google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்: நோய் மேலாண்மை

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

நோய் மேலாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோய் மேலாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

வாழையில் தலைக்கொத்து நோய் மேலாண்மை...

வாழையில் தலைக்கொத்து நோய் மேலாண்மை...

    தலைக்கொத்து நோய் என்பது ஒருவகை வைரஸ் பாதிப்பால் ஏற்படக் கூடியதாகும். இந்த நோய் அஸ்வினி எனப்படும் சாறு உறிஞ்சும் பூச்சிகளினால் அடுத்த அடுத்த செடிகளுக்கு பரப்பப்படுகிறது. இது மட்டுமின்றி பாதிப்படைந்த மரத்திலிருந்து விதை கருணைகளை தேர்வு செய்து நடவு செய்தாலும் நோய் பரவும் தன்மையுடையது.

இதன் அறிகுறிகள்:

  • இந்த வைரஸ் நோய் பாதிப்பின் அறிகுறிகள் மிகத் தெளிவாக இளம் வயது பக்க கன்றுகளில் காண இயலும். 
  • பாதிப்படைந்த பக்கக்கன்றுகளின் வளர்ச்சி தடைபட்டு குன்றி காணப்படும். 
  • தண்டுப் பகுதியின் நுனியில் வரக்கூடிய இலைகளுக்கு இடைப்பட்ட இடைவெளி மிகவும் குறைந்து காணப்படும்.
  • நுனியில் வரக்கூடிய இலைகள் நன்றாக விரியாமலும் அகலம் குறைந்தும் நீள்வாக்கில் காணப்படும். 
  • இலையின் விளிம்புகளில் மஞ்சள் நிற மாற்றத்தை காண இயலும். 
  • அதேபோன்று இலை விளிம்புகள் சீராக இல்லாமல் மேடும் பள்ளமுமாக வளமுமாக பலமாக இருப்பது போன்ற அமைப்பு காணப்படும். 
  • இளம் செடிகளில் இலைகள் வளைந்தும் ஒழுங்கற்ற வடிவிலும் காணப்படும். அது மட்டும் இன்றி இலை காம்பு மற்றும் இலையின் அடி புறத்தில் மெல்லிய சீரற்ற கோடுகள் காணப்படும். 

முதிர்ந்த மரங்களில் காணப்படும் அறிகுறிகள்...

  • நன்கு வளர்ந்த மரங்களில் தலைக்கொத்து நோய் அறிகுறி தெளிவாக தெரியாது. 
  • இலையின் நடுநரம்பு மற்றும் அடிப்பகுதியில் புள்ளி மற்றும் கோடுகள் சீரற்ற பரவலாக காணப்படும்.
  • நடு நரம்பிற்கும் இலை விளிம்புகளும் இணையும் இடத்தில் J வடிவத்தில் கோடுகள் இலையின் அடி புறத்தில் காணப்படும். 
  • அதேபோன்று இலை காம்பு மற்றும் பூங்கொத்து போன்ற பகுதிகளிலும் கோடுகள் காணப்படும் நாளடைவில் இந்த கோடுகள் சிகப்பு நிறமாக மாற்றம் அடையலாம்.
  • முதிர்ந்த மரத்தில் இருந்து வெளிவரக்கூடிய வாழை பூ மற்றும் தார் மிக மிக சிறிதாகவும் வளைந்து நெளிந்தும் ஒழுங்கற்ற வடிவில் காணப்படும். 
  • சில நேரங்களில் பாதிப்படைந்த மரங்கள் பூ அல்லது காய்கள் விடாமலேயே இறந்து விடுகிறது. 

இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தலைக்கொத்து நோய் தாக்குதல் காணப்படும் வாழை தோப்புகளில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் விதை கட்டைகள் தேர்வு செய்ய வேண்டாம். 
  • வயலை சுத்தமாக பராமரித்துக் கொள்ள வேண்டும். 
  • ஊடுபயிராக சாறு உறிஞ்சி பூச்சிகள் அதிகம் தாக்கும் பயிர்களை பயிரிட வேண்டாம். 
  • அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அந்த மரத்தை முழுமையாக அகற்றி வயலில் இருந்து வெளியேற்றவும். 
  • அஸ்வினி போன்ற மற்ற வகை சாறு உறிஞ்சி பூச்சிகள் தாக்காத வண்ணம் பயிரை பராமரிக்க வேண்டும்.
  • ஒருவேளை சார் உறிஞ்சி பூச்சிகள் இருந்தால் உடனடியாக இயற்கை முறையில் அல்லது ரசாயன மருந்துகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்த வேண்டும்.
  • பயிரின் ஆரம்ப காலத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை சாறு உறிஞ்சி பூச்சிகளை கட்டுப்படுத்த Verticillum lecanii தெளித்து வர வேண்டும்.
  • பூச்சி தாக்குதல் அதிகம் இருக்கும் நேரத்தில் கீழ்க்கண்ட ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 
  1. Imidacloprid - 10 மில்லி 
  2. Fibronil -15-25 மில்லி 
  3. Thiamethaxam- 10 கிராம்
  4. Dimethoate -15-25 மில்லி 
  5. Acephate-10 கிராம்
இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறவும்....

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

பப்பாளியில் வளைப்புள்ளி வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பப்பாளி இரண்டு முதல் மூன்று மாத வயதுடைய பயிராக சாகுபடியில் உள்ளது. பப்பாளி பயிரின் மகசூலை பாதிக்க கூடிய பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் இருந்தாலும் வைரஸ் நோய் தாக்குதல் மிகப்பெரிய அளவில் மகசூல் இழப்பீடு மற்றும் பயிர் இறத்தல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதில் பப்பாளி வளைப்புள்ளி வைரஸ் நோய் மிக முக்கியமானது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்: 

  • பயிரின் வயது, தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் வைரஸின் வீரிய தன்மை ஆகியவற்றை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். 
  • ஆரம்ப நிலையில் இலைகளில் கரும்பு பச்சை நிறத்தில் கொப்புளங்கள் பரவலாக காணப்படும்.
  • நாளடைவில் இலைகளில் பல வண்ண நிறத்தில் புள்ளிகள் காணப்படும். 
  • இலைப் பகுதியில் வளர்ச்சி தடைப்பட்டு, இலைகள் அகற்ற அமைப்புடன் இல்லாமல் நீள்வாக்கில் வளரும். 
  • இலை காம்புகள் அளவிற்கு அதிகமாக வளர்ந்து நீண்டு காணப்படும்.
  • இலைகளில் தேமல் அறிகுறிகள் அதிகமாக தென்படும், நாளடைவில் இதில் பழுப்பு நிற புள்ளிகள் தென்பட ஆரம்பிக்கும்.
  • இதனால் ஒட்டுமொத்த பயிரின் வளர்ச்சி தடைப்பட்டு குன்றி காணப்படும். 
  • பயிரின் தண்டுப் பகுதி மற்றும் இலை காம்புகளில் நீர்த்த புள்ளிகள் மற்றும் கோடுகள் காணப்படும். 
  • காய்களில் நீர்த்த  வளையங்கள் காணப்படும்.
  • தீவிர நிலையின் போது இலைகள் மற்றும் பழங்கள் ஒழுங்கற்ற வடிவில் மாற்றம் அடைவதை காண இயலும்.

பரவும் விதம்: 

  • அஸ்வினி எனப்படும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இளம் செடிகளில் சாற்றை உறிஞ்சி நொடிப்பொழுதில் மற்ற செடிகளுக்கு பரப்புகிறது. 
  • தர்பூசணி முலாம்பழம் வெள்ளரி மற்றும் பரங்கி வகை பயிர்களிலும் இந்த வகை வைரஸ் நோய் தாக்குதலை காண இயலும். 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்த வகை வைரஸ் விதை மூலமாக பரவும் அபாயம் உள்ளதால் நோய் தாக்குதல் அல்லாத விதைகளை தேர்வு செய்வது மிக முக்கியம். 
  • வளைப்புள்ளி வைரஸ் நோய்க்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்கள் அல்லது வீரிய ஓட்டு ரகங்கள் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு பின்னர் சாகுபடி செய்யலாம்.
  • தொடர்ச்சியாக ஒரே வயலில் பப்பாளி சாகுபடி செய்வதை தவிர்க்கலாம். 
  • வெள்ளரி குடும்பத்தில் இருக்கும் மற்ற பயிர்களை பயிர் செய்த வயலில் பப்பாளி நடவு செய்வதை தவிர்க்கலாம். 
  • நடவு செய்வதற்கு முன்பதாக வயலை சுற்றி இரண்டு அல்லது மூன்று வரிசையில் சோளம் பயிரிடலாம்.
  • அஸ்வினி அதிகம் தென்படும் பருவத்தில் நடவு செய்வதை தவிர்க்கலாம். 
  • களை மேலாண்மை மிகவும் முக்கியம் ஏனெனில் அஸ்வினி களைச் செடிகளில் உயிர் வாழ்ந்து பயிரைத்தாக்கும்.
  • தொடர்ச்சியாக வயலை ஆய்வு செய்து நோய் தாக்குதல் உள்ளதா என்பதை காணவும். தாக்குதலின் அறிகுறிகள் தென்படும் தருணத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • தழைச்சத்து அதிகம் கொடுப்பதை தவிர்த்து இதர ஊட்டச்சத்துக்களை இயற்கை வழி முறையில் கொடுத்து பயிர்களை எதிர்ப்பு திறன் உடையதாக மாற்றலாம்.
  • ஆரம்ப நிலையில் இருந்தே சாறு உறிஞ்சி பூச்சியை கட்டுப்படுத்தும் Verticillum lecanii மற்றும் தேமோர் கரைசல், வேப்ப எண்ணெய், அக்னி அஸ்திரம், வசம்பு கரைசல், 3g போன்றவற்றை தெளிப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் செடிகளை நெருங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளலாம். 
  • ரசாயன முறையில் அஸ்வினியை கட்டுப்படுத்த கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் பயன்படுத்தி தெளிக்கலாம்.
  • Imidacloprid - 10 மில்லி.
  • Thiamethaxam - 10 கிராம்.
  • Monocrotophos- 30-40 மில்லி
  • Profenaphos - 30-40 மில்லி
  • Lambada cychlothrin - 25 milli
  • Dimethoate - 25 மில்லி.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வியாழன், 1 ஆகஸ்ட், 2024

வாழையில் மொகோ/பாக்டீரியல் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • வாழை சாகுபடியில் பூஞ்சானத்தால் ஏற்படக்கூடிய பணமா வாடல் நோய் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் அதே போன்று சில அறிகுறிகளை பாக்டீரியா வாடல் நோயும் ஏற்படுத்தி விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் வாழை மரங்கள் இறக்கவும் காரணமாக திகழ்கிறது.
  • இந்த பாக்டீரியல் நோயானது வாழை மற்றும் வாழை குடும்பத்தைச் சார்ந்த இதர பயிர்களையும் பொதுவாக தாக்குகிறது.பயிரின் அனைத்து நிலைகளிலும் இந்த நோய் தாக்குதல் காணப்பட்டாலும் இளம் பருவ வாழை மரங்களை அதிகம் தாக்குகிறது.

பரவும் விதம்: 

இந்த பாக்டீரியா பாதிக்கப்பட்ட பயிர் வாயிலாக இதர பயிர், மண் மற்றும் சென்றடைகிறது. அங்கிருந்து வாய்க்கால் வழி நீர் பாசனம் மற்றும் அன்றாட பண்ணைப் பணிகள் வாயிலாக இதர பயிர்களுக்கு பரவுகிறது.

நோயின் பிரதான அறிகுறிகள்:


  • அடி இலைகள் வெளிர் பச்சை நிறம் முதல் மஞ்சள் நிறமாக மாற்றம் அடையும். சில நேரங்களில் இலைகள் மஞ்சள் நிறம் மாறாமலும் இருக்கும்.
  • இலைகளின் காம்பு பகுதியில் வெடிப்புகள் அல்லது பிளவுகள் ஏற்பட்டு செடியை ஒட்டி தொங்கும். நாளடைவில் அடுத்தடுத்த இலைகளுக்கு இவ்விதமான அறிகுறிகள் பரவ ஆரம்பிக்கும்.
  • வாழை மரத்தின் தண்டுப் பகுதியில் பழுப்பு நிற கோடுகள் அல்லது திட்டுக்கள் காணப்படலாம்.வாழை மரத்தின் தண்டுப் பகுதி அல்லது கிழங்கு பகுதியை குறுக்கு நெடுக்காக வெட்டி பார்த்தால் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறத்தில் நிற மாற்றம் அடைந்திருக்கும். 
  • அதாவது பயிர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நீரை எடுத்துச் செல்லக் கூடிய திசுக்கள் பாதிப்பதால் இவ்வாறான அறிகுறிகள் தென்படுகிறது.
  • ஆண் மலர் பாகங்கள் திடீரென கருப்பு நிறமாக மாறி உதிர ஆரம்பிக்கும். வாழைத்தாரின் காம்பு பகுதியை வெட்டி பார்த்தாலும் கருப்பு நிற மாற்றத்தை காணலாம்.
  • பாதிக்கப்பட்ட மரத்திலிருந்து உற்பத்தி செய்யக்கூடிய காய்கள் வளைந்து நெளிந்து வெம்பியது போன்ற காட்சி அளிக்கும். 
  • இந்த காய்கள் அல்லது பழங்களை உடைத்துப் பார்த்தால் அழுகிய நிறமாற்றம் இருக்கும். தாரில் உள்ள காய்கள் வெவ்வேறு நேரங்களில் பழுக்க ஆரம்பிக்கும் 
  • நோயின் தாக்குதல் தீவிரமடையும் பொழுது செடிகள் இறந்துவிட அதிக வாய்ப்புகள் உள்ளது.

நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • தேர்வு செய்யப்படும் விதைக் கிழங்குகள் தரமானதாகவும் நோயால் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.
  • பாக்டீரியல் வாடல் நோய்க்கு எதிராக வளரும் தன்மை கொண்ட பூவன், மோந்தன் போன்ற ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்யலாம். 
  • ஒரே வயலில் மீண்டும் மீண்டும் வாழை சாகுபடி செய்வதை தவிர்ப்பது நல்லது.
  • நடவு செய்வதற்கு முன்பதாக உயிர் பூஞ்சான கொல்லிகள் அல்லது இரசாயன மருந்துகளை பயன்படுத்தி கிழங்குகளை நேர்த்தி செய்து நடவு செய்யலாம்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். 
  • நீர் பாய்ச்சுதலை முறைப்படுத்தி காய்ச்சலும் பாய்ச்சலும் ஆக நீர் விட வேண்டும். 
  • பெரும்பான்மையாக இந்த நோயானது நீர்ப்பாசனம் வழியாக பரவுவதால் சொட்டுநீர் பாசனம் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. 
  • நோய் தாக்குதலை ஏற்படுத்தும் பாக்டீரியாவானது வயலில் அல்லது பயிர் கழிவுகளில் சுமார் 18 மாதம் முதல் 20 மாதங்கள் வரை உயிருடன் இருப்பதால் பயிர் சுழற்சி அதற்கேற்றவாறு பின்பற்றலாம்.
  • பயிர்களில் காயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் அடித் தண்டு மற்றும் தண்டுப் பகுதிகளில்.
  • நோய் பரவுதலை கட்டுப்படுத்த வேர்ப்பகுதியில் காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற ரசாயன மருந்தை வேர்ப்பகுதியில் ஊற்றலாம்.

இது விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வெள்ளி, 19 ஜூலை, 2024

சாமந்தி பயிரில் பூ கருகல் (Botrytis blight) நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • ஆடி மாதத்தில் நடவு செய்யப்படும் காய்கள் மற்றும் பூக்களுக்கு அறுவடை தருணத்தில் நல்ல விலை கிடைக்கும் என்பது பொதுவான கருத்து அதனால் தமிழ்நாட்டில் பரவலாக காய்கறிகள் மற்றும் பூ பயிர்கள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • தற்போது சாகுபடியில் இருக்கும் சாமந்தி பூக்களில் பல்வேறு விதமான பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்படுகிறது. அதில் குறிப்பிட்டு கூறக்கூடிய நோயாக Botrytis எனப்படும் பூ கருகல் நோய். ஏனெனில் இது நேரடியாக பூக்களை பாதித்து உடனடியாக பூக்களின் தரத்தை குறைப்பதால் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
  • Botrytis எனப்படும் பூஞசானத்தால் ஏற்படக்கூடிய இந்த நோயானது கிரே மோல்ட் (Gray mold) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோயானது பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பூ பயிர்களை தாக்கும் வல்லமை படைத்தது. உதாரணத்திற்கு செவ்வந்தி, சாமந்தி, ரோஸ், துளிப் மற்றும் பல பூ பயிர்களின் வணிக ரீதியாக தேவைப்படும் பகுதியை பாதித்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

நோயின் அறிகுறிகள்: 


  • பூ இதழ்களில் பழுப்பு/ காவி நிற புள்ளிகள் ஆரம்பத்தில் காணப்படும்.
  • நாளடைவில் இந்த புள்ளிகள் விரிவடைந்து கருகல் போன்று காணப்படும்.
  • இதன் அறிகுறி மற்ற இதழ்களுக்கும் பரவி பூக்களை முழுவதும் பாதித்துவிடும். 
  • பின்னாளில் அழுகல் ஏற்பட்டு உருமாற்றம் ஏற்பட்டு இதழ்கள் உதிரும்.
  • தீவிர தாக்குதலின் போது இதன் அறிகுறிகள் மொட்டுகள், இலை மற்றும் தண்டுப் பகுதியிலும் காணப்படும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாம்பல் நிற பூஞ்சான வளர்ச்சியை காண இயலும்.

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை: 

  • தொடர்ச்சியான மழைப்பொழிவு, தூறல், பனிப்பொழிவு மற்றும் மேக மூட்டமான தட்பவெப்ப சூழ்நிலை.
  • அதிகளவு நீர் பாய்ச்சுதல் மற்றும் வடிகால் வசதி இல்லாமல் இருத்தல். 
  • நெருங்கிய நடவு 
  • பூக்கும் தருணத்தில் தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்துவது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • பூக்கும் தருணம் பருவ மழைக்கு இணையாக வராத அளவிற்கு நடவு மேற்கொள்ளும்.
  • மேட்டுப் பாத்தி அமைத்து நல்ல வடிகால் வசதியுடன் சாகுபடி செய்ய வேண்டும். 
  • அடி உரமாக பயன்படுத்தும் தொழு உரத்துடன் ஏக்கருக்கு தலா 1.5 கிலோ Trichoderma மற்றும் Pseudomonas கலந்து ஊட்டமேற்றி இட வேண்டும்.
  • போதுமான பயிர் இடைவெளி இருக்க வேண்டும் அப்போதுதான் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.
  • மாதம் ஒருமுறை அல்லது மழைப்பொழிவு காலத்தில் மாதம் இருமுறை என ஏக்கருக்கு இரண்டு லிட்டர் Trichoderma vridae பாசன நீர் வழியாக கொடுக்க வேண்டும். 
  • வாரம் ஒரு முறை Bacillus subtilis/ Pseudomonas fluorescence இலை வழியாக நன்கு தெளிக்க வேண்டும்.
  • மழைப்பொழிவு காலத்தில் ஏக்கருக்கு 50 கிலோ அமோனியம் சல்பேட் மற்றும் 500 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு கலந்து மண்ணில் இட வேண்டும். 
  • பாதிக்கப்பட்ட பூக்கள் அல்லது செடிகளை முழுமையாக அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.
  • பயிர்கள் பூக்கும் தருணத்தில் இருந்து தெளிப்பு நீர் பாசன வழியாக நீர் விடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 
  • பயிர்கள் ஈரப்பதத்துடன் இருக்கும் தருணத்தில் வயலில் எவ்வித பணியையும் மேற்கொள்ளக்கூடாது.
  • வயலில் களைகள் அல்லது இதர குப்பைகள் இல்லாதவாறு சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • தழைச்சத்து உரம் அதிகம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பொட்டாசியம், போரான், மக்னீசியம் மற்றும் சிலிக்கான் ஊட்டச்சத்துக்கள் சரிவிகித அளவில் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும்.
  • தொடர்ச்சியான மழை அல்லது பனிப்பொழிவு நேரத்தில் பயிர்களுக்கு வெப்பநிலையை ஏற்படுத்தக்கூடிய ரசாயன மருந்துகளை தெளிக்கலாம்.
  • மாலை நேரத்தில் மருந்துகளோ அல்லது நீரில் கரையும் உரத்தினையோ தெளிக்க கூடாது. ஏனெனில் இது இரவு முழுவதும் ஈரப்பதத்தை ஏற்படுத்தி நோய் தாக்குதலை ஊக்குவிக்கும். காலை நேரத்தில் தெளிப்பதால் வெப்பநிலை காரணமாக ஈரப்பதம் நீங்கிவிடும்.
  • நாற்றுகளை இயற்கை வழி பூஞ்சான கொல்லி மற்றும் உயிர் உரம் பயன்படுத்தி நேர்த்தி செய்து நடவு செய்யலாம். அல்லது Carbendazim+ Mancozeb என்ற ரசாயன மருந்தை பயன்படுத்தியும் நேர்த்தி செய்யலாம்.
  • நோய் தாக்குதலின் தீவிரம் அதிகமாக காணப்படும் தருணத்தில் இது கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம். (கொடுக்கப்பட்டுள்ள அளவு 10 லிட்டர் தண்ணீருக்கு)

Captan -25 கிராம் 

Zineb- 25 கிராம்

Carbendazim+ Mancozeb- 25 கிராம்

Chlorothaonil- 15 கிராம்

Thiophenate methyl - 15-20 கிராம்

Azoxystrobin+Mancozeb - 10 மில்லி

இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

ஞாயிறு, 7 ஜூலை, 2024

வாழையில் மஞ்சள் மற்றும் கருப்பு இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • வாழை சாகுபடியில் இலைப் பகுதியை பாதிக்க கூடிய பல்வேறு நோய்களில் பிரதான நோயாக சிகடோகா இலைப்புள்ளி நோய் திகழ்கிறது. இந்த நோய் பூஞ்சானம் இரண்டு வகையான அறிகுறிகளை பயிர்களில் தோற்றுவிக்கிறது. 
  • நோய் அறிகுறியை அடிப்படையாகக் கொண்டு இதனை மஞ்சள் மற்றும் கருப்பு சிகடோகா என்று கூறுவார்கள். பாதிப்பின் தன்மையை பொறுத்து சராசரியாக 50% மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துகிறது. இது மட்டும் இன்றி வாழைத் தார்களின் தரத்தில் குறைபாடு ஏற்படுகிறது.

நோயின் அறிகுறிகள்: 
மஞ்சள் சிகடோகா:

  • வெளிர் மஞ்சள் முதல் பச்சை நிற புள்ளி அல்லது கோடுகள் இலையின் மேற்புறத்தில் காணப்படும். 
  • படிப்படியாக இந்தப் புள்ளி அல்லது கோடுகளின் அகலம் மற்றும் நீளம் பெரிதாகி புண்கள் போன்று கருப்பு முதல் பழுப்பு நிற நடுப்பகுதியை கொண்டிருக்கும் அதனைச் சுற்றி மஞ்சள் வளையம் காணப்படும்.
  • பின்பு புண்களின் நடுப்பகுதியில் உள்ள திசுக்கள் காய்ந்து பழுப்பு நிறத்தில் மாற்றம் அடைந்து கருப்பு நிற வளையத்துடன் காணப்படும்.

கருப்பு சிகடோகா:

  • வெள்ளை அல்லது வெளிர் பழுப்பு நிற புள்ளிகள் அல்லது கோடுகள் இலையின் அடிப்புறத்தில் காணப்படும். 
  • நாளடைவில் இதன் நிலம் மற்றும் அகலம் அதிகரித்து புண்களாக மாறும். 
  • பின்னர் புண்களின் நடுப்பகுதி கருப்பு நிறத்துடனும் அதனைச் சுற்றி மஞ்சள் நிற வளையம் காணப்படும்.
  • தீவிர நிலையில் புண்களின் நடுப்பகுதி வெள்ளை முதல் வெளிர் நிறத்திலும் அதனை சுற்றி மஞ்சள் நிறமும் காணப்படும்.

அனைத்து அறிகுறிகளும் ஆரம்பத்தில் இளம் இலைகளில் இருந்து பின்னர் முதிர்ந்த இலைகளுக்கு பரவும்.மஞ்சள் நிற சிகடோகா இலைப்புள்ளி நோயை விட கருப்பு நிற சிகடோகா நோய் மிக தீவிரமானது. இதனால் செடிகளின் உணவு உற்பத்தி தரும் குறைந்து மகசூல் இழப்பீடு கண்டிப்பாக ஏற்படும்.

காய்கள் முதிர்ச்சி அடையும் முன்னரே பழுக்க ஆரம்பிக்கும் இதனால் காய்களின் தரம் குறைகிறது. வாழை தார்களில் உள்ள காய்கள் சீரற்ற முறையில் பழுப்பதால் தாரை விற்பனை செய்வதில் பின்னடைவு ஏற்படும்.

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை: 

  • தொடர்ச்சியான ஈரப்பதம் பனிப்பொழிவு, அதிக வெப்பநிலை மற்றும் காற்று ஈரப்பதம், இலைகளில் தொடர்ச்சியான ஈரப்பதம் இருத்தல்.
  • முறையான பராமரிப்பு இல்லாதது 
  • போதுமான வடிகால் வசதி இன்மை 
  • ஊட்டச்சத்தை பற்றாக்குறை குறிப்பாக பொட்டாசியம் 
  • நோய் தாக்குதலுக்கு உகந்த ரகங்களை சாகுபடி செய்தல் உதாரணத்திற்கு கேவண்டிஸ் மற்றும் ரோபஸ்டா

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • நோய் எதிர்ப்பு திறன் உடைய ரகம் அல்லது வீரிய ஓட்டு ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
  • நல்ல வடிகால் வசதி உடைய மண் மற்றும் நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். 
  • அடர் நடவு மேற்கொள்வதை தவிர்க்கவும் ஏனெனில் இது நோய் தாக்குதலுக்கு சாதகமான தட்பவெட்ப சூழ்நிலையை உருவாக்கும். 
  • பக்கக் கன்றுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும் ஒன்று அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பக்கக் கன்றுகள் இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு நோய் தாக்குதல் எளிதில் ஏற்படும்.
  • வயலில் முந்தைய பயிர்களின் எச்சம் மற்றும் களைகள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும்.
  • சரிவிகித ஊட்டச்சத்து மேலாண்மை இன்றியமையாததாகும். குறிப்பாக தழைச்சத்து, பொட்டாசியம், போரான், மாங்கனீஸ் மற்றும் இரும்பு.
  • நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட இலைகளை அப்புறப் படுத்தலாம். அதாவது 20 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட இலையை முழுமையாக அகற்றலாம்.
  • அதற்கும் குறைவான தாக்குதல் இருக்கும் குறிப்பிட்ட இலை பகுதியை மட்டும் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • காற்று ஈரப்பதம் நோய் தாக்குதல் மற்றும் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதால் அதனை குறைக்க சொட்டு நீர் பாசனம் அமைத்தல், இரு வரிசைகளில் உள்ள மரத்தின் இலைகள் ஒன்றுடன் ஒன்று தொடாமல் இருக்கும்படி இலைகளை அறுத்து விடுதல் மற்றும் களைகள் இல்லாமல் பராமரித்தல் அவசியமாகும்.
  • ஆரம்ப நிலை தாக்குதலின் போது 10 லிட்டர் தண்ணீருக்கு Pseudomonas fluorescence மற்றும் bacillus subtillis ஆகியவற்றைத் தலா 50 மில்லி கலந்து இலை வழியாக தெளிக்கலாம்.
  • அதே போன்று 10 லிட்டர் தண்ணீருக்கு தலா 75 மில்லி Trichoderma viride மற்றும் bacillus subtillis கலந்து வேர்ப்பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறையை வாரம் ஒரு முறை என நோயின் தீவிரம் குறையும் வரை பின்பற்ற வேண்டும்.
  • ரசாயன முறையில் நோயை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். 

  • Copper oxychloride -25 கிராம் 
  • Copper hydroxide- 10 கிராம் 
  • Chlorothaonil- 25 கிராம்
  • Propiconazole - 10 மில்லி
  • Merriam+ pyroclostrobin - 30-40 கிராம் 
  • Hexaconazole+ captan- 20 கிராம்
  • Tebuconazole Trifloxystrobin - 10 கிராம் 
  • Tebuconazole+sulphur -25 கிராம்
  • Fluopyram+Tebuconazole - 10-12 மில்லி
  • Fluxapyraxad + pyroclostrobin - 4 மில்லி

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.



வெள்ளி, 5 ஜூலை, 2024

எலுமிச்சையில் சூனியக்காரர்களின்(Witchesbroom) துடைப்பம் நோய் மேலாண்மை

முன்னுரை:

  • ஆங்கிலத்தில் Witches broom என்று அழைக்கப்படும் நோயினை தமிழில் சூனியக்காரர்களின் துடைப்பம் என்று அழைப்பார்கள். இந்த நோயானது பைட்டோபிளாஸ்மா எனப்படும் உயிரினத்தால் ஏற்படுகிறது. 
  • பிரதானமாக எலுமிச்சை சாகுபடி செய்யப்படும் மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் பரவலாக இதன் தாக்குதல் தற்பொழுதும் காணப்படுகிறது.

நோயின் அறிகுறிகள்:

  • மரத்தின் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு கிளை பகுதியின் நுனியில் அதிக பக்க கிளைகள் காணப்படும். 
  • இந்த பக்க கிளைகளில் தோன்றக்கூடிய இலைகள் வெளிர் பச்சை முதல் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும். 
  • இந்த பகுதியில் காணப்படும் பக்க கிளைகள் குறைந்த கணு இடைவெளி கொண்டிருக்கும். 
  • இந்தக் கிளையின் அடி புரத்தில் உள்ள இலை மற்றும் கிளை பகுதியில் காய்ந்து காணப்படும். 
  • இதனை பார்க்கும் பொழுது துடைப்பம் போன்று காட்சியளிக்கும் எனவே தான் இந்த நோயை சூனியக்காரர்களின் துடைப்பம் என்று அழைக்கிறார்கள்.
  • நாளடைவில் இந்த பகுதியில் காணப்படும் இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறி உதிர்ந்து, பின் கருகல் நோயாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது.
  • இவ்வாறாக அறிகுறிகளை தோற்றுவிக்கும் கிளைப் பகுதியில் எந்த வித பூ அல்லது காய்கள் தோன்றாது.
  • நோயின் அறிகுறிகள் தென்படும் மரங்கள் சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு இறந்துவிடும் அபாயமும் இதில் உள்ளது. 

பரவும் விதம்: 

இந்த நோயானது ஒட்டு செடிகளில் அதிகம் காணப்படுவதற்கு காரணம் பிரதானமாக ஒட்டுக்கட்டுதல் மூலம் பரவுகிறது. அதாவது உணவு பாதை வழியாக பரவுகிறது. 

இதைத் தவிர சாறு உறிஞ்சும் பூச்சான பச்சை ஈக்கள் மற்றும் சில்லிட் மூலமும் பரவும் தன்மை உடையது. 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • எலுமிச்சை செடிகளில் ஒட்டுக்கட்டி பயன்படுத்துவதை தவிர்க்கலாம். 
  • ஒட்டுக் கட்டுதலுக்கு பயன்படுத்தப்படும் தாய் மற்றும் வேர் செடிகளை நன்கு ஆய்வு செய்து ஃபைட்டோபிளாஸ்மா நோய் தாக்காத மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும் ஏனெனில் வயலில் இருக்கும் வயதான/ பாதிக்கப்பட்ட செடிகள் மற்றும் களைகள், நோய் அல்லது வைரஸ் நோயை பரப்பும் பூச்சிகளின் வாழ்விடமாக இருக்கலாம்.
  • நோயைப் பரப்ப கூடிய சாறு உறிஞ்சி பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை வழி திரவங்கள் அல்லது ரசாயன திரவங்களை தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.
  • மரங்களைப் பராமரிப்பதில் அதிக கவனம் தேவை எனவே பின் கருகல் நோயைக் கட்டுப்படுத்த நாம் எடுக்கும் நடவடிக்கை இதற்கும் பின்பற்ற வேண்டும் அதைப் படிப்பதற்கு கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும். https://www.xn--2023-usl0k8ahcj0im72acc.com/2024/07/blog-post_4.html
  • பூச்சிகளின் ஆரம்ப நிலை தாக்குதல் போது இயற்கை வழி பூச்சிக் கொல்லியான Verticillum lecanii ஐ 10 லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் என கலந்து வாரம் ஒருமுறை தெளித்து வர வேண்டும். 
  • அல்லது கீழ்க்கண்ட ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பச்சை ஈக்களை கட்டுப்படுத்த தெளிக்கலாம்.
  • Imidacloprid, Acetamaprid, spiromesifen, phenthoate, broflonilide, flonicamid etc...

வியாழன், 4 ஜூலை, 2024

எலுமிச்சையில் நுனி கருகல்/ பின் கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • தமிழகத்தில் நாளுக்கு நாள் எலுமிச்சை சாகுபடி அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதற்குப் பிரதான காரணமாக மாறுபட்ட தட்பவெப்ப நிலை மற்றும் புளிப்பு வகை சார்ந்த இதர பழ சாகுபடி குறைந்து வருவதே ஆகும். 
  • எலுமிச்சை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் அறிந்த பிரதான நோயாக நுனி கருகல் நோய் திகழ்கிறது. இதை ஆங்கிலத்தில் Die back/ Wither dip/Anthracnose/ Citrus Decline நோய் என்று அழைப்பார்கள். 
  • இந்த நோயானது பூஞ்சை தாக்குதல்,பூச்சி தாக்குதல், முறையற்ற பராமரிப்பு, மாறுபட்ட தட்பவெப்ப சூழ்நிலை, ஊட்டச்சத்து பற்றாக்குறை என பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய ஒரு வகை நோய் அல்லது சீர்குலைவு எனலாம்.
  • இந்த நோயினால் சுமார் 20 முதல் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • மரத்தின் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு கிளைகளில் உள்ள நுனி இலைகள் வாடி பழுப்பு நிறம் அடைந்து பின்னர் உதிர ஆரம்பிக்கும்.
  • அடுத்த கட்டமாக இலை உதிர்வு நுனியில் இருந்து கிளையின் அடிப்புரத்தை நோக்கி பரவும். எனவே தான் இதனை பின் கருகல் நோய் என்றும் கூறுவார்கள்.
  • தண்டுப் பகுதியில் மரப்பட்டைகள் உதிர்தல் பிசின் வெளி வருதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். 
  • பாதிக்கப்பட்ட கிளையில் கருப்பு நிற பூஞ்சான வளர்ச்சியை காண இயலும். 

  • நாளடைவில் பாதிக்கப்பட்ட கிளைகள் முற்றிலும் காய்ந்து விடும்.
  • நோய் தாக்குதலினால் செடிகள் அல்லது மரங்கள் இறப்பது மிகவும் அரிது. ஆனால் ஒரு சில கிளைகள் காய்ந்து வளர்ச்சி குன்றி காணப்படும். 
  • இதனால் மகசூல் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.
  • இந்த வகை நோய் இளம் மரங்களில் வேகமாக பரவும் தன்மை உடையது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • காய்ந்து போன கிளைப் பகுதியை அகற்ற வேண்டும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் குறிப்பிட்ட கிளை பகுதி முற்றிலும் காய்ந்து இருக்க வேண்டும். கிளையின் தண்டுப் பகுதியில் பச்சையம் இருக்கும் போது அதை அகற்றினால் நோய் பரவுதல் காணப்படும்.

  • இது செடியின் காய்ப்பு திறனை பெரிய அளவில் பாதிக்கும். 
  • நோய் எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.

  • மற்ற நோய் மற்றும் பூஞ்சை தாக்குதலுக்கு செடிகள் ஏதுவாக அமையும். எனவே குறிப்பிட்ட கிளை பகுதியை அகற்றிய பிறகு அதில் நோய் பரவாமல் இருப்பதற்கு காப்பராக்சி குளோரைடு என்ற மருந்தை தடவி விட வேண்டும். 
  • மரங்களுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும். 
  • மரம் ஒன்றிற்கு 15 முதல் 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரம், 100 கிராம் Trichoderma, 100 கிராம் VAM மற்றும் 100 கிராம் Humic அமிலம் ஆகியவற்றை மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இட்டு நன்கு நீர் பாய்ச்ச வேண்டும். 
  • ரசாயன உரங்களாக தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகியவற்றை மரம் ஒன்றிற்கு 250:150:200 கிராம் என்ற அளவில் வருடத்திற்கு நான்கு முறை கொடுக்க வேண்டும். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் மாதம் ஒரு முறை வேர் வழியாகவும் இலை வழியாகவும் ஊட்டச்சத்துக் கொடுக்க வேண்டும்.
  • நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் கண்டிப்பாக வட்டப்பாத்தி இட்டு அதன் நீர் பாய்ச்ச வேண்டும். 
  • அளவுக்கு அதிகமாக நீர் பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும். 
  • நாம் பாய்ச்சும் நீர் தண்டுப் பகுதியை தொடாமல் இருக்க மண் அணைக்க வேண்டும்.
  • இதர நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாதவாறு செடிகளை பராமரிக்க வேண்டும்.
  • மரங்களுக்கு தேவையான அளவு நுண்ணூட்ட சத்து கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக காப்பர், துத்தநாகம், மாங்கனிசு, இரும்பு மற்றும் மாலிப்டினம். 
  • நுண்ணூட்ட ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் வருடம் இரண்டு முறை இடவேண்டும்.
  • பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மாதம் ஒரு முறை காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு என்ற மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 25 அல்லது 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • இயற்கை வழி திரவங்களை பயன்படுத்த 10 லிட்டர் தண்ணீருக்கு தலா 50 கிராம் Pseudomonas மற்றும் Bacillus ஆகியவற்றைக் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


புதன், 26 ஜூன், 2024

சின்ன வெங்காயத்தில் நுனி கருகல் நோயை கட்டுப்படுத்த வழிமுறைகள்:

முன்னுரை:

  • சமையலறையின் அரசி என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயம் தற்போது தமிழ்நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் 20 முதல் 30 நாட்கள் வயது உடைய பயிராகவும், ஒரு சில இடங்களில் நடவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிரின் ஆரம்ப நிலையில் தற்போது நிலவும் மந்தமான தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக சில இடங்களில் நுனி கருகல் காணப்படுகிறது.
  • Stemphylium எனப்படும் ஒரு வகை பூஞ்சானத்தால் ஏற்படக்கூடிய இந்த நோயானது Stemphylium இலை கருகல் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.

பூஞ்சானத்தின் வாழ்க்கை சுழற்சி:

  • நோயை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சையானது மண், முந்தைய பயிர்களின் எச்சம், களைகள் மற்றும் இதர குப்பைகளில் நீண்ட காலமாக உறக்க நிலையில் இருக்கும். சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை மற்றும் பயிர் நிலவும் பொழுது பூஞ்சையானது பயிர்களில் நோயை ஏற்படுத்துகிறது. 
  • நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல் மற்றும் பண்ணை பணிகளால் பயிர்களில் ஏற்படும் காயங்கள் வழியாக பூஞ்சானமானது நோயை ஏற்படுகிறது.

நோய் பரவும் விதம்: 

தாக்கப்பட்ட பயிரிலிருந்து மற்ற பயிர்களுக்கு பூஞ்சானமானது காற்று மற்றும் பாசனம் வழியாக பரவுகிறது. இது மட்டுமின்றி மாலை நேரத்தில் செடிகளை ஈரப்பதம் இருக்கும் பொழுது நாம் பண்ணைப் பணிகளை மேற்கொள்வதால் மேலும் நோய் பூஞ்சானம் பரவும்.

சாதகமான சூழ்நிலை: 

  • மிதமான வெப்பநிலை 
  • அதிக காற்று ஈரப்பதம் 
  • மழைப்பொழிவு அல்லது அதிகை மண் ஈரப்பதம் 
  • அதிக பனிப்பொழிவு 
  • நெருங்கிய நடவு மேற்கொள்ளுதல்

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • நீள் வட்ட வடிவில் வெள்ளை முதல் பழுப்பு நிற புண்கள் இலையில் காணப்படும். 
  • ஆரம்ப கட்டத்தில் செடியின் அடிப்பகுதியில் உள்ள இலைகளில் தான் அறிகுறிகள் தென்படும். 
  • நாளடைவில் புண்கள் நீர்த்த வெளிர் சிகப்பு முதல் கருப்பு நிறத்தில் மாற்றம் அடையும். 
  • சாதகமான சூழ்நிலை நிலவும் பொழுது அடுத்தடுத்த இலைகளுக்கு நோய் பரவுதல் காணப்படும். 
  • நோய் தாக்குதல் தீவிரமடையும் பொழுது புண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் அதன் அளவு அதிகரித்து ஒன்றுடன் ஒன்று சிதைந்து கருகி காணப்படும். 
  • புண்கள் தென்பட்ட இடத்தில் தாள்கள் எளிதில் உடைந்து தொங்கும். 
  • இதனால் இலைகளின் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு மகசூல் அளவு குறையும்.

  • கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • நோயால் பாதிக்கப்படாத விதை கிழங்குகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
  • நடவு செய்வதற்கு முன்பதாக உயிர் பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தி நேர்த்தி செய்து பின்பு நடவு செய்ய வேண்டும். 
  • இந்த நோய்க்கு எதிராக எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை பார்த்து அதனை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். 
  • தொடர்ச்சியாக ஒரே வயலில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதை தவிர்க்கலாம். 
  • தொடர்ச்சியாக இந்த நோயின் பாதிப்புகள் தென்படும் வயலில் பயிர் சுழற்சி அல்லது மாற்று பயிரிடுதல் மிகவும் உகந்தது.
  • நடவு செய்யும்போது வழக்கத்திற்கு மாறாக சற்று அதிக இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
  • வயலில் போதுமான அளவு வடிகால் வசதி இருக்க வேண்டும். அதாவது எந்த ஒரு சூழ்நிலையிலும் தொடர்ச்சியாக மண் ஈரப்பதம் இருக்கக் கூடாது.
  • அதிக அளவு தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.
  • களைகள் அதிகம் வளராமல் கட்டுப்படுத்த வேண்டும் மேலும் முந்தைய பயிர்களின் குப்பைகள் கண்டிப்பாக வயலில் இருக்கக் கூடாது.
  • நோயின் அறிகுறிகள் பரவலாக தென்படும் போது தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • மேலும் நோயின் தாக்குதல் தென்படும் வேளையில் ஏக்கருக்கு 25 கிலோ சல்பேட் இட வேண்டும் இது நோய் பரவுதல் கட்டுப்படுத்தும். 
  • பனிப்பொழிவு அல்லது மழை பெய்த நேரங்களில் காலை நேரத்தில் பண்ணைப் பணிகளை செய்வதை தவிர்க்கவும்.
  • Trichoderma harzianum எனும் பூஞ்சான கொல்லி இந்த நோய்க்கு எதிராக நல்ல செயல் திறன் கொண்டுள்ளதால் நோயின் ஆரம்ப காலத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் என்ற அளவில் கலந்து மாலை வேளையில் செடிகள் நனையும்படி தெளிக்க வேண்டும். 
  • இந்த வழிமுறையை 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை என நோய் தாக்குதலின் ஆரம்ப காலத்தில் தெளிப்பதால் தான் நல்ல பலன் கிடைக்கும்.
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளில் ஏதேனும் இரண்டை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.(பத்து லிட்டர் தண்ணீர் காண அளவு)
  • Carbendazim+ mancozeb - 25 கிராம்
  • Azoxystrobin+ mancozeb - 50 கிராம்
  • Zineb- 25 கிராம்
  • Tebuconazole - 10-25 மில்லி
  • Azoxystrobin+Difenaconazole - 10 மில்லி
  • Tebuconazole+ Trifloxystrobin - 10 கிராம்
  • Mettiram+ pyraclostrbin - 50 கிராம்

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்..


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வெள்ளி, 7 ஜூன், 2024

மரவள்ளி பயிரை தொடர் மழையில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்

முன்னுரை:

  • மரவள்ளி பயிரானது எந்த அளவிற்கு தண்ணீரை விரும்புகிறதோ அதே அளவிற்கு அதிக அளவு தண்ணீர் விடும் பொழுது பாதிப்புக்கு உள்ளாகிறது. மேலும் இது தரைமட்டத்திற்கு கீழ் இருக்கக்கூடிய கிழங்கு பகுதியை மகசூலாக அடிப்படையாகக்  கொண்டுள்ளதால் தொடர்ச்சியாக ஈரப்பதம் இருத்தல் அல்லது அதிக நீர் தேங்குவது பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • தொடர்ச்சியாக அதிக ஈரப்பதம் அல்லது நீர் தேங்கி இருப்பதால் போதுமான காற்று மண்ணிற்கு உள் அதாவது வேர் பகுதிக்கு செல்வதில்லை. இதனால் மண்ணில் இருக்கும் காற்றை வேர்கள் விரைந்து பயன்படுத்துவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இவ்வாறு சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நீடிக்கும் பொழுது அழுகல் நோய், வளர்ச்சி தடைபடுதல், ஊட்டச்சத்து கிடைக்காமல் இருத்தல், பயிர் வாடுதல் போன்ற அறிகுறிகளை நாம் காண இயலும்.
  • பொதுவாக எந்த ஒரு பயிரிலும் மண்ணில் நீர் தேங்கி இருப்பதால் ஏற்படும் அறிகுறிகள் இரண்டு முதல் மூன்று நாட்களில் தென்படும். மரவள்ளி பயிரை பொருத்தவரையில் வயலில் நீர் தேங்கி இருந்தால் மூன்று முதல் நான்காவது நாட்களில் அதன் அறிகுறிகள் நம் கண்களுக்கு வெளிப்படையாக தெரியவரும். அழுகல் நோய் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகிய இரண்டும் தான் இதில் கவனிக்கப்பட வேண்டியவை அவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

அழுகல் நோய்:

  • ஒன்று முதல் மூன்று மாத பயிரில், விதைக்குச்சி அல்லது வேர் பகுதி அல்லது கழுத்து பகுதி ஆகிய இடங்களில் அழுகல் தென்படும். 
  • இதனால் ஒழுங்கற்ற இலை வளர்ச்சி மற்றும் இலை மஞ்சள் நிறமாதல் நாளடைவில் செடிகள் இறந்துவிடும்.
  • மூன்று முதல் ஐந்து மாதங்கள் வயதுடைய பயிர்களில் அடி இலைகள் மஞ்சள் நிறமாதல், இலைகள் வாடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். 
  • ஆறு மாதங்களுக்கு மேல் வயது உடைய பயிர்களில் ஆரம்ப வளர்ச்சியில் இருக்கும் கிழங்குகள் பாதிக்கப்பட்டு அழுகல் ஏற்படும் இதனால் இலைப் பகுதியில் அறிகுறிகள் தென்படும். கழுத்துப் பகுதியிலும் அழுகல் நோய் ஒரு சில இடங்களில் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. 
  • பொதுவாக அழுகல், இந்த பயிரில் பல வகை பூஞ்சனங்களால் தாக்குவதால் ஏற்படுகிறது எனவே இதனை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஊட்டச்சத்து பற்றாக்குறைகள்: 

  • நமது குழுவில் நான் பலமுறை கூறியது உண்டு எந்த ஒரு பயிரிலும் வேர் பகுதிக்கு காற்றோட்டம் இல்லை எனில் கண்டிப்பாக ஊட்டச்சத்து பற்றாக்குறையின் அறிகுறிகள் காணப்படும் என. 
  • மரவள்ளியில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் மெக்னீசியம் ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறை செடிகளின் அடி இலைகளில் தென்படும். உதாரணத்திற்கு அடி இலைகளில் திட்டு திட்டாக மஞ்சள் நிறம் மாற்றம் காணப்பட்டால் அது மெக்னீசியம் பற்றாக்குறை. 
  • கால்சியம், மாங்கனிசு, போரான், இரும்பு, காப்பர், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறை அறிகுறிகள் செடிகளின் நுனிப்பகுதியில் உள்ள இலைகளில் காணப்படும்.
  • இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நடப்பு கோடை மழையில் இருந்து பயிர்களை காக்க நாம் எந்த வகையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிந்து கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • இதைத் தவிர பல்வேறு வழிகளிலும் பயிர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது உதாரணத்திற்கு பயிர்கள் ஒரு புறமாக சாய்தல், இதர நோய் மற்றும் பூச்சி தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளது. 

இதிலிருந்து பயிர்களை காக்க பொதுவான சில வழிமுறைகள்: 

  • ரசாயன உரம் இடுவதை தவிர்க்கவும்.
  • இயற்கை வழி தயாரிப்பு பொருட்களான பஞ்சகாவியா, மீன் அமிலம், அமிர்த கரைசல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
  • நல்ல வடிகால் வசதி ஏற்படுத்தவும்.
  • முன்னெச்சரிக்கையாக அழுகல் நோயை கட்டுப்படுத்த Trichoderma மற்றும் Pseudomonas ஆகியவற்றை ஏக்கருக்கு தலா 1.5 லிட்டர் நீரில் விடலாம் அல்லது வேர் பகுதியில் ஊற்றலாம்.
  • பயிர்களுக்கும் அதன் வேர்களுக்கும் வெப்பத்தை அளிப்பதற்கு சல்பேட் உரம் இடலாம்.
  • மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை வயலில் இருந்து அகற்றலாம்.

  • தொழு உரம் அல்லது மண்புழு உரத்துடன் இயற்கை வழி பூஞ்சான மற்றும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்தி ஊட்டமேற்றி இடலாம்.
  • தொடர்ச்சியாக அதிக ஈரப்பதம் அல்லது நீர்த்தேக்கம் இருக்கும் சூழ்நிலையில் VAM நன்மை செய்யும் பூஞ்சானம் சிறப்பாக செயல்பட்டு ஒருவித அமினோ அமிலங்களை பயிர்களுக்கு அளித்து பயிர் செழிப்பாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே பருவ மழைக்கு முன்னதாக ஏக்கருக்கு நான்கு கிலோ வீதம் VAM இடுவது மிகவும் உகந்தது.

  • அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இரசாயன  மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை வேர்ப்பகுதியில் ஊற்றலாம். Carbendazim + Mancozeb / COC /Copper hydroxide / Metalaxyl + Mancozeb / Thiophanate methyl / Fosetyl Aluminum etc..

  • மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு நமது குழுவில் இணைந்து பயன்படுத்தலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


புதன், 29 மே, 2024

மிளகாயில் தவளை கண் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை: 

  • மிளகாய் ஒரு காய்கறி பயிராக இருந்தாலும் பெரும்பான்மையாக இது நறுமண பொருளாகவும் உணவுகளில் சுவையை மேம்படுத்தவும் மற்றும் பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டுள்ளதால் இதனை Wonder Spice  என்பார்கள். 
  • உலக அளவில் இந்தியா மிளகாய் உற்பத்தி, நுகர்வு மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. இதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் நிறைந்துள்ளது குறிப்பாக வைட்டமின் ஏ,பி, சி, இ, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, காப்பர், சோடியம் மற்றும் பல நிறைந்துள்ளது. 
  • இந்தியாவில் வருடத்திற்கு சராசரியாக 4300 முதல் 4700 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆந்திர பிரதேசம் இதில் முதலிடம் வகிக்கிறது.

நோய் பூஞ்சை விபரம்:

  • இந்நோய் Cercospora எனப்படும் பூஞ்சனத்தால் ஏற்படுகிறது. 
  • மிதமான வெப்பநிலை, அதிகமான காற்று ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு காலங்கள் இதன் தாக்குதலுக்கு உகந்ததாகும். 
  • பிரதானமாக விதை மூலமாக பரவக்கூடியது. 
  • இருப்பினும் மண் மற்றும் பயிர் கழிவுகளில் சுமார் ஒரு வருடம் வரை உயிர் வாழும் திறன் உடையது.
  • காற்று, மழை, வாய்க்கால் வழி நீர் பாசனம் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகளினால் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பூஞ்சானம் பரவுகிறது. 

நோயின் அறிகுறிகள்: 


  • பயிரின் ஆரம்ப நிலை முதல் அறுவடை முடியும் தருணம் வரை இந்நோய் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
  • இதன் அறிகுறிகள் இலையின் இருபுறத்திலும் காணப்படும். 
  • ஆரம்ப நிலையில் இலையில் சிறிய வட்ட வடிவிலான செம்பழுப்பு நிறப்பு புள்ளிகள் காணப்படும்.
  • புள்ளிகளின் மையப்பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும். இதனைச் சுற்றி வெளிர் பழுப்பு நிற வளையம் காணப்படும்.இதனை பார்ப்பதற்கு தவளையின் கண் போன்று காணப்படும். 
  • நாளடைவில் புள்ளிகள் சற்று பெரிதாகி அதன் நடுப்பகுதியில் இருக்கும் சாம்பல் நிற பகுதி காய்ந்து உதிர்வதால் இலைகளில் துளைகள் காணப்படும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாக மாற்ற முடிந்து வாடி உதிர்வதால் காய் மற்றும் பழங்கள் வெப்பநிலைக்கு உட்படும்.
  • நோய் தீவிரமடையும் பொழுது இதன் அறிகுறி இதைக்காம்பு பூவிதல் மற்றும் தண்டு பகுதியில் நீள்வட்ட வடிவில் காணப்படும்.
  • பழங்களிலும் இதன் அறிகுறிகள் தென்படுவதால் மகசூல் இழப்பீடு மற்றும் தரம் குறைகிறது.
  • இதன் உச்சபட்ச அறிகுறியாக தண்டு அடி அழுகல் நோய் காணப்படும். 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்நோய் விதை மூலமாக பரவக்கூடியதால் தேர்வு செய்யப்படும் விதை சான்றிதழ் பெற்றதாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும்.
  • நோய்க்கு எதிர்ப்பு திறன் உடைய ரகம் அல்லது வீரிய ஓட்டு ரகத்தினை தேர்வு செய்யலாம்.
  • போதுமான பயிர் இடைவெளி இருப்பதால் சாதகமான தட்பவெட்ப சூழ்நிலையை குறைக்கலாம். 
  • தொடர்ச்சியான மண் ஈரப்பதம் இல்லாமல் அமைய மேட்டுப்பாத்திகள் அமைத்து சொட்டுநீர் பாசனம் வழியாக பயிரிடலாம். 
  • வயலில் தோன்றும் களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.
  • தொடர்ச்சியாக ஒரே வயதில் மிளகாய் அல்லது குடைமிளகாய் சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும். 
  • சாகுபடி செய்த பிறகு பயிரின் எச்சங்களை முழுமையாக நிலத்தில் இருந்து அகற்ற வேண்டும்.
  • தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்த வேண்டும். 
  • பனிப்பொழிவு அல்லது மழை காரணங்களால் செடிகள் ஈரப்பதமாக இருக்கும் பொழுது நிலத்திற்குள் நடந்து பண்ணைப் பணிகளை செய்யக்கூடாது இதன் மூலமும் நோய் பூஞ்சை பரவும்.
  • நாட்டு ரகங்களை பயிரிடும் பொழுது விதைகளை நேர்த்தி செய்து பயிரிட வேண்டும். 
  • நோயின் ஆரம்ப நிலையில் இயற்கை வழி பூஞ்சான கொல்லிகளை ஏழு நாட்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக தெளித்து வேண்டும்.
  • Trichoderma viride, Trichoderma harzianum, Pseudomonas மற்றும் Bacillus subtilis போன்ற இயற்கை பூஞ்சான கொல்லிகள் இந்த நோயை கட்டுப்படுத்த பெரிய அளவில் உதவி புரிகிறது.
  • இதனைத் தவிர இயற்கை வழி தயாரிப்பு திரவங்களான பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், ஈயம் கரைசல், போன்றவற்றையும் நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.
  • ரசாயன மருந்துகளை பயன்படுத்த விரும்பினால் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். 
  • Carbendazim - 2-4 கி/1 லிட்டர் தண்ணீருக்கு 
  • Carbendazim+Mancozeb - 2-3 கி/1 லிட்டர் தண்ணீருக்கு
  • Hexaconazole - 1 மி/1 லிட்டர் தண்ணீருக்கு 
  •  Chlorothaonil- 2 கி/1 லிட்டர் தண்ணீருக்கு
  • COC -2.5 கி/1லிட்டர் தண்ணீருக்கு

  • Tebuconazole -1.5 மி/ 1 லிட்டர் தண்ணீருக்கு
  • Azoxystrobin+Tebuconazole -1.5 மி/1 லிட்டர் தண்ணீருக்கு 
  • Pyraclostrbin+Tebuconazole -1-2 மி/1 லிட்டர் தண்ணீருக்கு 
  • Mettiram+ pyraclostrbin - 3 கி/1 லிட்டர் தண்ணீருக்கு 

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

 
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA



செவ்வாய், 7 மே, 2024

மாம்பழத்தில் ஆந்த்ரக்னோஸ் (Anthracnose) எனப்படும் விதைப்புள்ளி நோய் மேலாண்மை

முன்னுரை:

  • உலக அளவில் மிக முக்கிய நோயாக கருதப்படும் ஆந்த்ரக்னோஸ் எனப்படும் விதைப்புள்ளி நோய் colletotrichum என்ற பூஞ்சானத்தால் ஏற்படுகிறது. 
  • மண்ணில் வாழும் இந்த வகை பூஞ்சானம் மிதமான வெப்பநிலை, அதிக காற்று ஈரப்பதம், குறைந்த மண்ணின் கார அமிலத்தன்மை என பல்வேறு சாதகமான சூழ்நிலை நிலவும் பொழுது பயிர்களை தாக்குகிறது.

நோயின் அறிகுறிகள்:

திங்கள், 18 மார்ச், 2024

வாழையில் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்



கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • ஒரே வயலில் தொடர்ச்சியாக வாழை சாகுபடி செய்வதை தவிர்க்கலாம். குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வாழையை தவிர்த்து விட்டு வேறு ஏதேனும் பயிர் செய்யலாம்.
  • கோடை காலத்தின் போது வயலை நன்கு ஆழமாக உழவு செய்து வயலில் உறக்கத்தில் இருக்கும்(40 வருடம் வரை கூட) பூஞ்சானங்களை அழிக்க முயற்சிக்கலாம்.
  • வாடல் நோய் தாக்குதலுக்கு மிகவும் உகந்த ரகங்களான கற்பூரவள்ளி, ரஸ்தாலி, சென்கதலி,மொந்தன், கதலி, பச்சலாடன் மற்றும் பல ரகங்கள் உள்ளன அவற்றை தொடர்ந்து பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • பனாமா வாடல் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை தேர்வு செய்து நடவு செய்யலாம். உதாரணத்திற்கு பூவன், நேந்திரன், சக்கை மற்றும் ரோபஸ்டா.
  • வெளியில் இருந்து கொண்டு வரப்படும் வாழை கட்டை அல்லது கன்றுகள்  நோய் தாக்க வண்ணம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • இல்லையெனில் வாழை கட்டை அல்லது கன்றுகளை Pseudomonas, Trichoderma மற்றும் Bacillus பயன்படுத்தி நேர்த்தி செய்து பின்பு நடவு செய்ய வேண்டும்.
  • இரசாயன பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தியும் விதை நேர்த்தி செய்யலாம் பயன்படுத்தலாம். இதற்கு  கிழங்கு பகுதியை நன்றாக சுத்தம் செய்து அதனை களிமண் கரைசலில் நனைத்து பின்பு அதன் மேல் Carbofuran குருணையை தூவி விட்டு பின்பு நடவு செய்ய வேண்டும்.
  • கட்டை அல்லது கிழங்குகளை நடவு செய்யும் போது குழி ஒன்றிற்கு ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதால் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதுடன் நூற் புழுக்களையும் கட்டுப்படுத்தலாம்.
  • இந்த பூஞ்சானம் மண்ணில் நீண்ட நாட்கள் இருப்பதால் வாய்க்கால் பாசனத்தை தவிர்த்து விட்டு சொட்டுநீர் பாசன முறையை பின்பற்றுவதால் நோய் தாக்குதல் மற்றும் பரவுதலை கட்டுக்குள் வைக்கலாம்.
  • நடவு செய்யும் முன்னதாக இடப்படும் அடி உரத்தின் போது, போதுமான நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்துடன் ஏக்கருக்கு தலா 3 கிலோ Pseudomonas, Trichoderma மற்றும் Bacillus ஆகிய உயிர் பூஞ்சான கொல்லியை தொழு உரத்துடன் ஊட்டமேற்றி இட வேண்டும்.
  • நடவு செய்யப்பட்ட வயலில் பண்ணை பணிகளை மேற்கொள்ளும் போது செடிகளின் வேர்கள் பாதிப்படையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • வாழைக் கட்டை அல்லது கன்றுகளை நடவு செய்த 45 முதல் 60 நாட்களுக்கு ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை அதிகம் இடுவதால் அதன் உள்ள மூலக்கூறுகள் வேர் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது இதனால் செடிகள் நோய் எதிர்ப்பு தன்மையை பெறுகிறது.
  • களைகள் மற்றும் முந்தைய பயிர்களின் எச்சங்கள் வயலில் இல்லாதவாறு சுத்தமாக பராமரிக்கவும்.
  • பண்ணை கருவிகளை பயன்படுத்தும் முன்பு நன்றாக சுத்தம் செய்து பிறகு பயன்படுத்த வேண்டும்.
  • நோய் தாக்குதலை தவிர்க்க Pseudomonas, Trichoderma மற்றும் Bacillus ஆகிய உயிர் பூஞ்சான கொல்லியை தலா 25 கிராம் என்ற அளவில் எடுத்துக்கொண்டு பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும்.
  • மேற்கண்ட வழிமுறையை நான்காம் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில்.
  • வாழை மரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி செய்வதால் நோய் பரவுதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் தகவலுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

Recent Posts

Popular Posts