google-site-verification: googled5cb964f606e7b2f.html மிளகாயில் தவளை கண் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 29 மே, 2024

மிளகாயில் தவளை கண் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை: 

  • மிளகாய் ஒரு காய்கறி பயிராக இருந்தாலும் பெரும்பான்மையாக இது நறுமண பொருளாகவும் உணவுகளில் சுவையை மேம்படுத்தவும் மற்றும் பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டுள்ளதால் இதனை Wonder Spice  என்பார்கள். 
  • உலக அளவில் இந்தியா மிளகாய் உற்பத்தி, நுகர்வு மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. இதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் நிறைந்துள்ளது குறிப்பாக வைட்டமின் ஏ,பி, சி, இ, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, காப்பர், சோடியம் மற்றும் பல நிறைந்துள்ளது. 
  • இந்தியாவில் வருடத்திற்கு சராசரியாக 4300 முதல் 4700 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆந்திர பிரதேசம் இதில் முதலிடம் வகிக்கிறது.

நோய் பூஞ்சை விபரம்:

  • இந்நோய் Cercospora எனப்படும் பூஞ்சனத்தால் ஏற்படுகிறது. 
  • மிதமான வெப்பநிலை, அதிகமான காற்று ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு காலங்கள் இதன் தாக்குதலுக்கு உகந்ததாகும். 
  • பிரதானமாக விதை மூலமாக பரவக்கூடியது. 
  • இருப்பினும் மண் மற்றும் பயிர் கழிவுகளில் சுமார் ஒரு வருடம் வரை உயிர் வாழும் திறன் உடையது.
  • காற்று, மழை, வாய்க்கால் வழி நீர் பாசனம் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகளினால் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பூஞ்சானம் பரவுகிறது. 

நோயின் அறிகுறிகள்: 


  • பயிரின் ஆரம்ப நிலை முதல் அறுவடை முடியும் தருணம் வரை இந்நோய் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
  • இதன் அறிகுறிகள் இலையின் இருபுறத்திலும் காணப்படும். 
  • ஆரம்ப நிலையில் இலையில் சிறிய வட்ட வடிவிலான செம்பழுப்பு நிறப்பு புள்ளிகள் காணப்படும்.
  • புள்ளிகளின் மையப்பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும். இதனைச் சுற்றி வெளிர் பழுப்பு நிற வளையம் காணப்படும்.இதனை பார்ப்பதற்கு தவளையின் கண் போன்று காணப்படும். 
  • நாளடைவில் புள்ளிகள் சற்று பெரிதாகி அதன் நடுப்பகுதியில் இருக்கும் சாம்பல் நிற பகுதி காய்ந்து உதிர்வதால் இலைகளில் துளைகள் காணப்படும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாக மாற்ற முடிந்து வாடி உதிர்வதால் காய் மற்றும் பழங்கள் வெப்பநிலைக்கு உட்படும்.
  • நோய் தீவிரமடையும் பொழுது இதன் அறிகுறி இதைக்காம்பு பூவிதல் மற்றும் தண்டு பகுதியில் நீள்வட்ட வடிவில் காணப்படும்.
  • பழங்களிலும் இதன் அறிகுறிகள் தென்படுவதால் மகசூல் இழப்பீடு மற்றும் தரம் குறைகிறது.
  • இதன் உச்சபட்ச அறிகுறியாக தண்டு அடி அழுகல் நோய் காணப்படும். 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்நோய் விதை மூலமாக பரவக்கூடியதால் தேர்வு செய்யப்படும் விதை சான்றிதழ் பெற்றதாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும்.
  • நோய்க்கு எதிர்ப்பு திறன் உடைய ரகம் அல்லது வீரிய ஓட்டு ரகத்தினை தேர்வு செய்யலாம்.
  • போதுமான பயிர் இடைவெளி இருப்பதால் சாதகமான தட்பவெட்ப சூழ்நிலையை குறைக்கலாம். 
  • தொடர்ச்சியான மண் ஈரப்பதம் இல்லாமல் அமைய மேட்டுப்பாத்திகள் அமைத்து சொட்டுநீர் பாசனம் வழியாக பயிரிடலாம். 
  • வயலில் தோன்றும் களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.
  • தொடர்ச்சியாக ஒரே வயதில் மிளகாய் அல்லது குடைமிளகாய் சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும். 
  • சாகுபடி செய்த பிறகு பயிரின் எச்சங்களை முழுமையாக நிலத்தில் இருந்து அகற்ற வேண்டும்.
  • தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்த வேண்டும். 
  • பனிப்பொழிவு அல்லது மழை காரணங்களால் செடிகள் ஈரப்பதமாக இருக்கும் பொழுது நிலத்திற்குள் நடந்து பண்ணைப் பணிகளை செய்யக்கூடாது இதன் மூலமும் நோய் பூஞ்சை பரவும்.
  • நாட்டு ரகங்களை பயிரிடும் பொழுது விதைகளை நேர்த்தி செய்து பயிரிட வேண்டும். 
  • நோயின் ஆரம்ப நிலையில் இயற்கை வழி பூஞ்சான கொல்லிகளை ஏழு நாட்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக தெளித்து வேண்டும்.
  • Trichoderma viride, Trichoderma harzianum, Pseudomonas மற்றும் Bacillus subtilis போன்ற இயற்கை பூஞ்சான கொல்லிகள் இந்த நோயை கட்டுப்படுத்த பெரிய அளவில் உதவி புரிகிறது.
  • இதனைத் தவிர இயற்கை வழி தயாரிப்பு திரவங்களான பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், ஈயம் கரைசல், போன்றவற்றையும் நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.
  • ரசாயன மருந்துகளை பயன்படுத்த விரும்பினால் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். 
  • Carbendazim - 2-4 கி/1 லிட்டர் தண்ணீருக்கு 
  • Carbendazim+Mancozeb - 2-3 கி/1 லிட்டர் தண்ணீருக்கு
  • Hexaconazole - 1 மி/1 லிட்டர் தண்ணீருக்கு 
  •  Chlorothaonil- 2 கி/1 லிட்டர் தண்ணீருக்கு
  • COC -2.5 கி/1லிட்டர் தண்ணீருக்கு

  • Tebuconazole -1.5 மி/ 1 லிட்டர் தண்ணீருக்கு
  • Azoxystrobin+Tebuconazole -1.5 மி/1 லிட்டர் தண்ணீருக்கு 
  • Pyraclostrbin+Tebuconazole -1-2 மி/1 லிட்டர் தண்ணீருக்கு 
  • Mettiram+ pyraclostrbin - 3 கி/1 லிட்டர் தண்ணீருக்கு 

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

 
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA



0 Comments:

கருத்துரையிடுக

Pages