google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

சனி, 18 நவம்பர், 2023

சின்ன வெங்காயத்தில் கோழிகால்/திருகல் /தவளை நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்...

 
    சின்ன வெங்காயத்தில் திருகல் நோய் /கோழிக்கால் நோய் /ஆந்த்ரோனாக்ஸ்  / தவளை நோய்:
       சின்ன வெங்காய உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா இரண்டாம் இடம் வகித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் டன் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. வெங்காய உற்பத்தியில் விவசாயிகளுக்கு மிகவும் சவாலான நோயாக கொலெட்டோட்ரிகம் எனப்படும் ஆந்த்ரோனாக்ஸ் நோய் திகழ்கிறது. இந்நோயானது திருகல் நோய் அல்லது கோழிக்கால் நோய் அல்லது தவளை நோய் என்று விவசாயிகளால் அழைக்கப்படுகிறது. மூலக்கூறு ஆராய்ச்சியில்  (Molecular Research) சுமார் 29  Fusariun மற்றும் 6 Colletotrichum பூஞ்சாண வகைகள் இந்நோய் தாக்குதலுக்கு காரணமாக கருதப்படுகிறது.
நோய் காரணிகள் :
                இந்நோயானது  Colletotrichum gloeosporiodes  எனப்படும் பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. ஆனால் பல்வேறு வயல் மற்றும் ஆய்வக ஆராய்ச்சியில் இந்நோயானது  பலவகையான பூஞ்சாணங்களின் தாக்குதலால் ஏற்படுகிறது என தெரிய வருகிறது. அவற்றில் முக்கியமான சில பூஞ்சாணங்களாக Gibberella moniliformis, Colletotrichum acutatum, Colletotrichum coccodes, Colletotrichum siamense, Fusariun oxysporum, Fusariun fujikuroi, Sclerotium rolfsii, Allium ledebourianun, Allium spathianum  கருதப்படுகிறது.
                இந்நோயானது சுமார் 50% முதல் 100% வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும் வல்லமைப்படைத்தது.
நோய் தொற்று காரணிகள்  :
                இந்நோய் தாக்குதலை உண்டாக்கும் பூஞ்சாணம் உறக்க நிலையில் சுமார் 4 ஆண்டு காலம் வரை மண்ணில் அல்லது செடிகளில் வாழும் தன்மை கொண்டது. இவ்வகை பூஞ்சாணத்தைச் சுற்றியுள்ள திரவ உறை மற்றும் அதனுள் இருக்கும் மிகையான புரதச்சத்து காரணமாக நீண்ட நாள் வாழும். நோய்த் தொற்று கீழ்க்கண்ட காரணங்களால் பரவுகிறது.
                அதிக மழை, போதுமான வெப்பநிலை (20-35Ÿc) மற்றும் காற்றின் ஈரப்பதம் (75-100) பூஞ்சாணம் பரவுவதற்கு ஏற்ற சூழல். தரைவழி நீர்ப்பாய்ச்சுதல், தெளிப்பு நீர் பாசன முறை பயன்படுத்துதல், பண்ணை உபகரணங்கள், வேளாண் குப்பைகள் மற்றும் பாதிக்கப்பட்ட கிழங்குகள் மூலம் பரவுகிறது.


அறிகுறிகள் :
Ø தொடக்கத்தில் இலையில் வெள்ளை முதல் வெளிர் மஞ்சள் நிற சற்று பள்ளத்துடன் கூடிய புண்கள் காணப்படும்.
Ø  இப்புண்கள் நாளடைவில் விரிவடைந்து பரவ தொடங்கும்.
Ø  நாளடைவில் இப்புண்கள் வெளிர் மஞ்சள் நிறத்திலிருந்து அடர் பழுப்பு நிறத்திற்கு மாறும்.
Ø  இப்புண்களில் எண்ணற்ற கருப்புநிற பூஞ்சாணங்கள் காணப்படும்.
Ø  நாளடைவில் இலை சற்று சுருள தொடங்கி மஞ்சள் நிறமாக மாறும்.
Ø  கிழங்குகளின் கழுத்துப் பகுதியில் உள்ள தண்டுகளில் அபரிமித வளர்ச்சி காணப்படும்.
Ø  கிழங்குகள் உருளாமல் நீள்வாக்கில் வளரும்.
Ø  நோய் தீவிரமடையும் போது இலைகள் அதீத வளர்ச்சியால்  தரை மட்டத்திற்கு மடியும்.
Ø  இறுதியாக வேர் அழுகல் காணப்படும்.
Ø  சில முறை வேர் அழுகல் காரணமாக கிழங்குகளில் புழுக்கள் காணப்படுகிறது.
 
கட்டுப்படுத்தும் முறைகள்  :
Ø  நோய்த்தொற்று இல்லாத விதை / விதை கிழங்குகளை பயன்படுத்த வேண்டும்.
Ø  2-3 வருடங்களுக்கு பயறு வகை பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி மேற்கொள்ளுதல்.
Ø மேட்டுப்பாத்தி அமைத்து  போதுமான இடைவெளியில் (15 செ.மீ  X  15 செ.மீ) சரியான பருவத்தில் நடவு மேற்கொள்ளுதல்.
Ø  சாகுபடி செய்யப்பட்ட முந்தைய பயிர் குப்பைகளை சரியாக அகற்றுதல்.
Ø அடி உரமாக வேப்பம்புண்ணாக்கு 5 குவிண்டால் + மண்புழு உரம் 5 குவிண்டால் + டிரைக்கோடெர்மா ஹர்சியானா 10 கிலோ இடவும்.
Ø விதை / விதை கிழங்குகளை டிரைக்கோடெர்மா ஹர்சியானம் 2 கி.கி. / அல்லது விட்டாவாக்ஸ் (கார்பாக்சின்  + திரம்) 2 கி.கி. பவுடரை கொண்டு விதை நேர்த்தி செய்திடவும்.
Ø  தெளிப்பு நீர் பாசனத்தை தவிர்த்து சொட்டு நீர் பாசனத்தில் 4 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாய்ச்சுதல்.
Ø பரிந்துரைக்கப்பட்ட  உர அளவுடன் போதுமான சல்பேட் பயன்படுத்துவதால் நோய் பரவுதலை தடுக்கலாம்.
Ø மஞ்சள், இஞ்சி மற்றும் வேம்பு இலைகளின் கரைசல்களை தெளிப்பதால் பூஞ்சாண வளர்ச்சி தடைபடும்.
Ø டிரைக்கோடெர்மா + சூடோமோனஸ் 1% 15  நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பதால் நோயின் தீவிரம் குறைக்கப்படும்.
Ø பேசில்லஸ் + சூடோமோனஸ் 1% 15  நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பதால் நோயின் தீவிரம் குறைக்கப்படும்.
Ø சரியான தருணத்தில்  Paclobutrazol தெளிப்பதால் Gibberella moniliformis பூஞ்சாணத்தால் உற்பத்தி செய்யப்படும் ஜிப்ரல்லின்  தடை செய்யப்படுகிறது.
Ø கீழ்க்கண்ட  பூஞ்சாணக் கொல்லிகளில் ஏதேனும் இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
1.      Thiophanate methyl
2.      Thiophanate methyl + Thiram
3.      Any Triazoles + Paclobutrazol
4.      Chlorothalanil + Strobilurin fungicide
5.      Propiconazole + Iprobenfos
6.      Propiconazole + Thiophanate methyl
7.      Pyraclostrobin + Metiram + Fluzinam  

மேலும், விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் (WhatsApp link) லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வெள்ளி, 17 நவம்பர், 2023

எலுமிச்சை மரங்களில் கோந்து ஏன் வருகிறது...

எலுமிச்சையில் கால் அழுகல்/ கம்மோசிஸ் நோய்

நோய் அறிகுறிகள்:

  • Phytopthora என்றழைக்கப்படும் பூஞ்சாணத்தால் இந்த நோய் தோற்றுவிக்கப்படுகிறது.
  • இந்த நோய் பொதுவாக சற்று வயதான மரங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது.
  • பாதிக்கப்பட்ட செடிகளின் தண்டு, இலை மற்றும் வேரில் நீர்த்த வெளிர் பழுப்பு நிற புண்கள் தோன்றும்.
  • நாளடைவில் தண்டு, வேர் மற்றும் கிளையில் காணப்படும் புண்களில் வெடிப்புகள் (நீள்வாக்கில்) தோன்றும்.
  • இவ்வெடிப்புகளிலிருந்து பழுப்பு நிற கோந்து வெளிவரும்.
  • கிளைகளில் வெளிர் சிகப்பு முதல் பழுப்பு நிற தடித்த கோடுகள் காணப்படும்.
  • வெடித்த இடங்களில் பட்டைகள் உதிர்ந்து பிற பூச்சி மற்றும் நோய் தாக்குதலை ஏற்படுத்துவதால் மரங்கள் ஒடிந்தோ அல்லது அழுகியோ இறக்க நேரிடும்.
  • பூஞ்சாணம் வேர் பகுதியை தாக்கி வேர் பட்டைகளை உதிர செய்தால் இலைகள் மஞ்சளாகி அதிகமாக உதிரும்.

ஏன் ஏற்படுகிறது :

  • எளிதில் தாக்கக்கூடிய இரகங்கள் வேர் செடிகளை பயன்படுத்துதல்.
  • அதிகமாக நீர்பாய்ச்சுதல் (அல்லது) தண்டுகளில் தொடர்ந்து நீர் தேங்குதல்.
  • அதிக காற்று ஈரப்பதம்/ மழை / மண்கடினத்தன்மை
  • வேர் பகுதியில் உப்பு தோன்றுதல் / உப்பு நீரை பயன்படுத்துதல்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  1. அதிக நீர்பாய்ச்சுதலை தவிர்க்கவும்.
  2. உப்பு நீர்/ மண் இருக்கும் இடத்தில் மழை நீரை சேகரித்து பயன்படுத்துதல் உகந்தது.
  3. ஒட்டு இரகங்களை தவிர்த்து நாட்டு இரகத்தை பயிரிடலாம்.
  4. ஒட்டு இரகத்தை பயன்படுத்த விரும்பினால் வேர் செடிகளை தேர்வில் கவனம் தேவை.
  5. கவாத்து செய்வதை தவிர்க்கவும்.
  6. அதிக வெப்பம் தண்டுகளில் படும்போதும் வெடிப்புகள் ஏற்படும். அதுபோன்ற சமயத்தில் தரையிலிருந்து 1-2 அடி உயரத்திற்கு பெயிண்ட் அடிக்கவும்.
  7. அதிக மழை பொழிவு / நீர் தேக்கம் இருக்ககூடிய இடங்களில் வட்ட பாத்தி அமைக்க வேண்டும்.
  8. இப்பூஞ்சாணம் மண்ணில் இருப்பதால் வாய்க்கால் பாசனத்தை தவிர்த்து சொட்டு நீர் பாசனம் உபயோகிக்கலாம்.
  9. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பட்டைகளை நன்றாக சுத்தம் செய்து 1% பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு சுத்தம் செய்து COC/ Bordeaux கலவையை பூசி விட வேண்டும்.
  10. டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் தலா 50 கிராம் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து தொடர்ச்சியாக வேரில் ஊற்றுவதால் இதனை கட்டுப்படுத்தலாம்.
  11. கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றின் கலவையை தண்டு / கிளையில் பூசி விடுதல் மற்றும் வேரில் ஊற்ற வேண்டும். (வெயில் மாதங்களில்)

1.  Fosetyl Aluminium + Chlorpyiphose – 25 g / 10 Lit water

2.  COC-30 g + Chlorpyriphos – 25 ml -/10 lit water

3.  Copper Hydroxite + Chlopyriphos -25 ml/ 10 Lit water

4. Thiophenate Methyl+ Chlorphriphos – 25 ml/ 10 Lit water

 

எலுமிச்சை இலைகளில் பிசுபிசுப்பாக தோன்ற காரணமான சில்லிட் பூச்சி...

சில்லிட் பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்

முன்னுரை:

  1. இளம் மற்றும் முதிர் பூச்சிகள் செடிகளின் தளிர், இலைகள், மொட்டுகள் மற்றும் பிஞ்சுகளில் சாற்றை உறிஞ்சுவதால் ஒழுங்கற்ற, சுருங்கிய மற்றும் மெல்லிய இலைகளை தோற்றுவிக்கிறது.
  2. இளம் பூச்சிகள் நச்சுகளை செலுத்துவதால் இலை, பூ உதிர்தல் மற்றும் நுனி கருகுதல் ஏற்படுகிறது.
  3. இலைகள் மற்றும் கிளைகளில் பிசு பிசுப்பாகி கருப்பு நிற பூஞ்சாண வளர்ச்சி காணப்படும்.
  4. நாளடைவில் மகசூல் மற்றும் தரத்தில் பாதிப்பு ஏற்படும்.
  5. இந்த வகை பூச்சி Greening எனப்படும் பாக்டீரியா நோயை ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்புகிறது.

வாழ்க்கை சுழற்சி :

  • முட்டை – ஆரஞ்சு முதல் மஞ்சள் நிறத்தில் இளம் தளிர்களில்  காணப்படும்.
  • இளம் பூச்சி  – பழுப்பு நிறத்தில் தளிர்ஃ கிளைகளில் காணப்படும்
  • பூச்சி – பட்டாம்பூச்சி பழுப்பு நிறத்தில் பெரிய இறக்கைகளுடன் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • வயலை சுத்தமாக வைத்து கொள்ளுதல் மற்றும் ஊடுபயிராக கருவேப்பிலை பயிரிடுவதை தவிர்க்கவும்.
  • அதிக தலைச்சத்து உரமிடுதல் மற்றும் நீர்பாய்யச்சலை தவிர்க்க வேண்டும்.
  • இயற்கை பூச்சி விழுங்கிகளான
  • Metarhizium anisopliae ஏக்கருக்கு 200 கிராம் தெளிப்பதால் 75% வரை இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
  • கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றினை தெளிக்க வேண்டும்.

1.              5% NSKE or Azadirachtin 1-2 ml / 1 lit Water

2.              Imidacloprid – 1 ml /  Lit of water

3.              Dimethoate – 2.5 ml/ lit of water

4.              Acephate – 2.5 g/ lit of water

5.              Fenpropathrin – 1 ml/ lit of water

6.              Thiamethoxam – 1 g / lit of water

                 7.       Spinetoram – 0.75 -1 ml/ lit of water

வியாழன், 16 நவம்பர், 2023

நெற்பயிரில் துத்தநாக குறைபாடு/ Khaira நோய் மேலாண்மை....

முன்னுரை:

நெற்பயிரில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் Khaira நோய் என்று அழைக்கப்படும் துத்தநாகம் நுண்ணூட்டச்சத்தின் குறைபாடு பொதுவாக காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் நோய் போன்று காட்சியளிப்பதால் இதனை கண்டறிவது சற்று கடினமே. இந்த நுண்ணூட்டச்சத்தின் குறைபாட்டு அறிகுறிகள் ஆரம்ப காலத்தில் பூஞ்சானத்தால் ஏற்படும் நோய் என கருதப்பட்டது. எனவே தான் இது Khaira நோய் என்று அழைக்கப்படுகிறது.

ஏன் இந்த குறைபாடு காணப்படுகிறது?

1. துத்தநாகம் நுண்ணூட்டத்தின் குறைபாட்டால் இதன் அறிகுறிகள் தென்படுகிறது.

2. மண்ணின் கார அமிலத்தன்மை அதிகமாக காணப்படும் களர் அல்லது உவர் நிலங்களில் நெல் சாகுபடி செய்யும் போது.

3. தொடர்ச்சியாக நெல் பயிரை சாகுபடி செய்வதாலும்...

4. நெல் வயலில் தொடர்ச்சியாக நீரை தேக்கி வைப்பதாலும்...

5. அடர் நடவு மேற்கொள்வதாலும், மண்ணில் அல்லது பயிர்களுக்கு அதிக மணிச்சத்து மற்றும் சிலிகான் உரத்தினை இடுவதாலும்...

6. மண்ணில் குறைந்த அளவு சாம்பல் சத்து, மெக்னீசியம் மற்றும் கால்சியம் நிலவும் போதும்...

6. நீரின் அடர்த்தி அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் சாகுபடி மேற்கொள்வதாலும் ஏற்படுகிறது.

குறைபாட்டின்/ நோயின் அறிகுறிகள்:

1. இதன் அறிகுறிகள் நெற்பயிர்கள் தூர் கட்டும் தருணத்தில் தொடங்கி கதிர்கள் வெளிவரும் வரை காணப்படும்.

2. ஆரம்பத்தில் இலைகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் மாறும்.

3. பின்னர் காவி நிற சிறு சிறு புள்ளிகள் இலைகளில் பரவலாக  காணப்படும். நாளடைவில் இது இலை முழுவதும் பரவி இலைகள் பழுப்பு நிறத்தில் மாறிவிடும்.

4. இதனால் அடி இலைகளில் போதுமான பச்சையம் இல்லாததால் உணவு உற்பத்தி பாதித்து வளர்ச்சி குன்றிய செடிகளாக காணப்படும்.

5. தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளின் சல்லி வேர்கள் பாதிப்பு அடைவதுடன் புதிய வெள்ளை உற்பத்தி மிக குறைவாக காணப்படும்.

6.இதனால் போதுமான தூர்கள் வெளி வராமல் வளர்ச்சி குன்றுவதுடன் மகசூல் பாதிப்பு ஏற்படும்.

ftdpf;fg;gl Ntz;bait>>>>>>>>

    Jj;jehfk; Ez;Z}l;l rj;jpd; FiwghL ghf;Bupay; ,iy fUfy; Neha; kw;Wk; Edp fUfy; Neha; Nghd;Nw fhzg;gLk;. vdNt mij Muha;e;J mjw;Nfw;wthW eltbf;if Nkw;nfhs;tJ cfe;jJ.

மேலாண்மை யுக்திகள்:

1. உழவுக்கு முன் 15 டன் மக்கிய தொழு உரம் அல்லது தேவையான அளவு பசுந்தாள் உரம்/கம்போஸ்ட் /மண்புழு உரம் இடவேண்டும்.

2. அடி உரமாக ஏக்கருக்கு 8 கிலோ ஜிங் சல்பேட் இடவும்.

3. மண்ணின் கார அமிலத்தன்மை மற்றும் ஜிங்க் பற்றாக்குறைகளை தாங்கி வளரக்கூடிய ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.

4. தேர்வு செய்த ரகங்கள் அல்லது நாற்றுகளை இரண்டு சதவீத ஜங்க் சல்பேட் கரைசலில் 15 நிமிடம் வைத்திருந்து பின்னர் நடவு மேற்கொள்ளலாம்.

5. மண்ணின் கார அமிலத்தன்மை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தழைச் சத்துக்காக யூரியா இடுவதை தவிர்த்து அம்மோனியம் சல்பேட் இடவும்.

6. நெல் வயலுக்கு காய்ச்சலும் பாய்ச்சலமாக தண்ணீர் விடுவது உகந்தது.

7. ஜிங் சல்பேட் மற்றும் நீர்த்த சுண்ணாம்பு பவுடர் ஆகியவற்றை 1:2 கிலோ என்ற விகிதத்தில் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம். நடவு மேற்கொண்டு 15, 30 மற்றும் 45 நாட்களில் இவற்றை தெளிப்பதால் இப்பற்றாக்குறையை தவிர்க்கலாம்.

புதன், 15 நவம்பர், 2023

பயிர்களில் காணப்படும் எறும்புகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

 

எப்போது எறும்புகள் பயிர்களில் காணப்படுகிறது?

சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, அஸ்வினி, மாவு பூச்சி மற்றும் scale insect பயிர்களை தாக்கும் போது நமது பயிர்களில் எறும்புகள் காணப்படுகிறது. இந்த வகை பூச்சிகள் பயிர்களை தாக்கி அதன் சாற்றை உறிஞ்சுவதால் தேன் போன்ற திரவத்தை சுரக்கிறது. 

இந்த திரவத்தை உண்ண எறும்புகள் கூட்டம் கூட்டமாக செடிகளை வந்தடைகிறது. சாறு உறிஞ்சும் பூச்சிகள் பொதுவாக கோடை காலங்களில் அதிகமாக தாக்கும். இது சுரக்கும் தேன் போன்ற திரவத்தினால் பயிர்களின் இலைகள் மற்றும் காய்களில் கருப்பு நிற பூஞ்சான வளர்ச்சி காண முடிகிறது. இதனால் செடிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி பாதிப்பு அடைவதுடன் மகசூல்களின் தரம் குறைகிறது.

ஏன் எறும்புகளை கட்டுப்படுத்த வேண்டும்?

1. சாறு உறிஞ்சும் பூச்சிகளை தாக்கி அளிக்க  கூடிய  நன்மை செய்யும் பூச்சிகளை இந்த எறும்புகள் அழிக்கிறது.

2.எறும்புகள் காணப்படும் பயிர்களில் நாம் அன்றாட பணிகளை மேற்கொள்வது சற்று கடினம். உதாரணத்திற்கு களை எடுத்தல், மகசூலை அறுவடை செய்தல், உரம் இடுதல் மற்றும் கவாத்து செய்யும் தருணத்தில் இது மனிதர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.


3.சில நேரங்களில் எறும்புகள் சாறு உறிஞ்சும் பூச்சிகளை ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்கு எடுத்துச் சென்று பூச்சி தாக்குதலின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

4.இதனால் பயிர்களின் வளர்ச்சி பாதிப்படைகிறது.

எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

1. சாறு உறிஞ்சும் பூச்சிகளை அழிக்க அல்லது அகற்ற போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்க்கண்ட பொறிகளை பயன்படுத்தி சாறு உறிஞ்சும் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம் அல்லது நாம் ஏற்கனவே பதிவிட்டுள்ள பதிவுகளில் உள்ள இயற்கை/ பூச்சிமருந்துகளை பயன்படுத்தலாம்.

  வெள்ளை ஈ                   - மஞ்சள் ஒட்டுப்பொறி/Acetamprid/Afidopyrofen etc...

   இலைப்பேன்கள்         - ஊதா ஒட்டுப்பொறி/Fibronil etc..

    அஸ்வினி                       - Imidacloprid/Acephate etc...

    பச்சை ஈக்கள்               -Imidacloprid/Acephate/Acetamprid etc..

2. சாறு உறுஞ்சும் பூச்சிகளால் உருவான தேன் போன்ற திரவம் மற்றும் கருப்பு நிற பூஞ்சாணங்களை அகற்ற ஏக்கருக்கு 250 கிராம்  வீதம் மைதா பவுடரை தெளிக்கவும். இது 4-5   நாட்களுக்குப் பிறகு தேன் மற்றும் கருப்பு நிற பூஞ்சானத்தை அகற்றி செடிகளில் இருந்து உதிர்ந்து விடும்.

3. தீவிரமாக பாதிக்கப்பட்ட செடி அல்லது மரங்களில் எறும்புகள் இலைகளை ஒருங்கிணைத்து தனது வாழ்விடத்தை உருவாக்கி இருக்கும். இதனை சேகரித்து அழிப்பது நல்லது.


4. எலுமிச்சை/ நார்த்தை போன்ற சிட்ரிக் அமிலம் உடைய பழங்களின் சாறுகள் பூச்சி விரட்டியாக பயன்படுத்தப்படுகிறது. எனவே இதன் சாற்றை நீரில் கலந்து தெளிப்பதால் எறும்புகளை விரட்டலாம்.

5. எறும்புகள் நிறைய இருப்பின் எலுமிச்சை அல்லது நார்த்தையின் தோள் பகுதியை 15 நிமிடம் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி பின்னர் அவற்றை செடிகளுக்கு தெளிப்பதால் எறும்புகளை கட்டுப்படுத்தலாம்.

6. ஒரு டீ ஸ்பூன் boric அமிலம், பத்து ஸ்பூன் சர்க்கரை உடன் சற்று நீர் கலந்து கொள்ள வேண்டும். இதில் பஞ்சுகளை முக்கி செடிகளுக்கு அருகில் வைப்பதால் எறும்புகள் விரட்டப்படும்.

7. வெதுவெதுப்பான நீரில் சோப்பு கரைசலை தயார் செய்யவும் அதில் சிறிதளவு புதினா இலையில் இருந்து எடுக்கப்பட்ட சாறு அல்லது அதன் எண்ணையை கலந்து தெளிப்பதால் செடிகளில் இருந்து எறும்புகள் விரட்டி அடிக்கப்படுகிறது.

8. கிராம்பு அல்லது லவங்கப்பட்டை இலைகளை சற்று கசக்கி செடிகளில் வைப்பதால் அதிலிருந்து வரும் வாசம் எறும்புகளை விரட்டியடிக்கும்.

9. மிளகுத் தூளை  தண்ணீரில் கலந்து தெளிப்பதாலும் எறும்புகளை செடிகளில் இருந்து விரட்டலாம்.

10. கல் உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைந்து தெளிப்பதால் எறும்புகளை விரட்டலாம் ஆனால் கரைசலின் சதவீதம் சற்று அதிகமானால் செடிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

11. மா செடிகள், கொய்யா கன்றுகள், மாதுளை, பப்பாளி போன்ற இதர பயிர்களில் எறும்புகளை கட்டுப்படுத்த அதன் தண்டுப் பகுதியில் மஞ்சள் ஒட்டுப் பொறியை கட்டுவதால் எறும்புகள் அதனைத் தாண்டி செல்ல முடியாமல் ஒட்டுப் பொறியில் சிக்கி இறந்துவிடும்.

12. பத்து லிட்டர் தண்ணீருக்கு 20 முதல் 25 கிராம் சோப்பை கரைத்து செடிகளை நன்று நனைத்து பிடிப்பதால் சோப்பு கரைசலில் உள்ள பொட்டாசியம் கொழுப்பு அமிலம் எறும்புகளை அழிக்கும் வல்லமை படைத்தது. இதனை தெளிப்பதால் பயிர்களுக்கும்  மனிதர்களுக்கும் எந்த பாதிப்பும் கிடையாது.

13. ஒரு சிறிய கிண்ணத்தில் சமையல் சோடா உடன் சர்க்கரை கலந்து நிலத்தில் அங்கங்கே வைப்பதால் இதை உண்டு எறும்புகள் இறந்துவிடும்.

14. Abamectin/Chlorpyriphos/Permethrin என்ற மருந்தை நீரில் கலந்து தெளிப்பதாலும் எறும்புகளை அழிக்கலாம்.

இது போன்று எண்ணற்ற வழிமுறைகள் எறும்புகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. தேவையின் சூழல் மற்றும் அவசியத்தின் அடிப்படையில் இதனை பயன்படுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

திங்கள், 13 நவம்பர், 2023

சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த சில எளிமையான முறைகள்..,


1.வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்திடவும் இலை பேன்களை கண்காணித்திடவும் மஞ்சள் ஒட்டு பொறி பயன்படுத்தப்படுகிறது... இந்த வகை ஒட்டு பொறிகளை சராசரியாக ஏக்கருக்கு 12 முதல் 15 எண்கள் பயன்படுத்தலாம். ஆனால் பசுமைகுடில் /நிழல் வலை கூடாரம் போன்ற பாதுகாப்பு முறையில் வளர்க்கப்படும் பயிர்களுக்கு ஐந்து மீட்டர்களுக்கு ஒரு மஞ்சள் விட்டு பொறி என்ற விகிதத்தில் பயன்படுத்தலாம்.


இந்தப் பொறிகளை செடிகளின் கிடை கிடைமட்ட அளவில் காற்று வீசும் திசைக்கு எதிராக இருக்கும்படி பொருத்த வேண்டும். இதை நாம் வீட்டிலே தயார் செய்யலாம் சிறிய செவ்வக வடிவ அட்டை/ பிளாஸ்டிக்/ இரும்பு போன்றவற்றில் மஞ்சள் நிற பெயிண்டை நன்றாக பூசி விட்டு அதன் மேல் கிரீஸ்/ஆமணக்கு எண்ணெயுடன் ஏதேனும் மருந்து கலந்து அதன் மேல் தடவி வயலில் ஆங்காங்கே வைப்பதால் இது வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கும்.


2. இதே போன்று நீல நிற ஒட்டு பொறிகள் Thrips எனப்படும் இலை பேன்களை கவர்ந்து அழிக்கும் வல்லமை கொண்டது. இதை சிறப்பாக பயன்படுத்திட ஒட்டுப்பொறிகளை நிலத்தில் நிலவிய பிறகு நீரை நன்றாக ஸ்பிரேயர் மூலம் தெளிக்க வேண்டும் அவ்வாறு தெளிக்கும்போது இந்த இலை பேன் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தாவும் போது ஒட்டுப்பொறியில் சிக்கிக் கொண்டு இறந்து விடும்.


3. கொப்புள வண்டுகளை கவர்ந்திட நீல நிற பக்கெட்டில் நீர் மற்றும் துணி சோப்பு கரைசலை சரிபாதியா கலந்து வைப்பதால் இதில் கொப்புள வண்டுகள் கவர்ந்து அழிக்கப்படுகிறது.


4. வெள்ளை ஈக்கள், இலைப்பேன் மற்றும் சிலந்திப் பேன் போன்ற சாறு உறிஞ்சி பூச்சிகளை கட்டுப்படுத்திட பத்து லிட்டர் தண்ணீருக்கு 25 முதல் 30 ml பசு மாட்டு கோமியம் மற்றும் பத்து முதல் பதினைந்து கிராம் துணி சோப்பு கரைசல் ஆகியவற்றை கலந்து விசைத்தெளிப்பானில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதால் பூச்சிகளின் மூச்சுக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு அவை மயக்கம் அடைந்து செடியில் இருந்து கீழே விழுந்து விடுகிறது.


5. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 முதல் 250 கிராம் கொத்தமல்லி விதைகளை பத்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி அதன் நீரை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து சிலந்திப் பேன் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.


6. 5 கிலோ வேப்ப இலையை நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு மசித்த வேப்ப இலை மற்றும் அதன் சாறுடன் 5 கிலோ நாட்டு பசு கோமியம் மற்றும் 2 கிலோ நாட்டுப் பசு சாணம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு நாள் நொதிக்க விட வேண்டும். இதனை ஒரு ஏக்கருக்கு தேவையான நீரில் கலந்து தெளிப்பதனால் சாறு உறிஞ்சி பூச்சிகள் மற்றும் மாவு பூச்சி முதலியவற்றை கட்டுப்படுத்தலாம்.


7. தலா 2 கிலோ வேப்ப இலை, பப்பாளி இலை, சீதா, கொய்யா மற்றும் மாதுளை இலைகளை நன்றாக இடித்து10 லிட்டர் நாட்டு பசு கோமியத்துடன் கலந்து கொதிக்க வைக்க வேண்டும் பின்னர் இதை வடிகட்டி சாற்றை மட்டும் எடுத்துக் கொண்டு ஏக்கருக்கு ஒரு லிட்டர் விதம் பயன்படுத்தலாம். இது அனைத்து விதமான சாறு உறிஞ்சி பூச்சிகள் மற்றும் புழுக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.


8. கோடை காலங்களில் நிலத்தினை ஒற்றைக் களைப்பை கொண்டு ஆழமாக உழவு செய்வதால் அனைத்து விதமான பூச்சி மற்றும் நோய் காரணிகளை ஏதேனும் ஒரு வாழ் நிலையை ஒழிக்கலாம்.


9. பயிர்களின் மீதங்கள் அல்லது எச்சங்கள் நிலத்திலேயே இட்டு எரிப்பதால் தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சி மற்றும் நோய் காரணிகளை அழிக்கலாம்.


10. பூண்டு அல்லது சின்ன வெங்காயத்தில் இருந்து எடுக்கப்படும் சாற்றைக் கொண்டு அனைத்து விதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் பட்டாம் பூச்சி வகை பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம். இதில் இருந்து வரும் வாசம் பூச்சிகளுக்கு உகந்ததல்ல.


Recent Posts

Popular Posts