சும் பூச்சிகள் ஆகும். உதாரணத்திற்கு வெள்ளை ஈக்கள், தத்துப்பூச்சி, இலை
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்களுக்கு சாறு உறிஞ்சும் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அதிக அளவில் பூச்சிகளை கவர்ந்து அழிப்பதற்கும் இந்த மஞ்சள் ஒட்டும் பொறி பயன்படுத்தப்படுகிறது.
  • மஞ்சள் ஒட்டு பொறியை பயன்படுத்துவதன் அடிப்படை என்னவென்றால் இந்த வெள்ளை ஈக்களின் முதிர்ந்த பருவம் மஞ்சள் நிறங்களை மிக நேர்த்தியாக கவர்ந்து வரும்.
  • மேலும் சாறு உறிஞ்சு பூச்சிகளின் உடலமைப்பு மற்றும் காற்று வீசும்  திசையில் பறப்பதால் மிக எளிதாக இந்த அட்டைகளில் ஒட்டி  அங்கேயே இறந்து விடுவதால் இதன் இனப்பெருக்கம் வெகுவாக குறைகிறது. 
  • மிகக் குறைந்த செலவில் எளிய முறையில் நாமே பண்ணையில் மஞ்சள் ஒட்டு பொறி தயார் செய்து பயன்படுத்துவதன் மூலம் பூச்சி தாக்குதல் இல்லாமல் பயிரை பாதுகாப்பதுடன் வெகுவாக உற்பத்தி செலவு குறைக்கலாம். 
  • மேலும் இதனால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 
  • நாம் சாகுபடி செய்யும் அநேக பயிர்களில் இதனை பயன்படுத்தி வெள்ளை ஈக்கள், பச்சை பூச்சி, தத்துப்பூச்சி மேலும் பல பூச்சிகளும் இதில் கவர்ந்து அழிக்கப்படுகிறது. 
  • இதனால் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் மூலம் பரவும் வைரஸ் நோய்களின் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது. 
  • செலவின்றி தயாரித்து இதன் இருபுறத்திலும் மஞ்சள் நிறம் மற்றும் பிசுபிசுப்பு தன்மை ஏற்படுத்தி காற்று வீசும் திசையில் பயிர்களின் கிடை மட்டத்திற்கு இணையாக கட்ட வேண்டும். 
  • சாறு உறிஞ்சும்  பூச்சிகள் பயிர்களின் மிக மென்மையான பகுதியை பெரும்பாலும் பாதிப்பதால் தண்டுப் பகுதியில் மஞ்சள் ஒட்டும் பொறியை பயன்படுத்துவதில் எந்தவித பயணம் அளிப்பதில்லை.
  • மஞ்சள் ஒட்டு பொறியில் கவரப்படும் பூச்சிகளின் எண்ணிக்கை மற்றும் தன்மையை பொறுத்து அடுத்தடுத்து கட்டுப்படுத்தும் முறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் தேவையின் அடிப்படையில் இந்த பொறியை மாற்றி வைப்பது சிறந்தது.
  • இதனைப் பயன்படுத்துவதன் மூலம் சாகுபடி செலவை குறைத்து பயிர் விளைச்சலை மேம்படுத்தலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை: 

மஞ்சள் ஒட்டு பொறியின் பலனை முழுமையாக பெற கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.


  • அட்டையின் இருபுறமும் ஒட்டும் தன்மை இருக்க வேண்டும். 
  • மஞ்சள் ஒட்டு பொறியை பயிர்களின் உயரத்தில் இருந்து சுமார் 10 முதல் 15 சென்டிமீட்டர் உயரத்தில் நிறுவ வேண்டும். 
  • இவ்வாறு நிறுவப்படும் அட்டைகளை பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உயர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். 
  • அட்டைகளை கிடை மட்டமாக நிறுவ வேண்டும். இதன் மூலம் அதிக காற்று வீசும் போது அட்டைகள் வளையாமல் இருக்கும் மேலும் அதிக பூச்சிகளை கவரலாம்.
  • 15 நாட்களுக்கு ஒரு முறை அட்டையில் இருக்கக்கூடிய பூச்சிகளை சுத்தம் செய்து மீண்டும் ஒட்டு பசை தடவ வேண்டும். 
  • இதன் மூலம் மஞ்சள் ஒட்டு பொறியின் முழு செயல் திறனை பெற இயலும் மேலும் அட்டையில் ஒட்டி இருக்கும் இறந்த பூச்சிகளினால் பூஞ்சை அல்லது பாக்டீரியா நோய் தொற்று பயிர்களுக்கு வருவதை  தவிர்க்கலாம். 
  • அட்டைகளை காற்று வீசும் திசைக்கு இணையாக கட்ட வேண்டும். அவ்வாறு நிறுவும் பொழுது பூச்சிகள் காற்று வீசும் திசைக்கு இணைந்து பறக்கும் போது எளிதில் இதில் ஒட்டிக்கொண்டு இறந்துவிடும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


Recent Posts

Popular Posts