மா மரங்களை பல்வேறு பூச்சிகள் தாக்கினாலும் மா தண்டு துளைப்பான் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பூச்சியாக கருதப்படுகிறது.
ஏனெனில் மறைமுகமாக தாக்கி மரங்களை அழித்துவிடும்.
மா தண்டு துளைப்பான் காரணமாக சுமார் 40% வரை மகசூல் இழப்பீடு ஏற்படும்.
🪲 வாழ்க்கை சுழற்சி :
வண்டுகள் பெரிதாகும் கடினமான இறக்கைகளைக் கொண்டிருக்கும். முன் இறக்கையில் இருபுறமும் சிகப்பு புள்ளிகள் காணப்படும்.
இதன் உணர் கொம்புகள் அதன் உடம்பை விட நீளமாக இருக்கும்.
மரத்தின் தண்டு பகுதியில் காணப்படும் வெடிப்புகள் சிறு சிறு காயங்கள் போன்ற இடங்களில் வண்டுகள் தனது முட்டைகளை தனித்தனியாக இடும்.
சுமார் 15- 25 நாட்களுக்கு பிறகு முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் சுமார் 6-8 மாத காலம் வரை மரத்தின் தண்டு அல்லது கிளை பகுதியில் உள்ள திசுக்களை துளைத்து உண்டு வாழும்.
கூட்டுப் புழுக்கள் பாதித்த இடங்களில் காணப்படும்.
வண்டுகளின் நடமாட்டம் மே முதல் ஜூன் மாதங்களில் அதிகமாக காணப்படும். இதனால் புழு தாக்குதலை ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை எப்படி பார்க்கலாம்.
தாக்குதலின் அறிகுறிகள் :
வண்டுகள் நேரடியாக பதிப்பை ஏற்படுத்தாது.
இளம் புழுக்கள் மரத்தின் தண்டு அல்லது கிளைப் பகுதியில் துளையிட்டு தொடர்ச்சியாக உண்டு பல்வேறு அறைகளை ஏற்படுத்தும்.
திசுக்களை உண்டு மரத்தூள் சக்கைகளை வெளியேற்றும்.
சில நேரங்களில் மரத்தில் தண்டுப் பகுதியில் இருந்து சாறு வெளியேறுவதை காண இயலும்.
கிளை அல்லது தண்டைத் துளைத்து உண்ணுவதால் ஊட்டச்சத்து மற்றும் நீர் மரங்களுக்கு முழுமையாக கிடைக்காமல் ஒரு ஒரு பகுதியாக இறந்துவிட்டது.
சரியாக கவனிக்கவில்லை எனில் மரம் இறந்துவிடும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
முறையான பராமரிப்பு அவசியம். பராமரிப்பு இல்லாத தோப்புகளில் வண்டு தாக்குதல் அதிகம் காணப்படும்.
வண்டு தாக்குதல் குறைவாக இருக்கும் நிலம் போன்ற ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
இந்த வண்டுகள் தாக்கும் இதர பயிர்களான பப்பாளி, அத்தி, முருங்கை, ரப்பர், மல்பரி போன்றவற்றை ஊடுபயிராகவோ அல்லது அருகிலோ சாகுபடி செய்யக்கூடாது.
மரத்தின் தண்டு மற்றும் கிளை பகுதியில் காயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இறந்த மரங்களை வேரோடு அகற்றி எரித்து விட வேண்டும்.
மே மற்றும் ஜூன் மாதங்களில் மரத்தின் தண்டு மற்றும் கிளை பகுதியில் காப்பர் ஆக்சி குளோரைடு மற்றும் மோனோகுரோட்டாபாஸ் கலந்து தடவ வேண்டும்.
இதனால் முட்டையிடும் சதவீதம் குறையும்.
வண்டுகள் நடமாட்டம் இருப்பின் உடனடியாக விளக்கு பொறி வைத்து அதனை கவர்ந்து அழிக்க வேண்டும்.
மே முதல் ஜூன் மாத இரவில் வரை மரத்தின் தண்டு பகுதியில் நைலான் வலைகளை கட்டி வைக்கலாம். இதில் முட்டையிடும் வண்டுகள் எளிதில் மாட்டிக் கொள்ளும்.
புழு தாக்குதல் இருப்பின் துளையிலிருந்து புழுக்களை அகற்றி விட்டுப் பின்னர் மோனோகுரோட்டாபாஸ் அல்லது Dichlorovos மருந்தில் பஞ்சை நனைத்து துளையில் வைக்க வேண்டும்.
Arka borer control (ABC) பொருளை மரத்தின் தண்டு மற்றும் கிளை பகுதியில் தடவுவதன் மூலம் முட்டையிடுதல் தடுக்கப்படுவதுடன் தாக்கப்பட்ட புழுக்களும் இறந்துவிடும். இது சுமார் 4 மாத காலம் வரை புழு தாக்குதல் இல்லாமல் பாதுகாக்கும்.
0 Comments:
கருத்துரையிடுக